பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் வெளியீடு... ஓசூர் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி துவங்கியது

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. படங்கள், கூடுதல் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் வெளியீடு... ஓசூர் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி துவங்கியது!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் பிரிமீயம் பைக் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் விலை குறைவான மாடல்களாக ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய மாடல்கள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதி அமலுக்கு வந்த நிலையில், இந்த பைக்குகளின் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் வெளியீடு... ஓசூர் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி துவங்கியது!

எஞ்சின் மட்டுமின்றி தோற்றத்தில் சில மாறுதல்களுடன் இந்த பைக் மாடல்கள் வரும் 8ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இந்த நிலையில், சாகசப் பயணத்திற்கு ஏற்ற மாடலாக உருவாக்கப்பட்ட ஜி310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடலின் உற்பத்தி ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆலையில் துவங்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் வெளியீடு... ஓசூர் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி துவங்கியது!

உற்பத்திப் பிரிவில் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் உற்பத்தி செய்யப்படும் படம் மற்றும் கூடுதலாக சில படங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில், ஜி310 ஜிஎஸ் பைக்கின் ஹெட்லைட் டிசைன் சிறிய மாறுதல் செய்யப்பட்டு வருகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் வெளியீடு... ஓசூர் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி துவங்கியது!

மேலும், நீலம், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணக் கலவையுடன் இந்த பைக்கில் புதிய வண்ணத் தேர்வு வழங்கப்பட உள்ளதும் இந்த புதிய படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. அதாவது, தோற்றத்தில் புதுப்பொலிவுடன் இந்த பைக் மாடல் வர இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் வெளியீடு... ஓசூர் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி துவங்கியது!

இந்த பைக்கின் மூக்குப்பகுதியில் ராலி ரேஸ் பைக்குகளில் இருப்பது போன்ற பாடி டீக்கெல் ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின், சக்கரங்கள், பெட்ரோல் டேங்க் ஆகியவை கருப்பு வண்ணத்திலும், ட்ரெல்லிஸ் ஃப்ரேம் அமைப்பானது சிவப்பு வண்ணமும் தீட்டப்பட்டுள்ளது. மேலும், இதன் ஸ்டிக்கர் அலங்காரத்தை பார்க்கும்போது ஸ்பெஷல் எடிசன் மாடலாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் வெளியீடு... ஓசூர் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி துவங்கியது!

புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கில் பிஎஸ்4 மாடலில் இருந்த அதே எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு தக்கவாறு மாற்றங்கள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்6 மாடலில் இருக்கும் அதே எஞ்சின்தான் இதிலும் உள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் வெளியீடு... ஓசூர் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி துவங்கியது!

இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் 312 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. செயல்திறனில் எந்த வேறுபாடும் இருக்காது என்றே தெரிகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் வெளியீடு... ஓசூர் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி துவங்கியது!

இந்த பைக்கில் முன்புறத்தில் தங்க வண்ண பூச்சுடன் கூடிய அப்சைடு டவுன் ஃப்ரோக்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடல் வெளியீடு... ஓசூர் டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி துவங்கியது!

புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் பிஎஸ்6 மாடலுடன் ஜி310 ஆர் பிஎஸ்6 மாடலும் வர இருக்கிறது. இந்த இரண்டு பைக்குகளுக்கும் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. வரும் 8ந் தேதி விலை அறிவிப்புடன் சந்தைக்கு வருகின்றன. இந்த பைக்குகளுக்கு மிக குறைவான மாதத் தவணை கொண்ட கடன் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
BMW Motorrad India has revealed the upcoming G 310 GS motorcycle in the Indian market ahead of its launch. The company has also announced that the production of its entry-level adventure motorcycle has begun at its facility in Hosur.
Story first published: Friday, October 2, 2020, 11:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X