அப்டேட்டான என்ஜினை பெற்றுவரும் புதிய பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125...

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் வரிசை பைக்குகளில் சிறிய ரகமாக, அதேநேரத்தில் மிகவும் கவர்ச்சிக்கரமான மாடலாக விளங்கும் பல்சர் 125 பைக் பிஎஸ்6 தரத்தில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இந்த புதிய பிஎஸ்6 பைக்கை பற்றிய முக்கியமான சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

அப்டேட்டான என்ஜினை பெற்றுவரும் புதிய பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125...

வெளியாகியுள்ள இந்த தகவலின்படி, பல்சர் 125 பிஎஸ்6 பைக்கானது 124.4சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜினை பிஎஸ்6 தரத்தில் பெற்றுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டது மட்டுமில்லாமல் சவுகரியமான பயணத்திற்காகவும், சிறந்த எரிபொருள் திறனிற்காகவும் இதன் என்ஜின் அமைப்பில் ஃப்யூல்-இன்ஜெக்டட் சிஸ்டம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

அப்டேட்டான என்ஜினை பெற்றுவரும் புதிய பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125...

மாசு உமிழ்வை குறைக்கும் விதமாக கூடுதல் கேட்டலிடிக் கன்வெர்டர் மற்றும் ஆக்ஸிஜன் சென்சார் உடன் உள்ள அப்டேட்டான எக்ஸாஸ்ட் தொகுப்பு இந்த பிஎஸ்6 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த 124.4சிசி பிஎஸ்6 என்ஜின் 8,500 ஆர்பிஎம்-ல் 11.8 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கும்.

அப்டேட்டான என்ஜினை பெற்றுவரும் புதிய பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125...

இதுவே இந்த என்ஜின் பிஎஸ்4 தரத்தில் 12 பிஎச்பி பவரை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பிஎஸ்6 என்ஜின் பைக்கிற்கு அளிக்கக்கூடிய டார்க் திறன் அளவு குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.

அப்டேட்டான என்ஜினை பெற்றுவரும் புதிய பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125...

நமக்கு தெரிந்த வரை இந்த என்ஜின் தற்போதைய மாடலில் வழங்கிவரும் 6,500 ஆர்பிஎம்-ல் 11 என்எம் டார்க் திறன் என்ற அளவை தான் இந்த பிஎஸ்6 பைக்கிலும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

அப்டேட்டான என்ஜினை பெற்றுவரும் புதிய பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125...

பஜாஜ் பல்சர் 125 பைக், 2,055மிமீ நீளமும், 755மிமீ அகலமும், 1,060மிமீ உயரமும் கொண்டது. பல்சர் மாடலின் இந்த சிறிய ரக மோட்டார்சைக்கிளின் வீல்பேஸ் அளவு 1,320மிமீ மற்றும் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 165மிமீ ஆகும். பெட்ரோல் டேங்கின் கொள்ளவு 11.5 லிட்டர்கள்.

அப்டேட்டான என்ஜினை பெற்றுவரும் புதிய பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125...

இதே பரிமாண அளவில் தான் பிஎஸ்6 பல்சர் 125 மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் டிசைன் மற்றும் தொழிற்நுட்பங்கள் என அனைத்தையும் இந்த பிஎஸ்6 மாடல் பைக் அதன் முந்தைய தலைமுறை பைக்கை தான் பின்பற்றியுள்ளது.

அப்டேட்டான என்ஜினை பெற்றுவரும் புதிய பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125...

பல்சர் 125 பைக்கில் வழங்கப்பட்டுள்ள முக்கியமான அம்சங்களாக செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சவுகரியமான பிளவுப்படாத இருக்கை, அலாய் சக்கரங்கள், ஓநாய் கண்ணின் வடிவில் ஹெட்லைட் உள்ளிட்டவை உள்ளன. சஸ்பென்ஷன் அமைப்பாக இந்த 125சிசி பைக் தலைக்கீழான டெலிஸ்கோபிக்-ஐ முன்புறத்திலும், ட்வின் கேஸ்-சார்ஜ்டு ஷாக் அப்சார்ப்ஸ்-ஐ பின்புறத்திலும் கொண்டுள்ளது.

அப்டேட்டான என்ஜினை பெற்றுவரும் புதிய பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125...

பல்சர் 125 பிஎஸ்4 மாடலை பஜாஜ் நிறுவனம் தற்சமயம் ரூ.66,586 என்ற ஆரம்ப விலையுடன் விற்பனை செய்துவருகிறது. பிஎஸ்6 மாற்றத்தால் இந்த புதிய பைக் எத்தகைய விலை உயர்வை பெறவுள்ளது என்பது குறித்த தகவல்களை தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலில் குறிப்பிடப்படவில்லை.

Most Read Articles

மேலும்... #bajaj auto
English summary
BS-VI Bajaj Pulsar 125 specifications leaked
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X