Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது? எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...
இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் விலை தடாலடியாக குறையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நின்ஜா 300 பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷனை, கவாஸாகி நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட பிஎஸ்-4 மாடலுடன் ஒப்பிடும்போது குறைவான விலையில், கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷன் களமிறக்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நின்ஜா 300 பைக்கின் பிஎஸ்-4 மாடலை, கவாஸாகி நிறுவனம் 2.98 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது. பாடி பேனல்கள், ஹெட்லைட், பிரேக்குகள், கேபிள்கள் மற்றும் டயர்கள் போன்ற உதிரிபாகங்களை இந்தியாவிலேயே பெற்றதால், கவாஸாகி நிறுவனத்தால் இப்படி ஒரு சவாலான விலையில், நின்ஜா 300 பைக்கின் பிஎஸ்-4 மாடலை விற்பனை செய்ய முடிந்தது.

இந்த சூழலில், நின்ஜா 300 பைக்கின் பிஎஸ்-6 மாடலுக்கான உதிரிபாகங்களை இன்னும் அதிக அளவில் இந்தியாவிலேயே பெறுவதற்கு கவாஸாகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இந்த மோட்டார்சைக்கிளின் விலை கணிசமாக குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 டிசைன், பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கு? வீடியோ பாருங்க...
ஆனால் நின்ஜா 300 பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷனின் விலை நிர்ணயம் தொடர்பாக கவாஸாகி நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. என்றாலும் இதன் விலை கணிசமாக குறையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 2.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பிஎஸ்-4 மாடல்களை காட்டிலும், பிஎஸ்-6 மாடல்கள் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. கடந்த காலங்களிலும் இவ்வாறு நடந்துள்ளது. உதாரணத்திற்கு பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனமானது, ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்களை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

பல்வேறு அப்டேட்களை வழங்கிய நிலையிலும், பிஎஸ்-4 மாடல்களை காட்டிலும், பிஎஸ்-6 மாடல்களின் விலையை குறைவாக நிர்ணயம் செய்து, பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் அதிரடி காட்டியது. இந்த வகையில், கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷனும், பிஎஸ்-4 மாடலை விட குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் பிஎஸ்-6 மாடலில், பெரிய அளவில் டிசைன் மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. எனினும் பிரீமியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, எல்இடி லைட்களை கவாஸாகி நிறுவனம் சேர்க்கலாம். அதேபோல் புதிய வண்ண தேர்வுகள் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

மிகப்பெரிய மாற்றம் இன்ஜினில்தான் செய்யப்படவுள்ளது. அதே 296 சிசி இன்ஜின்தான் வழங்கப்படும் என கூறப்பட்டாலும், மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில், இன்ஜினில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படும். அனேகமாக அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் காலகட்டத்தில் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.