இந்தியர்களுக்காக கூட்டணி வைத்த இரு பிரபல நிறுவனங்கள்... நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது..?

இந்தியர்களின் அதிக ரேஞ்ஜ் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப புதிய மின்சார ஸ்கூட்டரை தயாரிக்க இருப்பதாக இரு பிரபல நிறுவனங்கள் கூறியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியர்களுக்காக கூட்டணி வைத்த இரு பிரபல நிறுவனங்கள்... நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது..?

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் சத்தமே இல்லாமல் மக்கள் மத்தியில் குறிப்பிட்ட ஓர் திணிப்பு செய்யப்பட்டு வருகின்றது. அது மின் வாகன பயன்பாட்டிற்கான திணிப்பாகும். புவி வெப்ப மயமாதல், சுற்றுச் சூழல் மாசுபாடு ஆகியவற்றில் கணிசமாக தீர்வு காணும் விதமாக இந்த திணிப்பை உலக நாடுகள் மெல்ல மெல்ல செய்து வருகின்றன. இந்தியாவிலும் மின் வாகன பயன்பாட்டிற்கான ஊக்குவிப்பு அண்மைக் காலங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியர்களுக்காக கூட்டணி வைத்த இரு பிரபல நிறுவனங்கள்... நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது..?

ஆனால், போதிய வசதி இல்லாதது, அதிக விலை மற்றும் குறைந்த ரேஞ்ஜ் உள்ளிட்ட காரணங்களால் மின் வாகனங்களின் விற்பனை தற்போதும் இந்தியாவில் குழைந்த பருவத்திலேயே காட்சியளிக்கின்றது. மின் வாகனங்களைப் பொருத்தமட்டில் இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது, அடக்கமான விலை மற்றும் அதிக ரேஞ்ஜ் உள்ளிட்டவையே ஆகும்.

இந்தியர்களுக்காக கூட்டணி வைத்த இரு பிரபல நிறுவனங்கள்... நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது..?

இந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் இரு பிரபல நிறுவனங்கள் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பவுன்ஸ் மற்றும் சிம்பிள் எனெர்ஜி ஆகிய இரு நிறுவனங்களே இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் முயற்சியில் களமிறங்கியிருக்கும் நிறுவனங்கள் ஆகும்.

இந்தியர்களுக்காக கூட்டணி வைத்த இரு பிரபல நிறுவனங்கள்... நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது..?

இவையிரண்டும் சேர்ந்து இந்தியாவிற்கான சிறப்பு திறன் வாய்ந்த மின்சார ஸ்கூட்டரை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளன. குறிப்பாக, இந்த மின்சார ஸ்கூட்டர் அதிக ரேஞ்ஜை மையக் கருத்தாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. எனவே, விரைவில் இந்தியர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும் என நம்பப்படுகின்றது.

இந்தியர்களுக்காக கூட்டணி வைத்த இரு பிரபல நிறுவனங்கள்... நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது..?

பவுன்ஸ், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் வாடகை வாகன நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தனது இருசக்கர வாகன வாடகை சேவையை வழங்கி வருகின்றது. இந்த நிலையிலேயே சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்துடன் அது கூட்டணியைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவலின்படி, தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் நோக்கிலேயே பவுன்ஸ் நிறுவனம், சிம்பிள் எனெர்ஜியுடன் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியர்களுக்காக கூட்டணி வைத்த இரு பிரபல நிறுவனங்கள்... நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது..?

ஆகையால், இரு நிறுவனங்களும் இணைந்து ஏற்கனவே பவுன்ஸ் நிறுவனத்தின் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற இருப்பது உறுதியாகியுள்ளது. இது, அவ்வளவு சுலபமான காரியமில்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், பவுன்ஸ் நிறுவனத்திடம் தற்போது யமஹா, எஃப்இசட், பஜாஜ் பலசர் மற்றும் சில சூப்பர் பைக்குகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்தியர்களுக்காக கூட்டணி வைத்த இரு பிரபல நிறுவனங்கள்... நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது..?

இதேபோன்று, பன்முக நிறுவனங்களின் ஸ்கூட்டர்களும் அந்நிறுவனத்தின் கை வசம் இருக்கின்றது. இவையனைத்தையும்தான் சிம்பிள் எனெர்ஜி மின்சார வாகனங்களாக மாற்ற இருக்கின்றது. எனவே மிகப் பெரிய சவாலை அந்நிறுவனம் எதிர்நோக்க இருக்கின்றது. குறிப்பாக, தற்போது பயன்பாட்டில் இருக்கும் சூப்பர் பைக்குகளை அதன் திறன் குறையாமல் உருவாக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக அதற்கு அமைந்திருக்கின்றது.

இந்தியர்களுக்காக கூட்டணி வைத்த இரு பிரபல நிறுவனங்கள்... நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது..?

அதேசமயம், இரு நிறுவனங்களும் இணைந்து அதிக ரேஞ்ஜை வழங்கும் புதிய மின்சார ஸ்கூட்டரை உருவாக்க இருக்கின்றன. இரு நிறுவனங்களும் செய்யக்கூடிய முயற்சியிலேயே மிகவும் வரவேற்கத்தக்க செயல் இதுவாகும். ஏனெனில் இது இந்தியர்களின் அதிக ரேஞ்ஜ் எதிர்பார்ப்பை தீர்த்து வைக்க இருக்கின்றது. ஆனால், இதன் துள்ளியமான ரேஞ்ஜ் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

இந்தியர்களுக்காக கூட்டணி வைத்த இரு பிரபல நிறுவனங்கள்... நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது..?

இருப்பினும், தற்போது சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் அதிகபட்சமாக 260 கிமீ ரேஞ்ஜை ஒற்றை முழுமையான சார்ஜில் வழங்கக்ககூடிய மின்சார ஸ்கூட்டரை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், பவுன்ஸ் மற்றும் சிம்பிள் எனெர்ஜி கூட்டணியில் உருவாக இருக்கும் மின்சார ஸ்கூட்டரும் இதேபோன்று அதிக ரேஞ்ஜ் வசதியுடன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களுக்காக கூட்டணி வைத்த இரு பிரபல நிறுவனங்கள்... நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற போகுது..?

சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின்கீழ் உருவாகி வரும் அதிக ரேஞ்ஜ் கொண்ட மின்சார ஸ்கூட்டருக்கு 'மார்க் 2' என பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், தற்போது பவுன்ஸ் நிறுவனத்திற்காக தயாராகி வரும் மாற்றியமைக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்கள் 2023ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தகவல்கள் என தெரிவிக்கின்றன. மேலும், இதன் பின்னர் மின்சார வாகனங்களாக மாற்றியமைக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மட்டுமே பவுன்ஸ் நிறுவனத்தின் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.

Most Read Articles
English summary
Bounce & Simple Energy Planning To Make High Range Electric Scooter For India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X