பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது தற்போது இன்னும் எளிது...!

ஆர்ஆர் க்ளோபலின் புதிய ப்ராண்ட்டான பிகாஸ், மனிடேப் என்ற நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது தற்போது இன்னும் எளிது...!

பிகாஸ்-மனிடேப் நிறுவனங்களின் இந்த கூட்டணியினால் வாடிக்கையாளர்கள் இனி பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எளிய மாதத்தவணை திட்டத்தில் 0 சதவீத வட்டி விகிதத்துடன் பெறலாம்.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது தற்போது இன்னும் எளிது...!

பிகாஸ் ப்ராண்ட்டின் பி8 மற்றும் ஏ2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த மாதத்தவணை திட்டம் குறித்து ஆர்ஆர் க்ளோபல் க்ரூப்பின் நிர்வாக இயக்குனர் ஹெமந்த் கப்ரா கூறுகையில், பிகாஸ் ப்ராண்டில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரம், ஸ்டைல், செயல்திறன் மற்றும் செயல்பாட்டை கொண்ட தயாரிப்புகளை வழங்குவதாக நாங்கள் நம்புகிறோம்.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது தற்போது இன்னும் எளிது...!

மேலும் எலக்ட்ரிக் இயக்கம் நமது போக்குவரத்தின் எதிர்காலத்தை வரையறுக்கும் என்றும் நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். மனிடேப்புடனான எங்கள் கூட்டாண்மை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதை எளிதாக்கவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான ஒரு படியாகும்.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது தற்போது இன்னும் எளிது...!

பிகாஸ் வாடிக்கையாளர்களுக்கு மனிடேப் வழங்கியுள்ள 0% வட்டி ஈ.எம்.ஐ தேர்வு, எங்கள் ஸ்கூட்டர்களை எளிதில் மலிவானதாகவும் மற்றும் இந்திய மக்கள் அணுகக்கூடியதாகவும் மாற்றும் என கூறினார். இந்திய அரசாங்கம் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால் வணிக செயல்பாடுகள் ஒவ்வொன்றாக மீண்டும் துவங்கப்பட்டு வருகின்றன.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது தற்போது இன்னும் எளிது...!

பிகாஸ் தயாரிப்புகளுக்காக மனிடேப் நிறுவனத்தின் மாதத்தவணை முறை முற்றிலும் டிஜிட்டல்மயம் என்பதால் அது தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு சமூக இடைவெளியை பராமரித்து வாடிக்கையாளர்களின் பண பரிமாற்றத்திற்கு உதவும்.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது தற்போது இன்னும் எளிது...!

கடன் வாங்குவதற்கான தகுதியை சரிபார்த்தல் மற்றும் அதற்கான அனுமதி வழங்குதல் என அனைத்து செயல்பாடுகளும் வெறும் 5 நிமிடத்தில் மனிடேப் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுவிடும். மேலும் வாடிக்கையாளர்கள் கடனாக வாங்கிய பணத்தை 6-ல் இருந்து 36 மாதங்கள் வரையில் திருப்பி செல்லுத்தவும் அனுமதிக்கப்படுகிறது.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது தற்போது இன்னும் எளிது...!

இதுகுறித்து மனிடேப் நிறுவனத்தின் துணை-நிறுவனர் அனுஜ் காக்கர் கூறுகையில், சுற்றுச்சூழலை பாதிக்காத எலக்ட்ரிக் ஸ்கூட்டர் போக்குவரத்தை இந்தியாவில் கொண்டுவருவதில் தீவிரமாக செயல்பட்டுவரும் பிராண்டான பிகாஸ் உடன் இணைந்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது தற்போது இன்னும் எளிது...!

நகர்ப்புற மக்கள்தொகையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக தேவை ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் தனி பயன்பாட்டு வாகனங்களுக்கு தான் தற்போதைய சூழலில் மக்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை எங்களது ஆராய்ச்சி வெளிக்காட்டுகிறது.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது தற்போது இன்னும் எளிது...!

இதன் காரணமாக, இந்த மாற்றத்தை பிகாஸ் வாடிக்கையாளர்களுக்கு மலிவானதாக வழங்குவது தான் ஒரு நுகர்வோர் கடன் கூட்டாளராக, எங்களது நோக்கமாக இருக்கும் என தெரிவித்தார். சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் பன்வெல் உள்ளிட்ட நகரங்களில் பிகாஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவது தற்போது இன்னும் எளிது...!

இந்நிறுவனத்தின் பி8 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.62,999 மற்றும் ரூ.82,999-ஆகவும், ஏ2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.52,499 மற்றும் ரூ.67,999-ஆகவும் உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எதேனும் ஒன்றை வாங்க நினைத்து வருபவர்களுக்கு பிகாஸின் மனிடேப் நிறுவனத்துடனான கூட்டணி நிச்சயம் நல்ல செய்தியாகவே இருக்கும்.

Most Read Articles

English summary
BGAUSS ties-up with MoneyTap to offer attractive financing options for its electric scooters
Story first published: Friday, August 14, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X