வெறும் ரூ.25 ஆயிரம் செலவில் டுகாட்டி மான்ஸ்டரின் தோற்றத்தை பெற்ற பெனெல்லி டிஎன்டி300 பைக்...

பெனெல்லி டிஎன்டி300 பைக் மாடல் சில கஸ்டமைஸ்ட் மாற்றங்களால் பிரபலமான டுகாட்டி மான்ஸ்டர் பைக் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் ரூ.25 ஆயிரம் செலவில் டுகாட்டி மான்ஸ்டரின் தோற்றத்தை பெற்ற பெனெல்லி டிஎன்டி300 பைக்...

பெனெல்லி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்தி வரும் தயாரிப்பு மாடல்களில் மிகவும் விலை குறைந்த பைக்காக டிஎன்டி300 விளங்குகிறது. ஏனெனில் இந்த பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் வெறும் ரூ.2.99 லட்சமாக உள்ளது.

வெறும் ரூ.25 ஆயிரம் செலவில் டுகாட்டி மான்ஸ்டரின் தோற்றத்தை பெற்ற பெனெல்லி டிஎன்டி300 பைக்...

இந்த குறைவான விலையினாலேயே டிஎன்டி300 பைக், பெனெல்லி நிறுவனத்தின் மற்ற பைக்குகள் கொண்டிருக்கின்ற இந்நிறுவனத்தின் தனித்துவமான தோற்றத்தை உண்மையில் பெற்றுள்ளதா என்பது குறித்த விவாதங்கள் அதன் வாடிக்கையாளர்களிடையே ஏற்படுவது உண்டு.

வெறும் ரூ.25 ஆயிரம் செலவில் டுகாட்டி மான்ஸ்டரின் தோற்றத்தை பெற்ற பெனெல்லி டிஎன்டி300 பைக்...

இதன் காரணமாக இந்த பைக் கடந்த வருடங்களில் அதிகளவில் கஸ்டமைட் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது டுகாட்டி மான்ஸ்டர் பைக்கின் தோற்றத்தை பெற்றுள்ள இந்த மாடிஃபைடு டிஎன்டி300 பைக்கை டெல்லியை சேர்ந்த சான்ஸ் மோட்டோ ஷாப் என்ற நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.

வெறும் ரூ.25 ஆயிரம் செலவில் டுகாட்டி மான்ஸ்டரின் தோற்றத்தை பெற்ற பெனெல்லி டிஎன்டி300 பைக்...

கஸ்டமைஸ்ட் மாற்றங்களாக இந்த பைக்கில் புதிய எல்இடி ஹெட்லேம்ப், பார் எண்ட் மிரர்களுடன் புதிய ஹேண்டில்பார், முன்புற டயருக்கு சிவப்பு ஸ்ட்ரிப் ஸ்டிக்கர் மற்றும் எரிபொருள் டேங்கில் கார்பன் ஃபைபர் ஸ்டிக்கர் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளன. வழக்கமான பெனெல்லி டிஎன்டி300 பைக்கானது சிங்கிள் அண்டர்பெல்லி எக்ஸாஸ்ட் அமைப்பை கொண்டிருக்கும்.

வெறும் ரூ.25 ஆயிரம் செலவில் டுகாட்டி மான்ஸ்டரின் தோற்றத்தை பெற்ற பெனெல்லி டிஎன்டி300 பைக்...

ஆனால் இந்த கஸ்டமைஸ்ட் பைக்கில் ட்யூல் எக்ஸாஸ்ட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கங்கு சிறு சிறு இடங்களில் தெரிகின்ற சிவப்பு நிறங்களுடன் பைக் மொத்தமும் கருப்பு நிற பெயிண்ட் அமைப்பை கொண்டிருப்பது இந்த கஸ்டமைஸ்ட் பைக்கிற்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது.

மொத்த கஸ்டமைஸ்ட் மாற்றங்களுக்கும் ரூ.25,000- ரூ.30,000 அளவில் மட்டுமே செலவானதாக வெளியாகியுள்ள இந்த மாடிஃபைடு பைக்கின் ரன்னிங் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பைக்கின் தோற்றத்தை தவிர்த்து என்ஜின் அமைப்பில் கஸ்டமைஸ்ட் நிறுவனம் கை வைக்கவில்லை.

வெறும் ரூ.25 ஆயிரம் செலவில் டுகாட்டி மான்ஸ்டரின் தோற்றத்தை பெற்ற பெனெல்லி டிஎன்டி300 பைக்...

இதனால் பெனெல்லி டிஎன்டி300 பைக் கொண்டிருக்கும் வழக்கமான 300சிசி, இன்-லைன் ட்வின் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், லிக்யூடு கூல்டு, 8 வால்வுகள், டிஒஎச்சி என்ஜினுடன் தான் இந்த பைக் இயங்குகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 11,500 ஆர்பிஎம்-ல் 38.26 பிஎச்பி பவரையும், 10,000 ஆர்பிஎம்-ல் 26.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

வெறும் ரூ.25 ஆயிரம் செலவில் டுகாட்டி மான்ஸ்டரின் தோற்றத்தை பெற்ற பெனெல்லி டிஎன்டி300 பைக்...

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஸ்டீல் ட்ரெஸ்டல் ஃப்ரேம்-ஐ கொண்டுள்ள இந் 300சிசி பைக்கில் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் பாகங்களாக முன்புறத்தில் தலைக்கீழான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் 260மிமீ ட்வின் பெடல் டிஸ்க்கும், பின்புறத்தில் ஆஃப்-சீட் மோனோஷாக் மற்றும் ஏபிஎஸ் ப்ரேக் சிஸ்டத்துடன் 240மிமீ பெடல் டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
This Benelli TNT 300 Has Been Modified To Resemble Ducati Monster
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X