அடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை களமிறக்கும் பெனெல்லி!

அடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது பெனெல்லி. அவை எந்தெந்த மாடல்கள் என்ற விபரங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

அடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை களமிறக்கும் பெனெல்லி!

இந்தியாவின் பிரிமீயம் வகை பைக் மார்க்கெட்டில் பெனெல்லி நிறுவனம் மிக முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. குறிப்பாக, ஆரம்ப மற்றும் நடுத்தர வகை பிரிமீயம் பைக் சந்தையில் பெனெல்லி தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

அடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை களமிறக்கும் பெனெல்லி!

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததுடன் சேர்த்து கொரோனா பிரச்னையும் சேர்ந்து கொண்டது. இதனால், பல வாகன நிறுவனங்கள் பிஎஸ்-6 வாகனங்களை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை களமிறக்கும் பெனெல்லி!

அந்த வகையில், பெனெல்லி நிறுவனமும் பிஎஸ்-6 மாடல்களின் அறிமுகத்தை தாமதப்படுத்தி உள்ளது. அந்நிறுவனம் தற்போது இம்பீரியல் 400 பைக்கின் பிஎஸ்6 மாடலை மட்டுமே விற்பனையில் வைத்துள்ளது. பிற அனைத்து மாடல்களையும் பிஎஸ்6 தரத்துடன் அறிமுகம் செய்யும் நிலை உள்ளது.

அடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை களமிறக்கும் பெனெல்லி!

இந்த சூழலில், அடுத்தடுத்து 7 பிஎஸ்6 பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பெனெல்லி திட்டமிட்டுள்ளதாக பெனெல்லி தெரிவித்துள்ளது. இதன்படி, டிஆர்கே502, டிஆர்கே502எக்ஸ், லியோன்சினோ 500, 302எஸ், 302ஆர், லியோன்சினோ 250 மற்றும் டிஎன்டி600ஐ ஆகிய பைக் மாடல்கள் பிஎஸ்6 தர எஞ்சினுடன் வர இருக்கின்றன.

அடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை களமிறக்கும் பெனெல்லி!

அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த ஏழு புதிய பைக்குகளும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிடும். இதைத்தொடர்ந்து, அடுத்து டிஆர்கே802 பைக் அடுத்த ஆண்டு துவக்கத்தில் எட்டாவது மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதும் தெரிய வந்துள்ளது.

அடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை களமிறக்கும் பெனெல்லி!

இதனிடையே, இந்தியாவில் விற்பனையில் உள்ள ஒரே பிஎஸ்-6 பெனெல்லி மாடலான இம்பீரியல் 400 பைக் ராயல் என்ஃபீல்டு பைக் மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 374 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 20.7 பிஎச்பி பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அடுத்தடுத்து 7 பிஎஸ்-6 பைக் மாடல்களை களமிறக்கும் பெனெல்லி!

பெனெல்லி இன்ம்பீரியல் 400 பைக் மாடலுக்கு ரூ.1.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.6,000 முன்பணத்துடன் புக்கிங் ஏற்கப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகள் அல்லது வரம்பு இல்லாத கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டியும் கொடுக்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Italian-based two-wheeler manufacturer, Benelli is yet to update their motorcycle line-up to meet BS6 emission standards. The only motorcycle to have received the BS6 update from the company is the Imperiale 400.
Story first published: Thursday, August 20, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X