கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துவரும் மிகவும் மலிவான விலை கொண்ட பைக் மாடல்களான ஜி310 ஜிஎஸ் மற்றும் ஜி310 ஆர் 2021ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த பைக்குகள் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...

டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த பிஎம்டபிள்யூ பைக்குகள் நமது நாட்டு சந்தை மட்டுமில்லாமல் சர்வதேச சந்தையிலும் அறிமுகமாகவுள்ளன. இதில் 2021 பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கானது ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரக மோட்டார்சைக்கிள்களாகும்.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...

அதுவே ஜி310 ஜிஎஸ் அட்வென்ஜெர் டூரர் ரகத்தை சேர்ந்தது. இந்த இரு பிஎம்டபிள்யூ பைக்குகளும் இந்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனால் இவை விரைவில் தயாரிப்பு பணிகளில் உட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸினால் இவற்றின் தயாரிப்புகளில் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...

2021ஆம் ஆண்டிற்காக இந்த இரு பைக்குகளும் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றங்களை ஏற்றுள்ளன. இதில் ஜி310ஆர் பைக்கில் அப்டேட் செய்யப்பட்ட புதிய எல்இடி ஹெட்லேம்ப், திருத்தியமைக்கப்பட்ட எரிபொருள் டேங்க் நீட்டிப்புகள் மற்றும் ரேடியேட்டர் கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...

இதை தவிர்த்து பைக்கின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் கேடிஎம் 390 ட்யூக் மாடலுக்கு சரியான போட்டியினை கொடுப்பதற்காக முன்பை விட கூர்மையான தோற்றத்தை ஏற்றுள்ளது. இதை தான் தற்போது அபினாவ் பாட் என்ற யூடியுப் பக்கத்தில் வெளியாகியுள்ள இவற்றின் சோதனை ஓட்ட ஸ்பை படங்களும் வெளிக்காட்டுகின்றன.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...

ஜி310 ஜிஎஸ் அட்வென்ஜெர் டூரர் பைக்கானது அதன் ஸ்ட்ரீட் ஃபைட்டர் வெர்சன் உடன் புதிய எல்இடி ஹெட்லேம்ப் பகிர்ந்து கொண்டுள்ளது. பிஎம்டபிள்யூ டிசைனர்கள் பைக்கின் ஸ்டைலிங் பாகங்களை திருத்தியமைத்துள்ளனர். இதனால் இந்த இரு பைக்குகளும் முன்பை விட சற்று கூடுதலான ஸ்போர்ட்டியான நிலைப்பாட்டை பெற்றுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...

ஜி310ஆர் பைக்கில் ரோடு டயர்களும், அட்வென்ஜெர் வெர்சனில் ட்யூல்-பர்பஸ் ரப்பர் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஜி310 ஜிஎஸ் பைக்கானது கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கிற்கு போட்டியாக விளங்கி வருகிறது. இந்த இரு பைக்குகளிலும் 313சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூல்-இன்ஜெக்டட், லிக்யூடு-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு வருகிறது.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...

இந்த என்ஜின் மாசு உமிழ்வை குறைக்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கும். இதன்படி ஐரோப்பிய சந்தைக்காக இந்த என்ஜின் யுரோ5-க்கும் இந்திய சந்தைக்காக பிஎஸ்6 தரத்திற்கும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த என்ஜின் தற்சமயம் 33.6 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்குகிறது. பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மற்றும் ஜி310 ஆர் பைக்குகளின் விலைகள் இந்திய எக்ஸ்ஷோரூமில் முறையே ரூ.3.29 லட்சம் மற்றும் ரூ.2.99 லட்சமாக உள்ளது. அப்டேட் பணிகளால் இந்த விலைகளில் அதிகரிப்பு கொண்டுவரப்படவுள்ளது.

Most Read Articles
English summary
2021 BMW G 310 GS spied in India as launch nears – KTM 390 ADV rival
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X