புதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே!!!

ஆரோவில்லே, பாரடைஸ் கடற்கரைக்கு அடுத்தபடியாக புதுவையில் சிறப்பு வாய்ந்த விஷயம் ஒன்று அமைய இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

புதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே!!!

சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமகன்களுக்கு பிடித்தமான மாநிலமாக பாண்டிச்சேரி இருக்கின்றது. குறிப்பாக சென்னை வாசிகள் அதிகம் விசிட் செய்யக் கூடிய இடமாக இந்த யூனியன் பிரதேசம் உள்ளது. இந்த நிலையில் பாண்டிச்சேரியை கூடுதலாக சிறப்பிக்கும் விதமாக மற்றுமொரு விஷயம் அமைய இருக்கின்றது.

புதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே!!!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பெனெல்லி நிறுவனம் தனது புதிய ஷோரூமை பாண்டியில் திறந்திருக்கின்றது. இது பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் தொடங்கும் 31வது டீலர்ஷிப் ஆகும். புதுவையின் சுந்தரராஜ நாகர் பகுதியில் அமைந்திருக்கும் கே.ஆர். காம்பிளக்ஸில்தான் இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

புதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே!!!

இங்கு புதிய அறிமுகமான இம்பீரியல் 400 உள்ளிட்ட சில பைக்குகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. 'ஜேஎம்பி மோட்டார் வேர்ல்டு எல்எல்பி' என்ற பெயரில் இந்த புதிய டீலர் இயங்க இருக்கின்றார். பெனெல்லி நிறுவனம் மிக சமீபத்தில்தான் இம்பீரியல் 400 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

புதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே!!!

இந்த புதுமுக பைக்கின் விலை ரூ. 1.99 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இதுபோன்ற சிறப்பு வசதியுடைய பைக்குகள் அனைத்துமே புதிய ஷோரூமில் காட்சியளிக்க இருக்கின்றன. எனவே, புதுவைக்கு டூர்க்காக விசிட் செய்யும் பயணிகள் இந்த புதிய ஷோரூமையும் கண்டுகளிக்க முடியும்.

புதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே!!!

புதிய ஷோரூம் குறித்து பெனெல்லி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜபக் கூறியதாவது, "ஜே.எம்.பி மோட்டார் வேர்ல்ட் எல்எல்பி உடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர் சேவையின் தத்துவம் எங்கள் புதிய புதுச்சேரி டீலர் பங்குதாரரின் நெறிமுறைகளுடன் ஒத்துப்போகிறது. பெனெல்லி - புதுச்சேரியில் உள்ள ஊழியர்களுக்கு விற்பனை, சேவை மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்ததை வழங்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை புதிய டீலரால் வழங்க முடியும்" என்றார்.

புதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே!!!

மேலும் பேசிய அவர், "பெனெல்லியின் 3-எஸ் வசதிகள் இந்தியா முழுவதும் இருப்பதை உறுதிசெய்து, வலுவான பிராண்ட் இருப்பை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கம் ஆகும். இந்த நோக்கத்தின் அடிப்படையில் எங்களுக்கு புதுச்சேரி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எங்கள் டீலர் என்பது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கான இடம் மட்டுமல்ல, ஆர்வலர்கள் வந்து பிற எண்ணம் கொண்ட ரைடர்ஸுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு தளமாகவும் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என்று கூறினார்.

புதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே!!!

இந்த ஷோரூமில் பைக்குகள் மட்டுமின்றி மோட்டார்சைக்கிள் சார்ந்த ஆபரணப் பொருட்கள் மற்றும் பிற அக்ஸசெரீஸ்கள் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றன. இந்தியா முழுவதும் விற்பனையைத் தொடங்கும் விதமாக தென்னகத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றான புதுச்சேரியில் இந்த ஷோரூம் தொடங்கப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விற்பனையாளர்களை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

புதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே!!!

புதிதாக விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கும் பெனெல்லி இம்பீரியல் 400 பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, டிசைன், எஞ்ஜின் உள்ளிட்ட அனைத்துமே போட்டியாக அமைந்திருக்கின்றது.

புதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே!!!

வளையம் வடிவிலான ஹெட்லைட், க்ரோம் பூச்சுடன் கூடிய ஃபென்டர்கள், ஸ்போக்குகளுடன் கூடிய சக்கரங்கள், டிஜிட்டல் ஸ்கிரீன் மற்றும் அனலாக் மீட்டர் பொருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை பைக்கில் காணப்படும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதுவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்... இனி இதுக்காகவும் நாம பாண்டிக்கு போகனும் போலிருக்கே!!!

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில் சிங்கிள் சிலிண்டருடைய 373.5 சிசி ஏர்கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஃப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த எஞ்ஜின் இயங்குகின்றது.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Opens New Showroom In Pondy. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X