பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

பிக்ராக் டர்ட்பார்க் சமீபத்தில் 2020-க்கான டிரயல் அட்டாக் சேலஞ்ச் போட்டியை அண்மையில் தொடங்கியது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பன்னெர்கட்டா ரேஸ் டிராக்கிலேயே இந்த போட்டி நடைபெற்றது. இது அட்வென்சர் மற்றும் ரேஸ் பயணங்களுக்கு ஏற்ற ரேஸ் தளம் ஆகும். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிக்கான அழைப்பிதழை ராயல் என்பீல்டு நிறுவனம் எங்களுக்கு வழங்கியிருந்தது.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

இந்த நாட்களில் எங்களுக்கு கிடைத்த அனைத்து தகவலையும் இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம். வாருங்கள் இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம். பிக்ராக் ட்ரட்பார்க், டிரையல் அட்டாக் பந்தயத்தை நடப்பாண்டிலேயே இத்துடன் மூன்றாவது முறையாக நிகழ்த்துவது குறிப்பிடத்தகுந்தது.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இது நடைபெற்றது. இப்போட்டியில் 70 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் 10 பேர் சிறுவர்கள் ஆவர். தங்களின் திறனை வெளிப்படுத்தும் விதமாக இவர்களும் பங்கேற்றனர். மேலும், இந்த பந்தயத்தில் முதல் முறையாக புதிய ரைடர்கள், ஏற்கனவே பல போட்டிகளைச் சந்தித்த ரைடர்களுகடன் போட்டியை சந்தித்தனர்.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

விதிகள்:

விளையாட்டை நியாயமானதாகவும், சுவாரஷ்யமானதாகவும் மாற்ற இப்போட்டி பல்வேறு பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளப்பட்டது. பைக்கின் எஞ்ஜின் திறன் பொருத்து போட்டிகள் பிரிக்கப்பட்டன.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

அதன் விபரம் கீழே:

வகுப்பு 1: 250 சிசி வரை

வகுப்பு 2: 250 சிசிக்கு மேல் - 400 சிசிக்குக் கீழே

வகுப்பு 3: 401 சிசி-க்கு மேல் - 550 சிசி-க்கு கீழே

வகுப்பு 4: 550 சிசி-க்கு மேல்

பெண்கள் வகுப்பு: பைக் பிரிவு கிடையாது (எந்த பைக் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்)

மீடியா வகுப்பு: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

குழந்தைகள் வகுப்பு

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

பந்தயத்தில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களும் ஐந்து சுற்றுகளை கடக்க வேண்டும் என்பதே முக்கியமான விதி. ஐந்து சுற்றுகளையும் குறுகிய நேரத்தில் முடிப்பவர்களே வெற்றியாளர். ஐந்து சுற்றுகளை முடிக்காமல் ரைடர் பாதையிலேயே வெளியேறினால், அவர் தானாகவே போட்டிக்கு தகுதியற்றவர் என எடுத்துக் கொள்ளப்படும்.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

மேலும், பந்தயத்தின் போது பிரேக் டவுண் அல்லது மோதல் ஏதேனும் பங்கேற்பாளர் சந்தித்தால் அவரும் தகுதி நீக்கம் செய்யப்படுவர். இதனைத் தவிர்க்க வேண்டுமானால் மார்ஷல்களின் உதவியுடன் பைக்கை அவர்களாகவே உந்தச் செய்ய வேண்டும். இவையே இந்த போட்டியின் விதிகள் ஆகும்.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

டிராக்:

போட்டி தளமானது சரளை மற்றும் மண் மேடுகளால் உருவானதாகும். இது சுமார் 2.5 கிமீட்டர் நீளமுள்ள டிராக்காகும். இந்த ஓடு தளம் எஃப்எம்எஸ்சிஐ-ஆல் சான்று பெற்றதாகும். மேலும், இந்த டிராக் பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

மிக குறுகிய வளைவு, பார்வையை மறைக்கக் கூடிய திருப்பங்கள், பெரிய சறிவு மற்றும் மேடுகள் என சாகசம் செய்வதற்கு ஏற்ற ஓடு தளமாக இது இருக்கின்றது. எனவே கை தேர்ந்த ரைடர்களுக்குகூட இந்த தளம் மிக சவாலானதாகவும், சுவாரஷ்யம் நிறைந்ததாகவும் மாறியிருக்கின்றது.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

முதல் நாள்:

நாள் ஒன்றில் என்ன நடந்தது?, நவம்பர் 28, காலை 8 மணியளவில் போட்டி தொடங்கியது. போட்டிக்கு முன்னதாக, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மருத்து பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் உடல் தகுதி முதல் காய்ச்சல் வரையிலான அனைத்தும் பரிசோதிக்கப்பட்டது. இதையடுத்தே, போட்டியாளர்கள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர். பிக்ராக் டர்ட்பார்க்கைச் சேர்ந்த நிலேஷ் துமல் அகா நெல்லியின் மேற்பார்வையிலேயே முதல் நாளின் போட்டி நடைபெற்றது.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

இதில், விஜேந்திர நீலகிரி அகா பீமா மற்றும் ஷாகுல் ஷாஸ் ஷர்மா ஆகியோர் சிறந்த போட்டியாளராக உருவெடுத்தனர். முதல் நாளின் முதல் பாதியில் நடைபெற்ற போட்டியில் பத்து பேர் பங்கேற்றனர். இவ்வாறு அடுத்தடுத்ததாக மேல்கூறிய வகுப்புகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவுக்குமான போட்டி நடைபெற்றது.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

தொடர்ந்து சிறுவர்களுக்கான போட்டியும் நடைபெற்றது. சிறிய டிராக்கிலேயே அவர்களுக்கான போட்டி நடைபெற்றது. அது, சிறிய சிறிய மேடுகளையும், சரிவுகளையும் கொண்ட டிராக்காகும். அதில், அவர்கள் மிக சுதந்திரமாகவும், எஞ்ஜாய் செய்தும் போட்டியை கையாண்டனர். இதேபோன்று, பெண்களுக்கான போட்டியும் அன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

இடையில், இடைவெளி மற்றும் போட்டி முன்னோட்டம் உள்ளிட்டவற்றையும் போட்டியாளர்கள் மேற்கொண்டனர். இந்த போட்டியில் இலகு ரக ஹீரோ இம்பல்ஸ் முதல் நடுத்தர எடைக் கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் வரை பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

நாள் இரண்டு:

போட்டி காலை 7.30 மணிக்கே தொடங்கப்பட்டது. உள்ளே வந்த சிறிய நேரத்தில் போட்டியாளர்கள் ஓடு தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக, வாகனத்தின் பிரேக், திறன், தரம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. போட்டியாளர்கள் யாரேனும் சட்ட விரோத மாடிஃபிகேஷனை மேற்கொண்டிருந்தார்களா என்ற ஆய்வும் செய்யப்பட்டது. இத்துடன், போட்டியாளர்கள் பயன்படுத்திய உடை மற்றும் பிற பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

இதன் பின்னரே அவர்கள் போட்டி தளத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வகுப்பு வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. அதாவது, வகுப்பு 1, வகுப்பு 2, வகுப்பு 3 என பைக்கின் சிசி திறனுக்கு ஏற்றபடி வரிசையாக போட்டிகள் நடைபெற்றது. இவ்வாறு, பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கான பந்தயம் முடிவடைந்த பின்னரே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறுவர்களுக்கான போட்டி நடைபெற்றது.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

இம்முறை, அதாவது முதல் நாளில் இருந்ததைக் காட்டிலும் மிக நீளமான பாதையில் வைத்து இரண்டாம் நாளில் அவர்களை போட்டியிடச் செய்தனர். இதன்படி, சற்று கூடுதல் நீளம் கொண்ட பாதை அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. அதில், மிகுந்த உற்சாகத்துடன் சிறுவர்கள் தங்களுக்கான இருசக்கர வாகனங்களை ஓட்டி மகிழ்ந்தனர்.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

கைதேர்ந்த பந்தய வீரர்களைப் போல் அவர்கள் செயல்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. குறிப்பாக, பல சிறுவர்கள் அதிக சரிவான பாதையைக் கண்டு மனம் தளராமல் சென்றது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, மிக ஆபத்தான சாலைகளில்கூட அவர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்பது ஆச்சரியத்தின் உச்சம்.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

வெற்றியாளர்கள்:

சுட சுட நடைபெற்ற போட்டியில் பலர் தங்களின் திறனை வெளிப்படுத்தும் வகையிலேயே போட்டியிட்டனர். சில சந்தர்ப்ப சூழ்நிலையால் குறிப்பிட்டோர் போட்டியை விட்டு பாதியிலே விலகும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும், சிலர் போட்டியைத் தொடர்ந்து மேற்கொண்டு வெற்றி வாகை சூடியிருக்கின்றனர்.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

இதோ வெற்றியாளரின் பெயரும், அவர் பயன்படுத்திய பைக்கின் பெயர்களும்;

கிளாஸ் 1 (250சிசிக்கு மேல்): அஜய் இவர் ஹீரோ நிறுவனத்தின் இம்பல்ஸ் பைக்கை இயக்கியிருந்தார். இவர், வெறும் 23 நிமிடம் மற்றும் 08 செகண்டுகளில் அனைத்து சுற்றுகளையும் முடித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கிளாஸ் 2: 250 சிசிக்கு மேல் - 400 சிசிக்குக் கீழே எனும் பிரிவில் நிஹல் என்பவரே வெற்றி வாகை சூடியிருக்கின்றார். இவர் கேடிஎம்390 அட்வென்சர் பைக்கை பயன்படுத்தினார். இவர், வெறும் 26 நிமிடங்கள், 47 செகண்டுகளில் அனைத்து சுற்றுகளையும் முடித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

கிளாஸ் 3: 401 சிசி-க்கு மேல் - 550 சிசி-க்கு கீழே, இப்பிரிவில் ஜகதீஸ் என்பவரே வெற்றிப் பெற்றிருக்கின்றார். இவர் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்கை பயன்படுத்தினார். இவர், வெறும் 26 நிமிடங்கள் மற்றும் 39 செகண்டுகளில் அனைத்து சுற்றுகளையும் முடித்தார்.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

கிளாஸ் 4: 550 சிசி-க்கு மேல் - இந்த பிரிவில் பலக்ஷா ஷதக்ஸ்ரப்பா என்பவரே போட்டியின் வெற்றியாளர் ஆவார். இவர் டிரையம்ப் நிறுவனத்தின் டைகர் பயன்படுத்தியிருந்தார். இவர், வெறும் 25 நிமிடங்கள் மற்றும் 39 செகண்டுகளில் ஐந்து சுற்றுகளையும் முடித்தார்.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

பெண்கள் வகுப்பில் பிரைன்கா என்பவரே வெற்றி பெற்றிருக்கின்றார். இவர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கை பயன்படுத்தி ஒட்டுமைொத்த சுற்றுகளையும் வெறும் 37 நிமிடங்கள் மற்றும் 44 செகண்டுகளில் கடந்தார்.

மீடியா பிரிவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கைப் பயன்படுத்தி பிரதீக் குந்தர் என்பவர் வெற்றிப் பெற்றார். இவர், 26 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகளில் ஐந்து சுற்றுகளையும் முடித்தார்.

பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா!

குழந்தைகள் பிரிவில் சிறிய ரக பைக்கைப் பயன்படுத்தி ஜினேன்திரா சங்கவ் என்ற சிறுவனே வெற்றித் தட்டிச் சென்றார். இவர், 5.30 நிமிடங்கள் அனைத்து சுற்றுகளையும் முடிவடைத்து வெற்றி வாகைச் சூடினார்.

மேற்கூறிய இவர்களே 2020இன் வெற்றியாளர்கள் ஆவர்.

Most Read Articles
English summary
BigRock Dirtpark Trail Attack Challenge 2020: A Race Weekend With The Royal Enfield Himalayan. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X