ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி!

வாடிக்கையாளர்களை தன் வசம் கவருவதற்காக பெனெல்லி நிறுவனம் மிக குறைவான இஎம்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி!

நமது நாட்டின் பாரம்பரியமிக்க இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டிற்கு போட்டியளிக்கும் வகையில் இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பெனெல்லி நிறுவனம் அதன் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது.

ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி!

அந்தவகையில், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் பைக்கிற்கு போட்டியளிக்கும் விதமாக இந்நிறுவனம் மிக சமீபத்தில் இம்பீரியல் 400 எனும் பிஎஸ்6 மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், தற்போது இந்த பைக்கின் பக்கமே இந்தியர்களைக் கவரும் முயற்சியில் பெனெல்லி ஈடுபட்டு வருகின்றது.

ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி!

ஆம், இந்த பைக்கின் பக்கம் இளைஞர்களைக் கவர வேண்டும் என்பதற்காக சில அதிரடி அறிவிப்புகளை அது வெளியிட்டுள்ளது. மிக மிக குறைந்தபட்ச முன் தொகை மற்றும் எளிய இருசக்கர வாகன கடன் திட்டம் உள்ளிட்டவற்றை அது அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி!

இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் ஓர் ரெட்ரோ கிளாசிக் ரக மாடலாகும். இந்த இருசக்கர வாகனத்திற்கு பெனெல்லி நிறுவனம் ரூ. 1.99 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இது பிஎஸ்4 மாடலைக் காட்டிலும் ரூ. 20 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கிற்கான புக்கிங்கை ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக பெனெல்லி ஏற்று வருகின்றது.

ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி!

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே இந்திய இருசக்கர வாகன பிரியர்களை வளைத்துப் போடும் விதமாக சிறப்பு சலுகை திட்டத்தை அது வெளியிட்டுள்ளது. அதாவது, ரூ. 4,999 என்ற மிக குறைவான இஎம்ஐ மற்றும் 85 சதவீத கடன் திட்டம் உள்ளிட்டவற்றை பெனெல்லி நிறுவனம் இம்பீரியல் 400 பைக்கிற்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி!

தற்போது பைக்கிற்கான புக்கிங் நடைபெற்று வருவதால், பெனெல்லி விற்பனையாளர்கள் ரூ. 6,000 முன் தொகையின் அடிப்படையில் இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளுக்கான ப்ரீ புக்கிங்கை செய்து வருகின்றனர். மேற்கூறிய சலுகைகள் மட்டுமின்றி மூன்று வருடங்கள் மற்றும் எல்லையில்லா கிலோமீட்டர்கள் எனும் கூடுதல் வாரண்டியையும் பெனெல்லி வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி!

இத்துடன், பாராட்டு (complimentary) தெரிவிக்கும் விதமாக 2 வருடங்கள் சிறப்பு சர்வீஸ் சேவையையும் அது வழங்க இருக்கின்றது. இவ்வாறு அடுக்கடுக்கான சலுகைகளை இம்பீரியல் 400 பைக்கின் பக்கம் இளைஞர்களைக் கவரும் விதமாக பெனெல்லி அறிவித்துள்ளது.

ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக களமிறங்கியிருக்கும் இந்த பைக்கில் பெனெல்லி நிறுவனம் ஏராளமான வசதிகளை வழங்குகின்றது. குறிப்பாக, எஞ்ஜின் திறனில் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் விதமாக இப்பைக்கில் 374 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்ஜினை அது பயன்படுத்தியுள்ளது.

ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 21 பிஎஸ் பவர் மற்றும் 29 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. பிஎஸ்-VI தரத்திலான இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இதுமட்டுமின்றி பைக்கில் சொகுசான பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி!

இத்துடன், பாதுகாப்பான பிரேக்கிங் வசதியை வழங்குவதற்காக 300 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன் கூடுதல் பாதுகாப்பிற்காக பைக்கின் இரு வீல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது மிக சவாலான நேரத்தில்கூட கூர்மையான பிரேக்கிங் வசதியை வழங்கும். எனவே, பயணத்தின்போது பாதுகாப்பு சற்று கூடுதலாக கிடைக்கும்.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Imperiale 400 Finance Scheme Announced In India: Low EMI Offer. Read In Tamil.
Story first published: Friday, September 25, 2020, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X