டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் ஆரம்ப விலையே இவ்வளவா!! வெளிவந்த தகவல்கள்

இந்திய சந்தைக்கான டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் ஆரம்ப விலையே இவ்வளவா!! வெளிவந்த தகவல்கள்

2021ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ள பைக்குகளை கடந்த மாதத்தில் டுகாட்டி நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அவற்றில் ஒன்றான டுகாட்டி 800சிசி ஸ்க்ரம்ப்ளர் பைக்கின் விலைகள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் ஆரம்ப விலையே இவ்வளவா!! வெளிவந்த தகவல்கள்

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800சிசி பைக்கில் கேஃப் ரேஸர் மற்றும் முழு த்ரோட்டல் வேரியண்ட்களின் தயாரிப்பு & விற்பனை நிறுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அவற்றிற்கு மாற்றாக ஸ்க்ரம்ப்ளர் 800 பைக்கில் புதிய நைட்ஷிஃப்ட் வேரியண்ட் கொண்டுவரப்படவுள்ளது.

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் ஆரம்ப விலையே இவ்வளவா!! வெளிவந்த தகவல்கள்

இந்த புதிய வேரியண்ட் இந்த 800சிசி டுகாட்டி பைக்கின் மற்ற வேரியண்ட்களான டெஸார்ட் (பாலைவனம்) ஸ்லெட் மற்றும் ஆரம்ப-நிலை ஐகான் வேரியண்ட்களுடன் இணையவுள்ளது. இதில் டெஸார்ட் ஸ்லெட் வேரியண்ட்டின் விலை ரூ.11.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் ஆரம்ப விலையே இவ்வளவா!! வெளிவந்த தகவல்கள்
Variant Old Price New Price Increase
Desert Sled ₹9,93,000 ₹11,80,000 ₹1,87,000
Nightshift N/A ₹10,70,000 N/A
Icon ₹7,89,000 onwards ₹9,30,000 onwards ₹1,14,000 (expected)

இது அதன் முந்தைய பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் சுமார் 1.87 லட்ச ரூபாய் அதிகமாகும். இதற்கு ஏற்றப்படி இந்த வேரியண்ட்டிற்கு புதிய நிறத்தேர்வு வழங்கப்படவுள்ளது. புதிய வேரியண்ட்டான நைட்ஷிஃப்ட்டின் விலை ரூ.10.7 லட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது டெஸார்ட் ஸ்லெட்டின் விலையை காட்டிலும் ரூ.1.1 லட்சம் குறைவாகும்.

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் ஆரம்ப விலையே இவ்வளவா!! வெளிவந்த தகவல்கள்

ஏனெனில் 2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பைக்கின் நைட்ஷிஃப்ட் வேரியண்ட்டில் ஆஃப்-ரோடிற்கு ஏற்றதான டெஸார்ட் ஸ்லெட் வேரியண்ட்டில் வழங்கப்படவுள்ள நீண்ட-ட்ராவல் சஸ்பென்ஷன் மற்றும் பெரிய சக்கரங்கள் வழங்கப்பட போவதில்லை. இதுவே இந்த விலை குறைவிற்கு காரணமாகும்.

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் ஆரம்ப விலையே இவ்வளவா!! வெளிவந்த தகவல்கள்

ஆனால் அதேநேரம் அகலமான ஒற்றை-துண்டு ஹேண்டில்பாரின் முனைகளில் க்ளாஸி கண்ணாடிகள் மற்றும் மேசை-ஸ்டைலில் இருக்கைகளுடன் இந்த வேரியண்ட் டார்க் தீம்-இல் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் பாடி பேனல்கள் ஏவியேட்டர் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும்.

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் ஆரம்ப விலையே இவ்வளவா!! வெளிவந்த தகவல்கள்

அப்டேட் செய்யப்பட்ட ஆரம்ப நிலை வேரியண்ட்டான ஐகான் புதிய டுகாட்டி சிவப்பு நிறத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை. விலை உயர்த்தப்பட்ட டெஸார்ட் ஸ்லெட் வேரியண்ட்படி பார்த்தால் இதன் விலையும் ரூ.1.4 லட்சம் அதிகரிக்கப்பட்டு ரூ.9.3 லட்சத்தில் கொண்டுவரப்படலாம்.

டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பிஎஸ்6 பைக்கின் ஆரம்ப விலையே இவ்வளவா!! வெளிவந்த தகவல்கள்

ஏனெனில் மற்ற நாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள ஐகான் வேரியண்ட்டின் விலை ரூ.7.89 லட்சம் என்ற அளவில் உள்ளது. விலை அதிகரிப்பிற்கு ஏற்ப இந்த வேரியண்ட்களில் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதால், என்ஜின் 0.8 என்எம் குறைந்து 66.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

பிஎச்பி பவரில் மாற்றம் இருக்காது. அதே 73 பிஎஸ் ஆக தான் இருக்கும். 2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 800 பைக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகம் வரும் வாரங்களில் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Here’s How Much The Ducati Scrambler 800 BS6 Will Cost!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X