எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...?

2020 ஜூலை மாதம் அதிகளவில் விற்பனையான மோட்டார்சைக்கிள்களின் பெயர்கள் அட்டவணையாக வெளிவந்துள்ளன. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...?

கடந்த மாதத்தை போன்று அதிக மாதிரிகள் விற்பனையாகி ஹீரோ மோட்டோகார்பின் ஸ்பிளென்டர் இந்த வரிசையில் வழக்கம்போல் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற வாகனமாக விளங்கும் ஸ்பிளென்டர் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 2,13,413 மாதிரிகள் விற்பனையாகியுள்ளது.

எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...?

இதற்கு அடுத்தும் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பாக எச்எஃப் டீலக்ஸ் 1,54,142 மாதிரிகளின் விற்பனையுடன் இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் விற்பனை எண்ணிக்கைக்கும் ஸ்பிளென்டரின் விற்பனை எண்ணிக்கைகும் கிட்டத்தட்ட 70 ஆயிரம் யூனிட்கள் வித்தியாசம் உள்ளது.

எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...?

இருப்பினும் தயாரிப்பு நிறுவனத்தால் சமீபத்தில் தான் பிஎஸ்6 அப்டேட்டை பெற்றிருந்த எச்எஃப் பைக்கும் மாதந்தோறும் கணிசமாக விற்பனையை ஹீரோ நிறுவனத்திற்கு பெற்று தருவதற்கு மறப்பதில்லை. மூன்றாவது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா உள்ளது.

எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...?

தற்சமயம் விற்பனையில் இருப்பது ஆறாம் தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டர் ஆகும். இந்த அப்கிரேட்டை இந்த ஆண்டு துவக்கத்தில் தான் பெற்றிருந்த ஆக்டிவா, ஹீரோ ஸ்பிளெண்டரை போன்று ஸ்கூட்டர் பிரிவில் தனது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறது.

எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...?

ஏனெனில் பெரும்பான்மையான மாதங்கள் அனைத்திலும் 1 லட்சம் விற்பனை எண்ணிக்கையை எப்படியாவது கடந்துவிடும் ஹோண்டா ஆக்டிவாவின் 1,18,859 மாதிரிகள் கடந்த ஜூலை மாதத்தில் விற்பனையாகியுள்ளன. இவற்றிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ள மோட்டார்சைக்கிள் 1 லட்சத்திற்கும் குறைவான விற்பனை எண்ணிக்கையையே பெற்றுள்ளன.

Rank Model Jul-20
1 Hero Splendor 2,13,413
2 Hero HF Deluxe 1,54,142
3 Honda Activa 1,18,859
4 Honda CB Shine 88,969
5 Bajaj Pulsar 73,836
6 TVS XL 58,403
7 Hero Glamour 51,225
8 TVS Jupiter 48,995
9 Hero Passion 44,377
10 Honda Dio 37,233
எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...?

இதன்படி ஹோண்டா சிபி ஷைன் 89 ஆயிர மாதிரிகளின் விற்பனையை கடந்த மாதத்தில் சந்தையில் பதிவு செய்துள்ளது. இதன் பிஎஸ்6 வெர்சனையும் ஹோண்டா நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் தான் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தது.

எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...?

இதனை தொடர்ந்து பஜாஜின் பல்சர் வரிசை பைக்குகள் 73,836 யூனிட்கள் விற்பனையாகி இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் பெற்றுள்ளன. பஜாஜ் பல்சர் வரிசையில் 125சிசி-ல் இருந்து 220சிசி வரையிலான பைக்குகள் உள்ளன.

எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...?

ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் டிவிஎஸ் எக்ஸ்எல்100 மற்றும் ஹீரோ க்ளாமர் பைக் மாடல்கள் முறையே 58,403 மற்றும் 51,225 மாதிரிகளின் விற்பனையுடன் உள்ளன. எட்டாவது இடத்தில் உள்ள டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் 48,995 மாதிரிகள் கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...?

இந்த லிஸ்ட்டில் கடைசி ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மற்றும் ஹீரோ பேஷன் உள்ளிட்டவை உள்ளன. இதில் டியோவின் விற்பனை எண்ணிக்கை 44,337 யூனிட்கள் மற்றும் பேஷனின் விற்பனை எண்ணிக்கை 37,233 யூனிட்கள் ஆகும்.

எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...?

ஆட்டோ புண்டிஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த லிஸ்ட்டின்படி பார்க்கும்போது, வழக்கம்போல் இந்திய சந்தையில் மோட்டார்சைக்கிள்கள் பிரிவை ஹீரோ ஸ்பிளெண்டர், எச்எஃப் டீலக்ஸ் மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல்கள் தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. கொரோனாவினால் பைக்குகளின் விற்பனையில் ஏற்பட்ட தொடர் மந்த நிலைக்கு இடையே இத்தகைய வளர்ச்சி உண்மையில் எதிர்பார்க்காத ஒன்றே.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Best Selling Two Wheelers India July 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X