புதிய 900சிசி பைக்குகளை இந்தியாவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ள பிஎம்டபிள்யூ...

கடந்த வாரத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிஎம்டபிள்யூ எஃப் 900ஆர் மற்றும் எஃப் 900எக்ஸ்ஆர் பைக் மாடல்களின் புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த இரட்டை பைக்குகள் இயக்கத்தின் போது எவ்வாறு இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறும் வகையிலும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் இந்த புதிய டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது.

புதிய 900சிசி பைக்குகளை இந்தியாவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ள பிஎம்டபிள்யூ...

இந்நிறுவனம் இந்த இரு 900சிசி பைக் மாடல்களுக்கும் எக்ஸ்ஷோரூமில் முறையே ரூ.9.90 லட்சம் மற்றும் ரூ.10.50 லட்சத்தை விலையாக நிர்ணயித்துள்ளது. இவற்றில் ஒரே 895சிசி இணையான இரட்டை லிக்யூடு-கூல்டு என்ஜின் பைக்கிற்கு இயக்க ஆற்றலிற்காக பொருத்தப்பட்டுள்ளது.

MOST READ: பருவமழை ஆரம்பமாக போது... மழைநீரால் ஏற்படும் வாகன பழுதுகளை தடுப்பது எப்படி...?

புதிய 900சிசி பைக்குகளை இந்தியாவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ள பிஎம்டபிள்யூ...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 105 பிஎச்பி பவரையும், 92 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சஸ்பென்ஷன் அமைப்பாக இந்த பைக்குகளில் 43மிமீ தலைக்கீழான ஃபோர்க்ஸ் முன்புறத்திலும், மோனோஷாக் பின்புறத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய 900சிசி பைக்குகளை இந்தியாவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ள பிஎம்டபிள்யூ...

பிஎம்டபிள்யூ எஃப் 900எக்ஸ்ஆர் மாடல் அட்வென்ஜெர் பயணத்திற்கு ஏற்றதாக விளங்குவதால் இதில் முன்புறத்தில் 170மிமீ மற்றும் பின்புறத்தில் 172மிமீ என நீண்ட சஸ்பென்ஷன் ட்ராவல் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி ப்ரேக்கிங் சிஸ்டங்களை இரு பைக்குகளும் ஒரே மாதிரியாகவே பெற்றுள்ளன.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

புதிய 900சிசி பைக்குகளை இந்தியாவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ள பிஎம்டபிள்யூ...

அதன்படி இவற்றின் முன்புறத்தில் இரட்டை டிஸ்க் ப்ரேக்குகளும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. தொழிற்நுட்ப வசதிகளாக இந்த 900சிசி பைக்குகளில் முழு எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இணைப்புடன் உள்ள 6.5 இன்ச் முழு-டிஜிட்டல் டிஎஃப்டி திரை போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய 900சிசி பைக்குகளை இந்தியாவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ள பிஎம்டபிள்யூ...

மழை மற்றும் சாலை என்ற இரு விதமான ட்ரைவிங் மோட்களில் இயங்கக்கூடிய இந்த பைக்குகளில் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவையும் உள்ளது. இந்த இரு பைக் மாடல்களில் எஃப் 900ஆர் ஒரே ஒரு வேரியண்ட்டிலும், சில்வர் ரிம்களுடன் ப்ளாக் ஸ்ட்ரோம் மெட்டாலிக் மற்றும் சில்வர் மெட்டாலிக்/ரேசிங் ரெட் என்ற இரு நிறத்தேர்வுகளுடனும் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய 900சிசி பைக்குகளை இந்தியாவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ள பிஎம்டபிள்யூ...

அதுவே அட்வென்ஜெர் பயணங்களுக்காக பார்த்து பார்த்து தயாரிக்கப்பட்டுள்ள எஃப் 900எக்ஸ்ஆர், ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரோ என்ற இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் விலை தான் ரூ.10.50 லட்சமாகும். ப்ரோ வேரியண்ட் எக்ஸ்ஷோரூமில் ரூ.11.50 லட்சத்தை விலையாக கொண்டுள்ளது.

புதிய 900சிசி பைக்குகளை இந்தியாவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ள பிஎம்டபிள்யூ...

இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்ப இதன் ப்ரோ வேரியண்ட்டில் க்ரூஸ் கண்ட்ரோல், கியர்ஷிஃப்ட் அசிஸ்ட் மற்றும் எலக்ட்ரானிக் சஸ்பென்ஷன் அட்ஜெஸ்ட்மெண்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. எஃப் 900எக்ஸ்ஆர் பைக்கின் இந்த இரு வேரியண்ட்களுக்கும் லைட் வொய்ட் மற்றும் ரேசிங் ரெட் என்ற இரு நிறத்தேர்வுகள் வழங்கப்படுகிறது.

MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

புதிய 900சிசி பைக்குகளை இந்தியாவில் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ள பிஎம்டபிள்யூ...

கொரோனாவினால் ஆட்டோமொபைல் துறை அதாள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த இரு பிஎம்டபிள்யூ பைக்குகளும் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. ஏனெனில் சந்தையில் இதன் விற்பனை எண்ணிக்கைகளை எல்லாம் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் பெரியதாக எடுத்து கொள்ளாது.

Most Read Articles
English summary
All-New BMW F 900 R and F 900 XR TVC
Story first published: Tuesday, May 26, 2020, 0:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X