பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை! சொந்தமா வாகனம் வாங்குவதே பெஸ்ட்! மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

கொரோனா அச்சம் காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவை முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆகையால், பணிக்கு செல்வது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இம்மாதிரியான நேரத்தில் விலை குறைந்த வாகனங்களைப் பலர் தேடி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் விற்னையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியலை தொகுத்து வழங்கியுள்ளோம்.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் மத்தியில் புதுவிதமான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுபோக்குவரத்துகுறித்த அச்சம் கூடுதலாகவே உள்ளது. இன்னும் ரயில் மற்றும் பேருந்து சேவை முழுமையாக தொடங்கப்படவில்லை என்றாலும் அதில் பயணிக்கும்போது வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயம் அவர்களின் ஆழ் மனதில் தோன்ற ஆரம்பித்துள்ளது.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

எனவே, பலரிடத்தில் சொந்த வாகனம் வாங்கினால் என்ற எண்ணமும் தோன்ற ஆரம்பித்துள்ளது. அத்தகைய எண்ணம் உடையவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நமது டிரைவ்ஸ்பார்க் தளம் குறைந்த விலையில் விற்பனையாகும் பைக் மற்றும் கார்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது ரூ. 70 ஆயிரத்திற்கும் குறைவான விலையில், அதிக தரத்துடன் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியுள்ளோம்.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

ஹோண்டா ஆக்டிவா (Honda Activa 6G)

விலை என்ன? ரூ. 64,464

நாம் இந்த பட்டியலில் முதலில் பார்க்கவிருப்பது ஹோண்டா ஆக்டிவாவை பற்றிதான். இது, நாம் பார்க்கவிருக்கும் முதல் ஸ்கூட்டராக மட்டுமில்லாமல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களிலும் இதுவே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆம், இந்திய இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவரும் ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா உள்ளது.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு உள்ளிட்டவை மக்கள் அதிக வரவேற்பு வழங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவேதான், ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரில் அவ்வப்போது அப்டேட் செய்து சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது. தற்போது 6ஜி வெர்ஷனில் அது விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இதன் முந்தைய வெர்ஷனான 5ம் தலைமுறை ஆக்டிவா இரண்டு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகளை விற்பனைச் செய்தது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதைக் காட்டிலும் அதிக மைலேஜ் மற்றும் குறைந்த மாசு வெளியீடு உள்ளிட்ட அம்சங்களுடன் ஆக்டிவா 6ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 64,464 என்ற விலைக்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter)

விலை: ரூ. 61,449

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அதிகம் விற்பனையாகும் மற்றும் நாம் செலவழிக்கும் பணத்திற்கு உகந்த ஸ்கூட்டராக டிவிஎஸ் ஜூபிடர் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் பிரிமியம் தரத்தை விரும்பும் வாகன பிரியர்களைக் கவர்கின்ற வகையில் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, செல்போன் சார்ஜ், சொகுசு இருக்கை, எல்இடி மின்விளக்கு உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும்.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இதன் 109.7 சிசி திறன் கொண்ட சிங்கிளி சிலிண்டர் எஞ்ஜின், 7.4 பிஎச்பி மற்றும் 8.4 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இந்த ஸ்கூட்டரில் கூடுதல் சிறப்பு அம்சங்களாக அதிக ஸ்டோரேஜ் வசதி மற்றும் டின்டட் விசர் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன்காரணத்தினாலயே ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலுக்கு அடுத்தபடியாக நல்ல வரவேற்பை இந்த ஸ்கூட்டர் பெற்று வருகின்றது.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் (Maestro Edge)

விலை: ரூ. 69,250

இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் ஹீரோ நிறுவனத்தின்கீழ் கிடைக்கும் விலை குறைந்த மற்றும் தரமான ஸ்கூட்டர்களில் மேஸ்ட்ரோ எட்ஜ் முதல் இடத்தில் உள்ளது. இது 125சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். ஆகையால், சற்று உயர்ந்த விலையை இது கொண்டிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் ப்யூவல் இன்ஜெக்சன் திறனுக்காக எக்ஸ்சென்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

அது, அதிக திறன் மற்றும் கூடுதல் மைலேஜை வழங்க உதவியாக இருக்கும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 9 பிஎச்பி மற்றும் 10.4 என்எம் டார்க்கை வெளியேற்ற திறனைக் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை கூடுதல் சிறப்பானதாக மாற்ற ஹீரோ நிறுவனம் பிரிஸ்மேடிக் பெயிண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது. இது வாகனத்தை எப்போதும் புதுப் பொலிவுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

டிவிஎஸ் என்டார்க் 125 (TVS Ntorq 125)

விலை: ரூ. 66,885

இந்த லிஸ்டில் நாம் பார்க்கவிருக்கும் அடுத்த அதிக திறன் ஸ்கூட்டர்களில் ஒன்றாக டிவிஎஸ் என்டார்க் 125 இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் புதுவிதமான தோற்றம் மற்றும் ஸ்டைல் உள்ளிட்டவை இந்திய இளைஞர்களை அதிகளவில் கவர்ந்து வருகின்றது. இதுமட்டுமின்றி, வெஸ்பா மற்றும் அப்ரிலியா நிறுவனங்களின் ஸ்கூட்டர்களுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினையே டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரும் பெற்றிருக்கின்றது.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இதுமட்டுமின்றி, இந்த ஸ்கூட்டரில் கூடுதல் சிறப்பு வசதியாக யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன், அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளைப் பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற பல்வேறு அம்சங்களின் காரணமாக இந்தியாவில் இது நல்ல வரவேற்பைப் பெற தொடங்கியிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் 9.1 பிஎச்பி மற்றும் 10.5 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் 124.8சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

யமஹா ரே இசட்ஆர் 125 (Yamaha Ray ZR 125)

விலை: ரூ. 66,730

யமஹா நிறுவனம் அண்மையில்தான் இந்த ஸ்கூட்டரின் விலையை கணிசமாக உயர்த்தியது. பிஎஸ்-6 தரத்திற்கு அப்கிரேட் செய்ததன் காரணமாக இந்த விலையுயர்வை வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து, ரயிலை நம்பி பயனில்லை... சொந்தமா வாகனம் வாங்குவதுதான் பெஸ்ட்... மலிவு விலை ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இந்த ஸ்கூட்டரில் மற்றுமொரு வெர்ஷனாக ரே ஸ்ட்ரீட் ரேல்லி 125 எஃப்ஐ மாடல் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் சற்று கூடுதல் விலையைக் கொண்டுள்ளது. அதாவது, ரூ. 70,730 என்ற விலை இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வழக்கமான ரே இசட்ஆர் 125 மாடலின் விலை ரூ. 66. 730 ஆக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 125சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.2 எச்பி மற்றும் 9.7 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
Best Scooters In India Under Rs. 70 Thousand. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X