கவாஸாகி இசட்1000 பைக்கின் என்ஜின் உடன் வெளிவரும் பிமோட்டா கேபி4...

இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பிமோட்டா விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள கேபி4 மோட்டார்சைக்கிளின் சில மங்கலான படங்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகி இசட்1000 பைக்கின் என்ஜின் உடன் வெளிவரும் பிமோட்டா கேபி4...

கவாஸாகி நிறுவனத்துடன் இந்நிறுவனம் கொண்டுள்ள கூட்டணியால் கவாஸாகி இசட்1000 பைக்கின் அடிப்படையில் புதிய கேபி4 பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் கூட்டணி டிசைனில் இதற்கு முன்னர் டெஸி எச்2 என்ற பைக் மாடல் வெளியாகி இருந்தது.

கவாஸாகி இசட்1000 பைக்கின் என்ஜின் உடன் வெளிவரும் பிமோட்டா கேபி4...

பிமோட்டா நிறுவனத்தில் இருந்து வெளியான முதல் ஹப்-ஸ்டீயர்டு சூப்பர்சார்ஜ்டு ஸ்போர்ட் பைக்கான இதில் கவாஸாகி நிஞ்சா எச்2 பைக்கின் 998சிசி, இன்-லைன் 4 சூப்பர்சார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது.

கவாஸாகி இசட்1000 பைக்கின் என்ஜின் உடன் வெளிவரும் பிமோட்டா கேபி4...

தற்போது இந்த கூட்டணியில் வெளிவரவுள்ள இரண்டாவது பைக் மாடலான கேபி4-ல் அதிகப்பட்சமாக 140 பிஎச்பி பவர் மற்றும் 108 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதற்கான என்ஜின் கவாஸாகி இசட்1000 பைக்கில் இருந்து தான் பெறப்படவுள்ளது.

கவாஸாகி இசட்1000 பைக்கின் என்ஜின் உடன் வெளிவரும் பிமோட்டா கேபி4...

இருப்பினும் பைக்கின் மற்ற பாகங்களான சேசிஸ், பாடிவொர்க் மற்றும் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை கேபி4 பைக்கிற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து தற்போது வெளிவந்துள்ள இந்த பைக்கின் மங்கலான படங்களின் மூலமாக வேறெதையும் அறிய முடியவில்லை.

கவாஸாகி இசட்1000 பைக்கின் என்ஜின் உடன் வெளிவரும் பிமோட்டா கேபி4...

மொத்தமாக பைக் ரெட்ரோ தோற்றத்தை பெற்றிருப்பதை இந்த படங்களை பார்க்கும்போது தெரியவருகிறது. இதனால் பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் ஹார்ட்வேர் பாகங்களை எதிர்பார்க்கலாம். இந்த வகையில் தலைக்கீழான முன்புற ஃபோர்க், பின்புற மோனோஷாக் உடன் க்ளிப் ஆன் ஹேண்டில்பார்களை இந்த பைக் பெற்றிருக்கும்.

கவாஸாகி இசட்1000 பைக்கின் என்ஜின் உடன் வெளிவரும் பிமோட்டா கேபி4...

பிமோட்ட்டா நிறுவனம் புதிய கேபி4 பைக்கை இந்த வருட நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்மா 2020 கண்காட்சியில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இத்தாலியில் கொரோனாவின் தாக்கம் அடுத்த சில மாதங்களுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்து தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுமா என்பது தெரிய வரும்.

கவாஸாகி இசட்1000 பைக்கின் என்ஜின் உடன் வெளிவரும் பிமோட்டா கேபி4...

கடந்த வருடத்தில் இந்த இத்தாலிய ஆட்டோமொபைல் நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியாக கவாஸாகி நிறுவனம் அந்நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்கி இருந்தது. இதனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு பிமோட்டா நிறுவனத்தில் இருந்து வெளிவரும் அனைத்து பைக்குகளும் கவாஸாகி நிறுவனத்தின் என்ஜின்களை தான் கொண்டிருக்கும் என்பது உறுதி.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Bimota KB4 Teased In First Pictures
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X