ஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்... உறுதி செய்த கிளாசிக் லெஜண்ட்ஸ்...

பிஎஸ்6 -க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட ஜாவா மோட்டார்சைக்கிள்கள் டீலர்ஷிப்களை சென்றடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்... உறுதி செய்த கிளாசிக் லெஜண்ட்ஸ்...

புதிய ஜாவா பைக்குகளில் முக்கிய அப்டேட்டாக சில திருத்தல்களுடன் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்ட என்ஜின் கொண்டுவரப்பட்டுள்ளது. மற்றப்படி பைக்கின் தோற்றம் கிட்டத்தட்ட இதன் பிஎஸ்4 வெர்சனை தான் ஒத்து காணப்படுகிறது.

ஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்... உறுதி செய்த கிளாசிக் லெஜண்ட்ஸ்...

அதேபோல் பைக்கிற்கு வழங்கப்படும் நிறத்தேர்வுகளிலும் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. ஆனால் சைலன்சர் டிசைனில் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக பணியாற்றி இருப்பது பார்த்தாலே தெரிய வருகிறது. புதிய சைலன்சர் பைக்கிற்கு நேர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது.

ஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்... உறுதி செய்த கிளாசிக் லெஜண்ட்ஸ்...

புதிய சைலன்சர் அமைப்பில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள கேட்டலிடிக் கன்வெர்டர் பைக்கின் மொத்த நீளத்தையும் அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்த புதிய எக்ஸாஸ்ட் அமைப்பினால் எக்ஸாஸ்ட் குழாயில் துளை ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புண்டு.

ஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்... உறுதி செய்த கிளாசிக் லெஜண்ட்ஸ்...

பிஎஸ்6 தரத்தில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களில் வழக்கமான 293சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் கூடுதல் சிஸ்டங்களுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளதால் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் கணிசமாக குறைந்துள்ளது.

ஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்... உறுதி செய்த கிளாசிக் லெஜண்ட்ஸ்...

அதாவது இந்த என்ஜின் பிஎஸ்4 தரத்தில் 27 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தியது. ஆனால் பிஎஸ்6 தரத்தில் சற்று குறைவாக 26.1 பிஎச்பி பவரையும், 27.05 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கும்.

ஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்... உறுதி செய்த கிளாசிக் லெஜண்ட்ஸ்...
Version Single-channel ABS Dual-channel ABS
Jawa Forty-Two
Halley's Teal R1,60,300 R1,69,242
Starlight Blue R1,60,300 R1,69,242
Lumos Lime R1,64,164 R1,73,106
Comet Red R1,65,228 R1,74,170
Galactic Green R1,65,228 R1,74,170
Nebula Blue R1,65,228 R1,74,170
Jawa Classic
Black R1,73,164 R1,82,106
Grey R1,73,164 R1,82,106
Maroon R1,74,228 R1,83,170

தொழிற்நுட்ப அம்சங்கள் மட்டுமின்றி கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட ஜாவா கிளாசிக் மற்றும் 42 பைக்குகளின் புதிய எக்ஸ்ஷோரூம் விலைகளையும் அதன் இணையத்தளத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்... உறுதி செய்த கிளாசிக் லெஜண்ட்ஸ்...

இதன்படி பார்க்கும்போது ஜாவா கிளாசிக் பிஎஸ்6 பைக் ரூ.1,60,300 விலையிலும், 42 பிஎஸ்6 பைக் ரூ.1,73,164 விலையிலும் விற்பனை செய்யப்படவுள்ளன. இவற்றின் ஏபிஎஸ் வெர்சன்களின் விலைகள் முறையே ரூ.1,69,242 மற்றும் ரூ.1,82,106 ஆக உள்ளன.

Most Read Articles
English summary
BS6 Jawa Classic, Forty-Two start to arrive at dealerships
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X