கேடிஎம் 790 ட்யூக் பைக்கிற்கு போட்டி ரெடி... புதிய பைக்குகளை களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ...

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் தனது லேட்டஸ்ட் மிடில்வெயிட் மோட்டார்சைக்கிள்களான எஃப் 900ஆர் மற்றும் எஃப் 900எக்ஸ்ஆர் மாடல்களை வருகிற 21ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த இரு பிஎம்டபிள்யூ பைக்குகளையும் பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கிற்கு போட்டி ரெடி... புதிய பைக்குகளை களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ...

பிஎம்டபிள்யூவின் இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் சர்வதேச அளவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியின் மூலமாக வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டன.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கிற்கு போட்டி ரெடி... புதிய பைக்குகளை களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ...

இதில் எஃப் 900ஆர் பைக்கின் விலை ரூ.11 லட்சம் அளவிலும் அட்வென்ஜெர் ரக ஸ்போர்ட்ஸ்-டூரர் பைக் மாடலான எஃப் 900எக்ஸ்ஆர்-ன் விலை ரூ.12 லட்சம் அளவிலும் இந்திய எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கிற்கு போட்டி ரெடி... புதிய பைக்குகளை களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ...

இந்த இரு பைக்குகளிலும் பிஎம்டபிள்யூ எஃப் 850ஜிஎஸ் பைக்கில் பொருத்தப்பட்டு வரும் 853சிசி என்ஜின் அமைப்பு தான் 895சிசி-ல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த 895சிசி என்ஜின் இந்த இரு புதிய பைக்குகளிலும் 105 பிஎச்பி மற்றும் 92 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தவுள்ளன.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கிற்கு போட்டி ரெடி... புதிய பைக்குகளை களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ...

ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மற்றும் கவாஸாகி இசட்900 பைக்குகளை விட இவற்றின் பிஎச்பி பவர் சற்று குறைவு தான் என்றாலும், டார்க் திறன் 13 என்எம் வரையில் அதிகமாக உள்ளது. பிஎம்டபிள்யூவின் இந்த இரு புதிய பைக்குகளும் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கிற்கு போட்டி ரெடி... புதிய பைக்குகளை களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ...

ஆனால் இவை இரண்டிற்கு போட்டியாக கருதப்படும் கேடிஎம் 790 ட்யூக் மற்றும் டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக்குகள் இன்னமும் பிஎஸ்6 அப்டேட்டை பெறவில்லை. பிஎம்டபிள்யூவின் நாக்டு மோட்டார்சைக்கிள் டிசைன் தத்துவம் கடந்த சில வருடங்களாக எஸ் 1000ஆர் மற்றும் பழைய எஃப் 800ஆர் மாடல்கள் உள்பட ஜி310ஆர் பைக்கிலும் செயல்படுத்தப்படவில்லை.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கிற்கு போட்டி ரெடி... புதிய பைக்குகளை களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ...

எஃப் 900ஆர், கூர்மையான வெட்டுகளுடனான பெட்ரோல் டேங்க் மற்றும் ஓவல் எல்இடி ஹெட்லைட் உடன் பெரிய அளவிலான தோற்றத்தை பெற்றுள்ளது. இதன் நிமிர்ந்த ரைடிங் நிலைப்பாடு, நகர்புற சாலைகளுக்கு ஏற்றதாக மட்டுமில்லாமல் சிறப்பான டூரர் பயணத்தையும் வழங்கும்.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கிற்கு போட்டி ரெடி... புதிய பைக்குகளை களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ...

ஆனால் முழுக்க முழுக்க டூரிங் பயணத்திற்கு ஏற்ற மோட்டார்சைக்கிளை தேடுக்கிறீர்கள் என்றால், எஃப் 900எக்ஸ்ஆர் மாடல் தான் உங்களுக்கு கச்சிதமாக இருக்கும். 2018ல் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் 9செண்டொவின் தயாரிப்பு வெர்சனான இந்த 900சிசி அட்வென்ஜெர் பைக்கில் நீண்டத்தூர பயணத்திற்கு ஏற்ற சஸ்பென்ஷன் மற்றும் சாலை-சார்புடைய சக்கர அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 790 ட்யூக் பைக்கிற்கு போட்டி ரெடி... புதிய பைக்குகளை களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ...

இதன் சில ட்ரிம்கள் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கை கொண்டுள்ளன. அதாவது இந்த ட்ரிம்களில் ப்ரீலோடு மற்றும் ரீபாண்ட் அமைப்புகளை பொத்தானை தொடுவதின் மூலமாக மாற்ற முடியும்.

Most Read Articles
English summary
BMW’s KTM 790 Duke Rival Has An India Launch Date
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X