பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!

பைக்கில் செல்பவர்கள் விபத்தில் சிக்கினால், தானியங்கி முறையில் உதவி கோரும் புதிய தொழில்நுட்பத்தை பாஷ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

 பைக்குகளுக்கான தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!

வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவிலும் இந்த நிறுவனம் பல இடங்களில் ஆலைகளை அமைத்து வாகன உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு முக்கிய உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகிறது.

 பைக்குகளுக்கான தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!

மேலும், வாகனங்களுக்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கண்டறிவதிலும் இந்த நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது கார்கள் விபத்தில் சிக்கினால், உடனடியாக அருகிலுள்ள அவசர மையங்களை தொடர்பு கொள்ளும் வசதி கொடுக்கப்படுகிறது.

 பைக்குகளுக்கான தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!

இந்தியாவில் விற்பனையில் பல கார்களில் இந்த வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இதே தொழில்நுட்பத்தை பைக்குகளிலும் பயன்படுத்தும் வசதியை பாஷ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

 பைக்குகளுக்கான தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!

இந்த புதிய தொழில்நுட்பமானது பைக்கின் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும். அதாவது, பைக் செல்லும் திரை, கோணம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கும். வினாடிக்கு 100 முறை பைக்கின் கோணம் குறித்த தகவல்களின் அடிப்படையில், பைக் நிலையாக செல்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கும்.

 பைக்குகளுக்கான தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!

ஒருவேளை பைக் கீழே விழுந்து விட்டால், உடனடியாக அருகிலுள்ள அவசர உதவி மையத்திலிருந்து உதவி கோருவதற்கான வாய்ப்பை தானியங்கி முறையில் பாஷ் நிறுவனத்தின் தொழில்நுட்பம் வழங்கும். பைக்கிலிருந்து முதலில் பாஷ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் செல்லும்.

 பைக்குகளுக்கான தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!

அங்கிருந்து பைக்கில் இருக்கும் ஜிபிஎஸ் மூலமாக அந்த இடத்திற்கு அருகிலுள்ள பாஷ் சர்வீஸ் மையம் அல்லது அங்குள்ள அவசர உதவி மையத்தின் மூலமாக பைக் ஓட்டுனர் இருக்கும் இடத்திற்கு மீட்புப் படையினர் சென்று மீட்க முடியும். இந்த தொழில்நுட்பம் முதல்முறையாக ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 பைக்குகளுக்கான தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!

இந்த தொழில்நுட்பம் ஹெல்ப் கனெக்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜெர்மனியை சேர்ந்த பைக் உரிமையாளர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை பாஷ் முதல்கட்டமாக வழங்க உள்ளது.

 பைக்குகளுக்கான தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்!

இருப்பினும், ஜெர்மனிக்கு வெளியில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ஐயர்லாந்து, லக்சம்பெர்க், நெதர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பைக் உரிமையாளர்கள் சென்றாலும் இந்த உதவியை பெற முடியும்.

Most Read Articles
English summary
Bosch has introduced a new emergency call system that goes by the name Help Connect in Germany.
Story first published: Saturday, June 6, 2020, 16:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X