ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவர்களின் தேவையை பூர்த்தி செய்கின்ற வகையிலான ஓர் தரமான சேவை அங்கு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

இயற்கை எழில் கொஞ்சும் அழகைக் கொண்டிருப்பதால் மலைகளின் அரசி என ஊட்டி போற்றப்படுகின்றது. இது தமிழகத்தின் மிகவும் புகழ்வாய்ந்த சுற்றுலாதளங்களில் ஒன்றாகும். இதனாலேயே புது மன தம்பதிகள் பலர் தங்களின் தேநிலவிற்கு ஊட்டியையே முதன்மை இடமாக தேர்வு செய்கின்றனர். இங்கு புது மன தம்பதிகள் மட்டுமின்றி குடும்பத்தினர்களும் ஏராளமாக சுற்றுலா பயணமாக வந்து செல்கின்றனர்.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

இந்நிலையில், சுற்றுலா வாசிகளைக் கூடுதலாக கவரும் நோக்கில் பிலைவ் என்ற நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவொரு தீங்கும் விளைவிக்காக இ-பைக்குகளை வாடகைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இது மின்சாரத்தால் இயங்கும் பெடலுடைய பைக்காகும். இதனாலயே இந்த இ-பைக்குகள் சிறிதளவும் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காது என கூறப்படுகின்றது.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

மேலும், இந்த இ-பைக்குளின் சார்ஜ் தீர்ந்துவிட்டால், அதன் பயனருக்கு பெடல் அம்சம் உறுதுணையாக இருக்கும். ஆகையால், சார்ஜ் தீர்ந்த பின்னரும் அதனை சாதாரண மிதிவண்டியாக பயன்படுத்தி இலக்கை சேர முடியும்.

முன்னதாக, இதுபோன்ற வாடைக இருசக்கர வாகனங்களை பெரு நிறுவனங்கள் ஊட்டியில் களமிறக்கின. ஆனால், அவை பெரியளவில் வெற்றிப் பெறவில்லை.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் இளைஞர் சிலர், அதை அதிவேகமாக இயக்கி விபத்தை சந்தித்த நிகழ்வுகள் அதிகம் அரங்கேறின. இந்த காரணத்தினாலயே முன்னதாக தொடங்கப்பட்ட வாடகை வாகன சேவை பெரியளவில் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவின. ஊட்டி மலைப் பாதை பெரும் ஆபத்து நிறைந்த வளைவுகளை அதிகமாக கொண்டிருக்கின்றது.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

அதில், ஏற்கனவே பழக்கமுடையவர்களே செல்ல அச்சப்படுகின்ற சூழ்நிலையில், புதிய நபர்கள் மிகவும் அசால்டாக நொடிப்பொழுதில் 60, 80 என உச்சபட்ச கிமீ வேகத்தை எட்டிவிடுகின்றனர். இதன் விளைவாக கொண்டை ஊசி வளைவுகளில் வாகனத்தைத் திருப்ப முடியாமல் விபத்தில் சிக்கி பேராபத்தைச் சந்தித்தனர். இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக வாடகை வாகனங்களின் பயன்பாடு முடக்கப்பட்டது.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

இருப்பினும், ஒரு சில தனியார் அமைப்புகள் அதிக வாடகைக்கு சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவது கூறப்படுகின்றது. குறைந்தது ரூ. 400 முதல் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன. சில இடங்களில் ரூ. 500 மற்றும் ரூ. 600 கூட ஆரம்பநிலை வாகனங்களுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த உச்சபட்ச தொகையில் வாடகைக்கு விடப்படும் தனியார் அமைப்பு வாகனங்கள் முறையான பராமரிப்பின்றி, பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகின்றன.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

ஆகையால், அவற்றை இயக்குவது சுற்றுப்புறச் சூழலுக்கு மட்டுமின்றி ஓட்டுநருக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒன்றாக மாறிவிடுகின்றனது. ஆனால், இப்போது களமிறங்கியிருக்கும் பிலைவ் வாடகை வாகனங்கள் அம்மாதிரியான ஆபத்தை துளியளவும் பயனருக்கு ஏற்படுத்தாது. ஏனென்றால், மிக குறைந்த வேகத்திலேயே செல்லக்கூடியவையாக இந்த இ-பைக்குகள் இருக்கின்றன.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

ஆகையால், அதிகபட்ச வேகத்தில் செல்லும்போதுகூட எளிதில் கட்டுபடுத்த முடியும். அந்தளவிற்கு குறைந்தபட்ச வேகமுடைய மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது.

மேலும், இதற்கு குறைந்தளவு வாடகை நிர்ணயிக்கவே பிலைவ் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ஏற்கனவே, இந்நிறுவனத்தின் வாடகை இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தளங்களான கோவா, புதுச்சேரி மற்றும் முக்கிய மாநிலங்களான கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் இருக்கின்றன.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

இந்நிலையிலேயே ஆரம்பகட்டமாக தமிழகத்தின் புகழ்வாய்ந்த சுற்றுதலமான ஊட்டியில் பிலைவ் நிறுவனத்தின் வாடகை இ-பைக்குகள் களமிறக்கப்பட்டுள்ளன.

இந்த இ-பைக் ஒரு முழுமையான சார்ஜில் 50 கிமீ தூரம் வரை செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், இதில் தொழில்நுட்ப வசதியாக டிஜிட்டல் திரை ஒன்று வழங்கப்பட்டிருக்கின்றது. இது, இ-பைக்கின் சார்ஜ் அளவு, ரேஞ்ச் விகிதம் உள்ளிட்ட தகவல்களை ரைடருக்கு வழங்கும்.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

வாடகை இ-பைக் அறிமுகத்தைத் தொடர்ந்து பிலைவ் நிறுவனத்தின் இணை இயக்குநரும், சிஓஓ-வுமான சந்தீப் முகர்ஜீ பேசியதாவது, "ஊட்டியை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றும் நோக்கில் சுற்றுப்புறச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இ-பைக்குகள் வாடகைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்காக, 'மேக் ஊட்டி பியூட்டிஃபுல்' என்ற நிர்வாகத்துடன் நாங்கள் கூட்டணி வைத்திருக்கின்றோம். இதன்மூலம் ஊட்டி முழுவதும் இ-பைக்குகளை வாடகை விட இருக்கின்றோம்" என்றார்.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

பிலைவ் நிறுவனத்தின் இந்த வாடகை இ-பைக்குகள் தற்போது அதிக கட்டணத்தை வசூலித்து வரும் வாடகை வாகனங்களுக்கு குறிப்பாக தனியார் வாடகை கார் மற்றும் ஆட்டோக்களின் புக்கிங்கை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செல்ல விரும்புபவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கான பதிவுதான்...

மேலும், ஊட்டி குளிரில் ஜாலி ரைடு செய்ய விரும்பும் பயணிகளுக்கு அதிகளவில் இந்த இ-பைக்குகள் உதவ இருக்கின்றன. இதனால், ஊட்டியின் பசுமை பணியில் லேசான பங்கினை அவை வகிக்கும் என கூறப்படுகின்றது.

Source: ET Auto

Most Read Articles
English summary
BLive Launches Rental eBike In Ooty. Read In Tamil.
Story first published: Wednesday, March 11, 2020, 16:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X