புதிய பெயருடன் வருகிறது பெனெல்லி டிஎன்டி 600ஐ ஃபேஸ்லிஃப்ட்...

அடுத்த தலைமுறை பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக்கின் தோற்றம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய பெயருடன் வருகிறது பெனெல்லி டிஎன்டி 600ஐ ஃபேஸ்லிஃப்ட்...

இதற்கு முன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த படங்களில் பைக் இரண்டு விதமான தோற்றங்களை கொண்டிருந்தது. இதனால் புதிய பெனெல்லி டிஎன்டி 600ஐ மாடல் இருவிதமான வேரியண்ட்களில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

புதிய பெயருடன் வருகிறது பெனெல்லி டிஎன்டி 600ஐ ஃபேஸ்லிஃப்ட்...

இந்த நிலையில் இதில் ஒரு வேரியண்ட்டின் படங்களை சீனாவை சேர்ந்த ஊடக தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது பைக் பெரிய அளவில் முழு-கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை கொண்டுள்ளதை அறிய முடிகிறது.

புதிய பெயருடன் வருகிறது பெனெல்லி டிஎன்டி 600ஐ ஃபேஸ்லிஃப்ட்...

அதேநேரம் இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் அதன் நிறங்களை மாற்றும் விதத்தில் ஆர்ஜிபி லைட்டிங் சிஸ்டம், ஒளியூட்டப்பட்ட ஸ்விட்ச்கியர் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாவியினை செலுத்தும் பகுதி பெட்ரோல் டேங்கிற்கு சற்று முன்புறமாக ஹேண்டில் பாரின் க்ளாம்ப்பிற்கு பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பெயருடன் வருகிறது பெனெல்லி டிஎன்டி 600ஐ ஃபேஸ்லிஃப்ட்...

இதனுடன் கீ ஃபாப்பில் கீலெஸ் இக்னிஷன் சிஸ்டத்தையும் இரு பொத்தான்களுடன் இந்த பைக் கொண்டுள்ளது. அதாவது இந்த பொத்தான்களை வெறுமனே தொடுவதின் மூலமாக மோட்டார்சைக்கிள் இயக்கத்திற்கு வந்துவிடும். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த அடுத்த தலைமுறை பைக் வழக்கமான பெனெல்லி டிஎன்டி 600ஐ என்ஜின் அமைப்பை தான் பெற்றுள்ளது.

புதிய பெயருடன் வருகிறது பெனெல்லி டிஎன்டி 600ஐ ஃபேஸ்லிஃப்ட்...

ஆனால் என்ஜினின் மாசு உமிழ்வை குறைப்பதற்காக அல்பிய்ட் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த என்ஜின் தற்போதைய பெனெல்லி டிஎன்டி 600ஐ மாடலில் 85.07 பிஎச்பி பவரையும், 54.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்த புதிய தலைமுறையில் பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டு பொருத்தப்படவுள்ளதால் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பெயருடன் வருகிறது பெனெல்லி டிஎன்டி 600ஐ ஃபேஸ்லிஃப்ட்...

அதேபோல் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக பைக் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் தற்போதைய மாடலில் உள்ள இருக்கைக்கு அடியில் வழங்கப்படும் எக்ஸாஸ்ட் அமைப்பிற்கு பதிலாக ஸ்டப்பி அண்டர்பெல்லி எக்ஸாஸ்ட் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பெயருடன் வருகிறது பெனெல்லி டிஎன்டி 600ஐ ஃபேஸ்லிஃப்ட்...

இதுமட்டுமின்றி ஃப்ரேம் மற்றும் அடித்தளங்களும் இந்த புதிய வெர்சனில் மேம்படுத்தப்பட்ட தரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் பாகங்களாக முன்புறத்தில் தலைக்கீழான ஃபோர்க்கும், பின்புறத்தில் மோனோஷாக்கும் உள்ளன. ப்ரேக்கிங்கிற்கு ரேடியல் காலிபர்களுடன் ட்யூல் முன்புற டிஸ்க் மற்றும் சிங்கிள் ரியர் டிஸ்க் உள்ளிட்டவை உள்ளன.

தற்போது வெளியாகியுள்ள படங்களில் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பேட்ஜிங் தெளிவாக தெரிகிறது. இதன்படி பார்க்கும்போது இந்த அடுத்த தலைமுறை பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக் எஸ்ஆர்கே600 அல்லது எஸ்ஆர்600கே என்ற இரு பெயர்களில் ஏதேனும் ஒன்றால் அறிமுகமாகும் என தெரிகிறது.

புதிய பெயருடன் வருகிறது பெனெல்லி டிஎன்டி 600ஐ ஃபேஸ்லிஃப்ட்...

இல்லையேல் சந்தைக்கு ஏற்ப அதன் பெயர் மாற்றப்படலாம். இந்திய சந்தையில் பெனெல்லி நிறுவனம் இந்த புதிய பைக் மாடலை அடுத்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகமான பிறகு இந்த பைக்கிற்கு கவாஸாகி இசட்650 மற்றும் சிஎஃப் மோட்டோ 650என்கே உள்ளிட்டவை போட்டியாக விளங்கலாம்.

Most Read Articles
மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli TNT 600i Facelift To Be Launched Soon With A New Name
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X