இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பைக்காக மீண்டும் ஹீரோ ஸ்பிளெண்டர்! ஸ்கூட்டர் எது தெரியுமா?

2020 செப்டம்பர் மாதத்திற்கான இருசக்கர வாகனங்களின் விற்பனை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன் மூலம் கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனையான டாப்-10 இருசக்கர வாகனங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பைக்காக மீண்டும் ஹீரோ ஸ்பிளெண்டர்! ஸ்கூட்டர் எது தெரியுமா?

தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் ஹோண்டா ஆக்டிவா வழக்கம்போல் விற்பனையில் தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளன. அதிலும் ஹீரோ ஸ்பிளெண்டர், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பைக்காக மீண்டும் ஹீரோ ஸ்பிளெண்டர்! ஸ்கூட்டர் எது தெரியுமா?

ஏனெனில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 280,250 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2.30 லட்சம் ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையான 2020 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் கிட்டத்தட்ட 50,000 அதிகமாகும்.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பைக்காக மீண்டும் ஹீரோ ஸ்பிளெண்டர்! ஸ்கூட்டர் எது தெரியுமா?

இதேபோல் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற பெயரை ஹோண்டா ஆக்டிவா மீண்டும் பெற்றுள்ளது. தற்சமயம் விற்பனையில் இருப்பது ஆறாம் தலைமுறை ஆக்டிவா ஆகும். இதன் விற்பனை எண்ணிக்கையும் 2020 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 50,000 அதிகமாக 2.57 லட்சமாக உள்ளது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பைக்காக மீண்டும் ஹீரோ ஸ்பிளெண்டர்! ஸ்கூட்டர் எது தெரியுமா?

மூன்றாவது இடத்தில் மீண்டும் ஹீரோ தயாரிப்பாக ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் உள்ளது. இந்த பைக் கடந்த செப்டம்பர் மாதத்தில் 216,201 யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனையாகியுள்ளன. இதனால் ஆகஸ்ட் மாதத்தை தொடர்ந்து செப்டம்பரிலும் மூன்றாவது இடத்தை இந்த பைக் தக்க வைத்து கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பைக்காக மீண்டும் ஹீரோ ஸ்பிளெண்டர்! ஸ்கூட்டர் எது தெரியுமா?

நான்காவது இடத்தில் உள்ள சிபி ஷைன் அன்றாட பயன்பாட்டிற்கு ஹோண்டாவின் ப்ரீமியம் மோட்டார்சைக்கிளாகும். மொத்தம் 118,004 சிபி ஷைன் பைக்குகள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹீரோ எச்எஃப் டீலக்ஸை காட்டிலும் இந்த ஹோண்டா பைக் கிட்டத்தட்ட சுமார் 1 லட்சம் யூனிட்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பைக்காக மீண்டும் ஹீரோ ஸ்பிளெண்டர்! ஸ்கூட்டர் எது தெரியுமா?

பல்சர் 125-ல் இருந்து 220எஃப் வரையிலான பஜாஜின் பல்சர் வரிசை இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. என்எஸ்200, ஆர்எஸ்200 போன்ற பிரபலமான 200சிசி பைக்குகள் உள்ள பஜாஜ் பல்சர் வரிசையில் 102,698 பைக்குகள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்துள்ள இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் 1 லட்சத்திற்கும் குறைவாகவே விற்பனையாகியுள்ளன.

Rank Models Sep-20
1 Hero Splendor 2,80,250
2 Honda Activa 2,57,900
3 Hero HF Deluxe 2,16,201
4 Honda CB Shine 1,18,004
5 Bajaj Pulsar 1,02,698
6 Hero Glamour 69,477
7 TVS XL Moped 68,929
8 Hero Passion 63,296
9 TVS Jupiter 56,085
10 Bajaj Platina 55,496

Table Courtesy: Autopunditz.com

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பைக்காக மீண்டும் ஹீரோ ஸ்பிளெண்டர்! ஸ்கூட்டர் எது தெரியுமா?

ஹீரோ க்ளாமர் விற்பனையில் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபெட் மோட்டார்சைக்கிளை சில நூறு யூனிட்கள் முந்தி கொண்டு ஆறாவது இடத்தில் உள்ளது. இதனால் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்ட எக்ஸ்எல் மொபெட்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 68,929 ஆகும்.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பைக்காக மீண்டும் ஹீரோ ஸ்பிளெண்டர்! ஸ்கூட்டர் எது தெரியுமா?

இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி மூன்று இடங்களை ஹீரோ பேஷன், டிவிஎஸ் ஜூபிடர், பஜாஜ் பிளாட்டினா உள்ளிட்டவை ஆக்கிரமித்துள்ளன. இவற்றின் 2020 செப்டம்பர் மாதத்தின் விற்பனை எண்ணிக்கை முறையே 63,296; 56,085 மற்றும் 55,496 ஆகும். இதில் ஹீரோ பேஷன் அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 10,000 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் பைக்காக மீண்டும் ஹீரோ ஸ்பிளெண்டர்! ஸ்கூட்டர் எது தெரியுமா?

ஒரு சில வாகனங்களின் இடங்கள் மாறியுள்ளன மற்றும் விற்பனை எண்ணிக்கை சற்று அதிகரித்தும் குறைந்தும் உள்ளதே தவிர்த்து, தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. 2020 ஆகஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்திய இருசக்கர வாகனங்கள் தான் மீண்டும் விற்பனையில் தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளன.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 Selling 2 Wheelers of September 2020
Story first published: Friday, October 23, 2020, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X