ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவா 125 மாடல் ஸ்கூட்டர்களை திரும்ப அழைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கூலிங் ஃபேன் கவர் மற்றும் ஆயில் குழாய் அமைப்பில் வரும் புகார்களின் அடிப்படையில் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

மேலும் இந்நிறுவனம் இந்த நடவடிக்கையின் மூலமாக வாகன உரிமையாளரின் மேனுவலும் அப்டேட் செய்யப்படவுள்ளதாக கூறியுள்ளது. திரும்ப அழைக்கும் அளவிற்கு ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் மேற்கூறப்பட்ட பாகங்களில் என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை பற்றி ஹோண்டா நிறுவனத்தில் இருந்து எந்த தகவலும் இல்லை.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

திரும்ப அழைக்கப்படும் இந்த பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் எந்தவொரு செலவும் இல்லாமல் சரிப்பார்த்து தரப்படவுள்ளன. பிரச்சனை எங்கு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதனை மாற்றி கொடுப்பதற்கு மொத்தம் 30 நிமிடங்களே ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

மேலும் தன்னுடைய ஸ்கூட்டரும் பஜாஜ் நிறுவனத்தால் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதா என்பதை இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் உரிமையாளர் சரிப்பார்க்கும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

ஹோண்டா நிறுவனம் புதிய ஆக்டிவா 125 பிஎஸ்6 மாடலை கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி சந்தைக்கு கொண்டு வந்தது. ரூ.63,912 ஆயிரத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பிஎஸ்6 ஸ்கூட்டர் ஸ்டாண்டர்ட் மற்றும் டீலக்ஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் டீலர்ஷிப்களிடம் கிடைக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

இந்த புதிய ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 18 லிட்டர் கொள்ளவில் சேமிப்பிடம், ஏசிஜி ஸ்டார்டர், எல்இடி ஹெட்லேம்ப்கள், பாஸ் ஸ்விட்ச் மற்றும் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உள்ளிட்டவற்றை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

பெட்ரோல் நிரப்புவதற்கு ஃப்யூல் ஃபில்லர் கேப் உடன் உள்ள ஆக்டிவா பிஎஸ்6 ஸ்கூட்டரின் 12 இன்ச்சில் உள்ள முன் சக்கரத்துடன் வழக்கமான டெலிஸ்கோப் ஃபோர்க்ஸும், பின் சக்கரத்துடன் மூன்று விதமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்ப்ரிங் லோடட் ஹைட்ராலிக்கும் சஸ்பென்ஷன் அமைப்புகளாக பொருத்தப்பட்டுள்ளன.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

இதில் உள்ள பிஎஸ்6-க்கு இணக்கமான 109சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்/ஃபேன் கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 8.17 பிஎச்பி பவரையும் 10.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.இந்த என்ஜினுடன் சிவிடி கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷனாக இணைக்கப்பட்டுள்ளது. ப்ரேக்கிங் பணியை முன்புறத்தில் டிஸ்க்கும், பின்புறத்தில் ட்ரம்-மும் கவனிக்கின்றன.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

இதனுடன் காம்பி ப்ரேக்கிங் சிஸ்டமும் நிலையாக உள்ளது. இந்த ஆக்டிவா 125 6ஜி பிஎஸ்6 ஸ்கூட்டருக்கு கருப்பு, டஸல் மஞ்சள் மெட்டாலிக், காஸ்ட்லீயான தோற்றத்தை அளிக்கக்கூடிய வெள்ளை, மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக், முத்துக்கல்லின் எளிமையான சிவப்பு மற்றும் பளப்பளப்பான நீலம் மெட்டாலிக் என்ற 6 நிறத்தேர்வுகளை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

புதிய பிஎஸ்6 ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான ஸ்டாண்டர்ட் ரூ.63,912 விலையிலும், டீலக்ஸ் ரூ.65,412 விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...?

பொதுவாக ஹோண்டா நிறுவனம் இவ்வாறு ஸ்கூட்டர்களை திரும்ப அழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்படுவதில்லை. ஆனால் அறிமுகமாகி சில மாதங்களில் ஆக்டிவா 125 பிஎஸ்6 மாடல் திரும்ப அழைக்கப்பட்டிருப்பது பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

Most Read Articles
English summary
Honda Activa 125 BS6 Models Recalled: Company To Replace Cooling Fan Cover And Oil Gauge
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X