கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

பெனெல்லி பிஎன்125 பைக் முதல்முறையாக இந்திய மண்ணில் தரிசனம் கொடுத்துள்ளது. கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியான இந்த புதிய பைக் மாடலின் ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

இந்திய பைக் மார்க்கெட்டில் பிரிமீயம் பைக் மாடல்களை இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் இம்பீரியல் 400 பைக்தான் தற்போது விலை குறைவான மாடலாக விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

இந்தியாவில் தனது வர்த்தகத்தை மிக வலுவாக கொண்டு செல்லும் முனைப்பில் பெனெல்லி ஈடுபட்டுள்ளது. இதற்காக, விலை குறைவான புதிய பைக் மாடலை களமிறக்கும் திட்டத்தை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

ஆம். பெனெல்லி நிறுவனத்தின் BN125 பைக் முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் கொடுத்துள்ளது. சூப்பர் பைக் இறக்குமதியில் பிரபலமான கவுல்சன் ரேஸிங் நிறுவனம் இந்த படங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த படங்களுடன் கூடிய செய்தியை 91 வீல்ஸ் தளம் வெளியிட்டு இருக்கிறது.

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

பெனெல்லி நிறுவனத்திற்காக கவுல்சன் ரேஸிங் நிறுவனம் இறக்குமதி செய்துள்ளதா என்பது குறித்த தகவல் இல்லை. அப்படி இருந்தால், சாலை சோதனைங்களுக்காக இந்த பைக் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

பெனெல்லி பிஎன்125 பைக் மாடலானது நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரகத்தை சேர்ந்தது. இந்த புதிய பைக் மாடல் கேடிஎம் 125 ட்யூக் பைக் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்படும்.

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

புதிய பெனெல்லி பிஎன்125 பைக்கில் 125 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 11.1 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

கேடிஎம் 125 ட்யூக் பைக்கைவிட இது குறைவானதாக இருக்கிறது. ஏனெனில், இந்த பைக் 142 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்பீடோமீட்டர், டாக்கோமீட்டர் மற்றும் அனைத்து விபரங்களையும் இதில் பெற முடியும்.

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

இந்த பைக்கின் முன்புறத்தில் 110 மிமீ டயரும், பின்சக்கரத்தில் 130 மிமீ அகலமுடைய டயரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

இந்த பைக்கில் ஃப்ரேம் சிவப்பு நிற பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. கவர்ச்சியான புகைப்போக்கி குழல் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் 125 ட்யூக் பைக்கிற்கு போட்டியாக வருகிறது புதிய பெனெல்லி பைக்?

கேடிஎம் 125 ட்யூக் பைக் மார்க்கெட்டை குறிவைத்து வர இருக்கும் இந்த புதிய பைக் மாடல் ரூ.1.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். இந்த பைக் இந்தியா கொண்டு வரப்படுவது குறித்து இதுவரை பெனெல்லி நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
The Benelli BN125 has spotted in India for first time. If it is launched here, it will compete with KTM 125 Duke directly.
Story first published: Friday, January 17, 2020, 15:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X