ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..?

பஜாஜ் நிறுவனத்தின் 400சிசி பைக் மாடலான டோமினார், பிஎஸ்6 தரத்தில் டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை விரிவாக இந்த செய்தியில் இனி காண்போம்.

ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..?

பஜாஜ் டோமினார் பைக்கில் பிஎஸ்6 மாற்றமாக புதிய இசியூ அப்டேட் மற்றும் கேட்டலிடிக் கன்வெர்டர் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் இந்த புதிய பிஎஸ்6 வெர்சன் பைக், முந்தைய தலைமுறை பைக்கை விட ரூ.2,000 விலையை அதிகமாக பெற்றுள்ளது (டீலர்ஷிப்களை பொறுத்து வேறுப்படும்).

ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..?

பஜாஜ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் டோமினார் பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..?

5 பிஎச்பி வரையில் கூடுதலாக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலான என்ஜின் அமைப்பை பெற்றிருந்த இந்த ஃபேஸ்லிஃப்ட் பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.73 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஃபேஸ்லிஃப்ட் பைக்கில் மிக முக்கிய மாற்றமாக பிஎஸ்4 என்ஜின் அப்போதே கிட்டத்தட்ட பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக இருந்தது.

ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..?

இன்னும் சில வாரங்களில் சந்தையில் விற்பனையை ஆரம்பிக்கவுள்ள இந்த புதிய டோமினார் பைக்கானது ஏப்ரல் 1 முதல் இந்திய சந்தையில் அமலாகவுள்ள புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..?

ஏற்கனவே பிஎஸ்6-க்கு இணக்கமாக இந்த பைக் கொண்டுவரப்பட்டுவிட்டதால், பஜாஜ் நிறுவனம் இந்த புதிய டோமினார் பைக்கில் மிகவும் குறைவான அளவிலேயே மேம்பாட்டு வேலைகளை செய்துள்ளது. இப்போதும் பெரும்பான்மையான மாற்றங்கள் என்ஜினின் அமைப்பில் தான் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..?

அதாவது, திருத்தியமைக்கப்பட்ட இசியூ ட்யூன், இதனுடன் புதிய கேட்டலிடிக் கன்வெர்டர் உள்ளிட்டவை தான் 2020 டோமினார் மாடலில் வழங்கப்பட்டுள்ள மிக பெரிய மாற்றங்களாகும். எக்ஸாஸ்ட் சத்தத்தை வைத்து தான் என்ஜின் அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இத்தகைய மாற்றங்களை உணர முடியும்.

ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..?

ஆனால் அதுவும் சில நேரங்களில் தான் பெரும்பான்மையான சமயங்களில் பிஎஸ்4 டோமினார் பைக்கில் செல்வது போலவே இருக்கும். தற்போதைய பஜாஜ் டோமினார் பைக்கில் உள்ள 373சிசி லிக்யூடு-கூல்டு DOHC சிங்கிள்-சிலிண்டர் பிஎஸ்4 என்ஜின் அதிகப்பட்சமாக 40 பிஎச்பி பவரையும் 35 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கி வருகிறது.

ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..?

இந்த என்ஜினுடன் ஸ்லிப்பர் க்ளட்ச் மூலமாக 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 தரத்திலும் இந்த என்ஜினின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..?

டோமினார் பைக் மாடல் தயாரிக்கப்பட்டு வருகின்ற பஜாஜ் நிறுவனத்தின் சேகான் தொழிற்சாலையில் தான் கேடிம் 390 ட்யூக் பைக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் அதே 373சிசி என்ஜின் தான் வழங்கப்பட்டு வருகிறது.

ஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..?

ஆனால் இதன் என்ஜின் அமைப்பில் உள்ள வித்தியாசமான பாகங்களால் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 43 பிஎச்பி பவரையும் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகிறது.

ஏற்கனவே கூறியதுபோல் பிஎஸ்6 டோமினார் பைக் ரூ.2,000 விலை அதிகரிப்புடன் சந்தைக்கு வரவுள்ளது. பிஎஸ்6 அப்டேட் மட்டுமின்றி கவனித்தக்க வகையில் எக்ஸாஸ்ட்டின் சத்தமும் மாற்றப்பட்டுள்ளதால், இந்த விலை அதிகரிப்பு அதிர்ச்சியாக்கும் விஷயமல்ல. மேலும் இந்த பிஎஸ்6 பைக் புதிய நிறத்தேர்வுகளையும் விற்பனைக்கு முன்னதாக பெறவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

Image Courtesy: Rash Gear/YouTube

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
BS6 Bajaj Dominar 400 arrives at dealer – Walkaround video, exhaust sound
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X