பிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...

வெறும் ரூ. 3 ஆயிரம் விலையுயர்வில் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் பிஎஸ்-6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...

இந்தியாவின் மிகவும் பிரபலமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் பஜாஜ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், தற்போது அதன் தயாரிப்புகளை குறைந்த மாசு உமிழ்வை வெளிப்படுத்தும் பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமாக அப்கிரேட் செய்து வருகின்றது.

பிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...

அந்தவகையில், பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தப்பட்ட அவெஞ்ஜர், பிளாட்டினா, டோமினார் மற்றும் பல்சர் 150 உள்ளிட்ட பல இரு சக்கர வாகனங்களை முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்நிலையில், மீண்டுமொரு அதன் பிரபல மடால்களில் ஒன்றான பல்சர் ஆர்எஸ் 200 மோட்டார் சைக்கிளை பிஎஸ் தரத்திற்கு உயர்த்தி பஜாஜ் அறிமுகம் செய்துள்ளது.

பிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...

இந்த பைக் அதன் பிஎஸ்-4 மாடலைக் காட்டிலும் ரூ. 3,000 மட்டுமே விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது. ஆகையால், தற்போது அப்கிரேட் செய்யப்பட்டுள்ள ஸ்போர்ட் டூரர் பைக் ரூ. 1.43 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

பிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...

இந்த அப்கிரேட் செய்யப்பட்ட பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 மாடல் பைக்குகள் இந்த வாரத்தின் இறுதியில் விற்பனைக்கு உற்பத்தியாலையில் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக்கில் பிஎஸ்-6 தர மாற்றம் மட்டுமின்றி குறிப்பிட்ட அக்ஸசெரீஸ் சேஞ்ஜையும் பஜாஜ் வழங்கியிருக்கின்றது.

பிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...

அந்தவகையில், பல்சர் ஆர்எஸ் 200 பைக்கின் எக்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் பாடியில் லேசான மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தவிர்த்து வேறெந்த மாற்றங்களும் இந்த பைக்கில் மேற்கொள்ளப்படவில்லை. இதன்காரணத்தினாலேயே இந்த பைக்கின் விலை லேசான உயர்வைப் பெற்றிருக்கின்றது.

தற்போது இந்த ஆர்எஸ் 200 பைக்கில் 199.5 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினே காணப்படுகின்றது.

பிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...

இதில், புத்திதாக ப்யூவல் இன்ஜெக்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது, அதிக எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, அதிக மைலேஜை வழங்கும். இத்துடன், குறைந்தளவு மாசு உமிழ்வையே வெளிப்படுத்தும். ஆகையால், இந்த பைக் அதன் உரிமையாளருக்கு இரு வழிகளில் பயனளிக்க இருக்கின்றது.

பிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...

குறிப்பாக, பிஎஸ்-4 தரத்திலான எஞ்ஜினைக் காட்டிலும் புதிய அப்கிரேட் செய்யப்பட்ட பிஎஸ்-6 எஞ்ஜினைக் கொண்ட பல்சர் ஆர்எஸ்200 பைக் கூடுதல் மைலேஜை வழங்க இருப்பது வரவேற்கதக்கதாக உள்ளது.

பிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...

ஆனால், இந்த புதிய எஞ்ஜின் பிஎஸ்-4 மாடலைக் காட்டிலும் குறைந்த திறனை வெளிப்படுத்தும். குறைந்த மாசு உமிழ்வை வெளிப்படுத்தும் விதமாகவே இத்தகைய நடவடிக்கையை பஜாஜ் மேற்கொண்டுள்ளது.

பிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...

தற்போது விற்பனையில் இருக்கும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 ஸ்போர்ட் பைக் 199.5 சிசி திறன் கொண்ட 4-வால்வ் சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்-4 மாடலைவிட ரூ. 3,000தான் விலை அதிகமாம்... பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இந்தியாவில் அறிமுகம்...

அந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 24.1 பிஎச்பியை 9,750 ஆர்பிஎம்மிலும், 18.6 என்எம் டார்க்கை 8,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இந்த எண்ணிக்கையில்தான் புதிய மாற்றத்தைப் பெறவிருக்கின்றது பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜினை உடைய பல்சர் ஆர்எஸ்200 பைக்.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
BS6 Bajaj Pulsar RS200 Launched In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X