பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் துவங்கியது... முன்பதிவு தொகை ரூ.3,000...

ஆர்ஆர் க்ளோபலின் புதிய ப்ராண்ட்டான பிகாஸ் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகளை ஏற்க துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் துவங்கியது... முன்பதிவு தொகை ரூ.3,000...

பிகாஸ் ப்ராண்ட் தற்சமயம் பி8 மற்றும் ஏ2 என்ற இரு ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தி உள்ளது. இந்த இரு ஸ்கூட்டர்களுக்கும் இரு வேரியண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது ஒன்று ஆசிட்-பேட்டரியின் மூலமாகவும், மற்றொன்று லித்தியம்-இரும்பு பேட்டரியின் மூலமாகவும் இயக்கும்.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் துவங்கியது... முன்பதிவு தொகை ரூ.3,000...

ப்ராண்ட்டின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் நடைபெற்றுவரும் இந்த முன்பதிவிற்கு தயாரிப்பு நிறுவனம் ரூ.3,000-ஐ முன்பதிவு தொகையாக நிர்ணயித்துள்ளது. பிகாஸ் பி8 ஸ்கூட்டரின் வேரியண்ட்களின் விலை ரூ.62,999 மற்றும் ரூ.82,999 ஆக எக்‌ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் துவங்கியது... முன்பதிவு தொகை ரூ.3,000...

அதேநேரம் ஏ2 ஸ்கூட்டர் மாடலின் விலை ரூ.52,499 மற்றும் ரூ.67,999 ஆக உள்ளது. இவை இரண்டிற்கான முன்பதிவுகள் தற்போது துவங்கப்பட்டுள்ளதால் டெலிவிரி பணிகள் அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளன. அதுவும் முதலாவதாக சென்னை, பெங்களூர், ஐதாராபாத், நவி மும்பை, புனே நகரங்களில் தான் இவற்றின் டெலிவிரிகள் ஆரம்பமாகவுள்ளன.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் துவங்கியது... முன்பதிவு தொகை ரூ.3,000...

இந்த ஸ்கூட்டர்களில் சிறப்பம்சங்களாக நீக்கக்கூடிய பேட்டரி, வாகனம் திருடுபோவதை தடுக்கும் அலாரம் & மோட்டார் லாக்கிங், எல்இடி தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், பல வண்ண நிறங்களில் டிஜிட்டல் திரை, டிஆர்எல்கள், கீலெஸ் ஸ்டார்ட், ஸ்கூட்டரின் இருப்பிடத்தை காணும் வசதி, மைய இருக்கை லாக், யுஎஸ்பி சார்ஜிங், ரிவர்ஸ் அசிஸ்ட் மற்றும் சைடு ஸ்டாண்ட் சென்சார் உள்ளிட்டவற்றை பிகாஸ் ப்ராண்ட் வழங்கியுள்ளது.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் துவங்கியது... முன்பதிவு தொகை ரூ.3,000...

இதில் சைடு ஸ்டாண்ட் சென்சார் என்பது, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகுவதை தடுக்கும் வசதியாகும். லோ, மிட் & ஹை என்ற மூன்று ரைடிங் மோட்களை கொண்ட இந்த ஸ்கூட்டர்களில் ஸ்மார்ட்போன் மூலமாக இணைக்கக்கூடிய இணைப்பு தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் துவங்கியது... முன்பதிவு தொகை ரூ.3,000...

பிகாஸ் பி8 ஸ்கூட்டரானது அதிகப்பட்சமாக 50kmph வேகத்தில் இயங்கக்கூடியது. இதன் லீட்-ஆசிட் வேரியண்ட் 78கிமீ ரேஞ்ச்சையும், லித்தியம்-இரும்பு வேரியண்ட் 70கிமீ ரேஞ்ச்சையும் வழங்குகிறது. இதன் லீட்-ஆசிட் பேட்டரியை 0-விலிருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்ய 7-ல் இருந்து 8 மணிநேரம் வரை தேவைப்படும். அதுவே லித்தியம்-இரும்பு பேட்டரியை முழு சார்ஜ் செய்ய 3 மணிநேரங்களே போதுமானது.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் துவங்கியது... முன்பதிவு தொகை ரூ.3,000...

பிகாஸ் ஏ2 ஸ்கூட்டரின் அதிகப்பட்சமான வேகம் 25kmph ஆகும். முழு சார்ஜ் செய்ய அதிகப்பட்சமாக 8 மணிநேரங்கள் தேவைப்படும் இதன் லீட்-ஆசிட் வேரியண்ட் 110கிமீ ரேஞ்ச்சை வழங்கக்கூடியது. லித்தியம்-இரும்பு வேரியண்ட்டின் பேட்டரியை சார்ஜ் செய்ய 2 மணிநேரம் 15 நிமிடங்களே போதும்.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகள் துவங்கியது... முன்பதிவு தொகை ரூ.3,000...

இந்த இரு ஸ்கூட்டர்களுக்கும் சிவப்பு, வெள்ளை மற்றும் க்ரே என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் தற்போது தான் சிறிது சிறிதாக வளர்ந்து வருகிறது. அதற்கு இந்த பிகாஸ் ப்ராண்ட்டின் ஸ்கூட்டர்கள் தங்களால் இயன்ற உதவியினை வழங்கும் என்பது உண்மை.

Most Read Articles
English summary
BGAUSS begins online bookings for its electric scooters
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X