தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் ஜான் ஆபிரகாம் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தி வரும் இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

ஜான் ஆபிரகாம் பற்றி அறியாத நபர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். தமிழில் எப்படி மாஸ் காட்டும் ஹூரோக்களாக அஜித், விஜய் ஆகியோர் வளம் வந்துக் கொண்டிருக்கின்றனரோ, அதோபோன்று பாலிவுட் திரையுலகில் மிகவும் புகழ்வாய்ந்த நடிகர்களில் ஒருவராக ஜான் ஆபிரகாம் இருக்கின்றார். இவர் தூம் போன்ற மிகவும் பிரபலமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

நடிப்பின் மீது மட்டுமின்றி வாகனங்கள் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார். இதனாலயே இந்திய ஆட்டோமொபைல்துறையில் இவரின் பெயர் அவ்வப்போது அடிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இவரிடத்தில் ஏராளமான விலையுயர்ந்த ஆடம்பர ரக வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதே இதற்கு காரணம். மேலும், இவரிடத்தில் இருக்கும் ஒரு சில வாகனங்களை இந்திய பெரும் புள்ளிகளிடத்தில்கூட நம்மால் காண முடியாது.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

அந்தளவிற்கு வாகனங்கள்மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக ஜான் ஆபிரகாம் இருக்கின்றார். அதிலும் இருசக்கர வாகனங்கள் மீது தனித்துவமான காதல் கொண்டவராக இருக்கின்றார். இது, அவரின் 12 வயதில் இருந்தே ஆரம்பித்தாகக் கூறப்படுகின்றது. இதன்காரணத்தினாலயே அவரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான பைக்குகள் தற்போதும் பயன்பாட்டில் இருக்கின்றன.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

அந்தவகையில், ஜான் ஆபிரகாம் கையிருப்பில் தற்போது 14க்கும் மேற்பட்ட சூப்பர் பைக்குகள் இருக்கின்றன.

அவ்வாறு, அவர் கடந்த காலங்களில் பயன்படுத்திய மற்றும் தற்போதும் பயன்படுத்தி வரும் பைக்குள் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

யமஹா ஆர்டி 350

யமஹாவின் ஆர்டி350 பைக்கை இருசக்கர வாகனங்களின் சின்னம் என்றே கூறிவிடலாம். அந்தளவிற்கு புகழ்வாய்ந்த பைக்காக அது இருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்த பைக்கிற்கு இப்போதும் ரசிகர்கள் இருக்கின்றனர். எனவேதான், இந்த பைக் ஜான் ஆபிரகாமையும் ஈர்த்துள்ளது. இந்த பைக்கை அவர் செகண்ட் ஹேண்டில் வாங்கியதாக கூறப்படுகின்றது. 1993 முதல் 1996 வரை இந்த பைக்கில்தான் அவருடைய பெரும்பாலான பயணங்கள் இருந்துள்ளன. இதைத்தொடர்ந்து, 21 ஆயிரம் ரூபாய் லாபத்திற்கு அவர் அந்த பைக்கை விற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

ராஜ்தூத் ஜிடிஎஸ்175

ஜான் ஆபிரகாம் ராஜ்தூத் நிறுவனத்தின் ஜிடிஎஸ்175 மாடலையும் அவரது சிறு வயதில் பயன்படுத்தி வந்துள்ளார். இது இந்திய சந்தையில் தனித்துவமான விற்பனையைப் பெற்ற ஆக சிறந்த பைக்காகும். ஜான் பயன்படுத்திய அப்பைக்கின் புகைப்படம் கிடைக்கவில்லை. இருப்பினும், அவர் ஊடக பேட்டி ஒன்றில் இந்த பைக்கைப் பயன்படுத்தியாக குறிப்பிட்டிருந்தார்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

ராயல் என்பீல்டு புல்லட்

ராயல் என்பீல்டு புல்லட்டும் ஜான் ஆபிரகாமைக் கவர்ந்த வாகனங்களில் ஒன்றாகும். இதன்காரணத்தினாலயே அவர் புல்லட்டையும் தன் வசம் வைத்திருந்தார். இத்துடன், மசிஸ்மோ எனும் மாடலையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இவையிரண்டையும் பயன்படுத்தி வரும் நபர் என்பதால் இவர் உலக சூப்பர் பைக் உரிமையாளர்களின் பட்டியலில் இணைந்தார். பின்னாளில் இந்த பைக்குகளை அவர் விற்றார்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

கவாஸாகி இசட்எக்ஸ்11-டி2

கவாஸாகி இசட்எக்ஸ்11-டி2 மாடல்தான் ஜான் ஆபிரகாம் வாங்கிய முதல் சூப்பர் பைக்காகும். இதுதான் உலகின் அதிதிறன் கொண்ட பைக். ஹோண்டா சிபிஆர்1100எக்ஸ்எக்ஸ் மாடலைக் காட்டிலும் மிக அதிக திறனுடையது. இந்த மாடலின் அப்கிரேட் வெர்ஷன் சந்தையில் விற்பனைக்கு வந்த பின்னர் ஜான் உடனே பழைய மாடலை விற்றுவிட்டு புதிய மாடலுக்கு மாறினார். ஆனால், இதில் புதிய மாடலைக் காட்டிலும் பழைய மாடலே சிறப்பான மாடல் என்றும், அதை மீண்டும் வாங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

சுசுகி ஹயபுசா

ஜான் ஆபிரகாம் பல திரைப்படங்களில் இந்த பைக்கைப் பயன்படுத்தியிருப்பார். குறிப்பாக, தூம் திரைப்படத்தில் இந்த பைக்கைதான் அவர் அதிகம் பயன்படுத்தியிருப்பார். இது இந்தியாவில் அதிக புகழ்வாய்ந்த சூப்பர் பைக்குகளில் ஒன்றாக இருக்கின்றது. இது மணிக்கு 305 கிமீ என்ற வேகத்தில் செல்லும் திறனுடைய பைக்காகும்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்12ஆர்

இந்த பைக் சுசுகி ஹயபுசாவிற்கு போட்டியாக சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர் பைக்காகும். இதன் ஒரு யூனிட்டையும் ஜான் ஆபிரகாம் பயன்பாட்டிற்காக வாங்கியிருந்தார். ஆனால், இதனை ஒரு சில ஆண்டுகள் மட்டுமே அவர் பயன்படுத்தினார்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1

2006 ஆம் ஆண்டில் யமஹா நிறுவனத்திற்கான பிராண்ட் அம்பாசிடராக ஜான் ஆபிரகாம் பதவியேற்றார். அப்போது, அந்நிறுவனம் சார்பாக அவருடைய பயன்பாட்டிற்காக புத்தம் புதிய ஒய்இசட்எஃப்-ஆர் பைக் வழங்கப்பட்டது. இந்த பைக்கை திரைப்பட இயக்குநர் தருன் மன்சுகானி என்பவருக்கு 2008ம் ஆண்டில் பரிசாக திருப்பி வழங்கினார்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

யமஹா வி-மேக்ஸ்

ஜான் ஆபிரகாம் இடத்தில் இருக்கும் மற்றுமொரு சூப்பர் பவர்ஃபுல் பைக்காக வி மேக்ஸ் இருக்கின்றது. இந்த பைக்கில் பல முறை ஜன் வலம் வந்ததை அவரின் ரசிகர்கள் கண்டிருப்பதாக கூறுகின்றனர். மேலும், அந்த நேரத்தில் அவர் கேமிராவின் கண்களிலும் சிக்கியிருக்கின்றார். இந்த பைக்கைதான் 2013ம் ஆண்டில் இயக்குநர் சஞ்சய் குப்தாவிற்காக ஜான் பரிசாக வழங்கி விட்டார்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000

2013ம் ஆண்டில்தான் சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 பைக்கை ஜான் வாங்கினார். இது அவர் பயன்படுத்தும் பைக்குகளிலேயே மிகவும் ஆக்ரோஷமான மாடல் ஆகும். இதையும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

அப்ரில்லா ஆர்எஸ்வி4 ஆர்எஃப்

இத்தாலிய நிறுவனமான அப்ரில்லாவின் மிகவும் சக்திவாய்ந்த பைக்குகளில் ஒன்றாக ஆர்எஸ்வி4 ஆர்எஃப் மாடல் இருக்கின்றது. இதில், 1,078 சிசி திறன் கொண்ட 4 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதி திறன் காரணத்தினாலயே ஜான் இந்த பைக்கை வாங்கியிருந்தார். இதுகுறித்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

டுகாட்டி பனிகேல் வி4

இத்தாலி நாட்டின் மற்றுமொரு உலக புகழ்வாய்ந்த நிறுவனமாக டுகாட்டி இருக்கின்றது. இந்நிறுவனத்தின் அதிதிறன் கொண்ட மாடலான பனிகேல் வி4 எனும் பைக்கைதான் ஜான் சில காலங்கள் பயன்படுத்தினார். இது 998 சிசி திறன் கொண்ட பைக்காகும். இது அதிகபட்சமாக 221 பிஎஸ் மற்றும் 112 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

எம்வி அகுஸ்டா எஃப்3 800

ஜான் ஆபிரகாம் எம்வி அகஸ்டா நிறுவனத்தின் எஃப்3 800 மாடலையும் பயன்படுத்தியுள்ளார். இது மிகவும் அழகான பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக்கில் 798 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது. இது, அதிகபட்சமாக 148 பிஎஸ் மற்றும் 88 என்எம் டார்க்கை வெளிப்படுத்த உதவும்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

டுகாட்டி டியாவல்

டுகாட்டி நிறுவனத்தின் மற்றுமொரு சிறப்பு வாய்ந்த தயாரிப்பாக டியாவல் பைக் இருக்கின்றது. இது உலகின் மிகவும் அழகான பைக்குகளில் ஒன்றாகும். சில காலம் மட்டுமே இந்த பைக்கைப் பயன்படுத்தி வந்த ஜான் தனது துறையைச் சேர்ந்த ஒருவருக்கு பரிசாக வழங்கியதாகக் கூறப்படுகின்றது.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

புல் சிட்டி கஸ்டம்ஸ் அகுமா

பைக்குகள் மீது அதிக ஆர்வத்தை ஜான் ஆபிரகாம் கொண்டிருப்பதால் சில கஸ்டம் பைக்குகளையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். அந்தவகையில் பிரபல பைக் கஸ்டமைஸ் நிறுவனமான புல் சிட்டியிடம் இருந்து அகுமா எனும் மாடலை அவர் வாங்கியிருந்தார். இது சாலையில் செல்லும்போது மிகவும் ஆக்ரோஷமான மாடல் எனும் தோற்றத்தை வெளிப்படுத்தும்.

தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..?

ராஜ் புத்னா லைட்ஃபூட்

ஜான் ஆபிரகாம் இடத்தில் இருக்கும் மற்றுமொரு கஸ்டமைஸ் செய்யப்பட்ட பைக்குகளில் ஒன்றாக ராஜ் புத்னா லைட்ஃபூட் இருக்கின்றது. இது ராயல் என்பீல்டு பைக்கின் மாடிஃபை செய்யப்பட்ட மாடல் ஆகும். இருப்பினும், இதன் தோற்றம் மற்றும் அம்சங்கள் மிகவும் தனித்துவமான ஒன்றாக காட்சியளிக்கின்றது.

இதுதவிர இன்னும் பல கஸ்டமைஸ் செய்யப்பட்ட மற்றும் அதி திறன் வாய்ந்த பைக்குகளை நடிகர் ஜான் ஆபிரகாம் பயன்படுத்தி வருகின்றார். இதில் ஒரு சிலவற்றை ஏற்கனவே விற்பனைச் செய்துவிட்ட நிலையில், ஒரு சில தனித்துவமான பைக்குகளை மட்டும் அவர் தற்போதும் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Star John Abraham Bike Collection. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more