பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை கணிசமாக உயர்கிறது!

பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட பெனெல்லி இம்பீரியல் 400 பைக் மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த பைக்கின் விலை கணிசமாக உயர்த்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை கணிசமாக உயர்கிறது!

நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மிக வலுவான வர்த்தகத்தை பெற்றிருக்கிறது. குறிப்பாக, ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த மாடலை குறிவைத்து பல புதிய மாடல்கள் வந்த வண்ணம் உள்ளன.

பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை கணிசமாக உயர்கிறது!

அதில், குறிப்பிடத்தக்க மாடலாக பெனெல்லி நிறுவனத்தின் இம்பீரியல் 400 மாடல் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக பெனெல்லி இம்பீரியல் 400 பைக் மேம்படுத்தப்படுகிறது.

MOST READ: கொரோனாவை ஓட ஓட விரட்டும் நேரத்தில் கேரளாவிற்கு திடீர் சிக்கல்... என்னனு தெரிஞ்சா ஷாக் ஆய்ருவீங்க...

பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை கணிசமாக உயர்கிறது!

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில் 374 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.7 பிஎச்பி பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சினுடன் பிஎஸ்6 மாடலாக தரம் உயர்த்தப்பட இருக்கிறது.

பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை கணிசமாக உயர்கிறது!

இந்த பைக்கில் பெரிய கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர் மற்றும் ஆக்சிஜென் சென்சார் ஆகியவற்றுடன் இந்த எஞ்சின் வர இருப்பதால், சக்தியை வெளிப்படுத்தும் திறனில் சிறிதளவு குறைவாக இருக்கலாம் என்று தெரிகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தக்க வைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

MOST READ: அமெரிக்கரின் கண்களுக்கு தெய்வமாக மாறிய இந்திய பெண்.. படையப்பாவில்கூட இத்தனை கார்களை பார்க்கவில்லை..!

பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை கணிசமாக உயர்கிறது!

பாரம்பரிய மோட்டார்சைக்கிள்களுக்கு உரிய டிசைன் அம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கிறது. வட்ட வடிவிலான ஹெட்லைட், ஸ்போக்ஸ் சக்கரங்கள், செமி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 19 அங்குல சக்கரங்கள், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை கணிசமாக உயர்கிறது!

இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக அளிக்கப்படும். எஞ்சினை தவிர்த்து, பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்று தெரிகிறது.

பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மட்டும் சிறிய மாற்றங்களுடன் வர இருக்கிறது. இந்த நிலையில், பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடலின் விலை ரூ.40,000 வரை அதிகரிக்கப்பட உள்ளதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

MOST READ: பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்

பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை கணிசமாக உயர்கிறது!

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் பிஎஸ்4 மாடல் ரூ.1.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், பிஎஸ்6 மாடலுக்கு ரூ.2.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை கணிசமாக உயர்கிறது!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் பிஎஸ்6 மாடல் ரூ.1.57 லட்சம் முதல் ரூ.1.81 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில், பெனெல்லி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை ரூ.40,000 அதிகரிக்கப்பட்டால், அது வாடிக்கையாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமையும்.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
According to report, Benelli Imperiale 400 BS6 model will be launched in India soon with hefty price hike.
Story first published: Saturday, April 25, 2020, 6:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X