மிக சவாலான விலையில் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்.. ரூ.4,500 மாதத் தவணையில் வாங்கலாம்

இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்பொலிவுடன் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்கள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விலை தடாலடியாக குறைக்கப்பட்டு இருப்பதுடன், இந்த பைக் மாடல்களுக்கு ரூ.4,500 மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டமும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய இரண்டு மாடல்களும் முதல்முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், ஜி310ஆர் நேக்கட் வகை ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும், ஜி310 ஜிஎஸ் பைக் சாகசப் பயண வகையிலும் வடிவமைப்பை பெற்றுள்ளன.

இந்த இரு பைக்குகளும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு தக்கவாறும் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன. சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் வண்ணக் கலவையில் புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் பிஎஸ்6 எஞ்சினுடன் வந்துள்ளன.

சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்

இரண்டு பைக்குகளின் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் டிசைனும் மாற்றங்களுடன் புதிய பொலிவு பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய டெயில் லைட்டுகள் மற்றும் புதிய புகைப்போக்கி அமைப்பும் இடம்பெற்றுள்ளன.

சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் 310ஜிஎஸ் பைக்குகளில் டிஎஃப்டி எல்சிடி திரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பழைய மாடல்களில் வழங்கப்பட்ட அதே எல்சிடி திரை கொண்ட முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்குகளி்ல அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய க்ள்ட்ச் லிவர் கொடுக்கப்பட்டுள்ளன.

சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்

அதேநேரத்தில், புளூடூத் இணைப்பு மூலமாக உரிமையாளர்கள் ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்துக் கொள்ளலாம். நேவிகேஷன் மற்றும் பைக் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களை பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக பெறும் வாய்ப்புள்ளது.

சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்

பிஎம்டபிள்யூ ஜி310 பைக் மாடல்களில் மிக முக்கிய மாற்றமாக, இதன் 313 சிசி எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ரைடு பை ஒயர் த்ராட்டில் சிஸ்டமும் உள்ளது. இந்த பைக்குகள் மணிக்கு 143 கிமீ வேகம் வரை செல்லும்.

சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்

இந்த பைக்குகளில் முன்புறத்தில் 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதியுடன் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளன.

சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்

பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கில் கூடுதலாக டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் உள்ளன.

சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்

பழைய பிஎஸ்4 மாடலைவிட புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் மாடல்களின் விலை அதிரடியாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கிற்கு ரூ.2.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட ரூ.54,000 குறைவான விலையில் இந்த புதிய மாடல் வந்துள்ளது.

சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்

புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக் மாடலுக்கு ரூ.2.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.64,000 குறைவான விலையில் வந்துள்ளது. கடந்த மாதம் முதல் இந்த இரண்டு பைக் மாடல்களுக்கும் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது. ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்

மூன்று ஆண்டுகளுக்கு வரம்பில்லா கிலோமீட்டர்களுக்கான வாரண்டி திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுக்கான கூடுதல் கால வாரண்டி திட்டமும் பணம் செலுத்தி பெறமுடியும். அதேபோன்று, பைக்கில் பழுது, விபத்து உள்ளிட்ட அவசர சமயங்களில் நிறுவனத்திடம் இருந்து உடனடி உதவி பெறுவதற்கான திட்டமும் உள்ளது.

சூப்பர் மாற்றங்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்

இந்த இரண்டு பைக் மாடல்களுக்கும் ரூ.4,500 மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டத்தில் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. பிஎம்டபிள்யூ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்த சிறப்பு கடன் திட்டம் வழங்கப்படும்.

Most Read Articles

English summary
BMW G310R AND G310GS BS6 Bike Models Launched In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X