இண்ட்ரூடர் பிஎஸ்6 பைக்கின் விலையை உயர்த்தியது சுசுகி.. இனி இதன் எக்ஸ்ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

சுசுகியின் ஜிக்ஸெர் 155 மற்றும் ஜிக்ஸெர் 250 பைக் மாடல்களின் விலைகள் சமீபத்தில் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இண்ட்ரூடர் பிஎஸ்6 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இண்ட்ரூடர் பிஎஸ்6 பைக்கின் விலையை உயர்த்தியது சுசுகி.. இனி இதன் எக்ஸ்ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

சுசுகி நிறுவனம் இந்த 155சிசி க்ரூஸர் பைக்கின் விலையை சில மாதங்களுக்கு முன்பு தான் உயர்த்தி துல்லியமாக 1,20,000 என கொண்டுவந்திருந்தது. ஆனால் இனி இண்ட்ரூடர் பைக்கை ரூ.1,22,141 ரூபாயில் தான் வாங்க முடியும்.

இண்ட்ரூடர் பிஎஸ்6 பைக்கின் விலையை உயர்த்தியது சுசுகி.. இனி இதன் எக்ஸ்ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

இதன்மூலம் இதன் விலை ரூ.2,141 அதிகரிப்பட்டிருப்பதை அறியலாம். இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்றப்படி இந்த பைக்கில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இந்த விலை அதிகரிப்பிற்கான காரணமும் தெரியவரவில்லை.

இண்ட்ரூடர் பிஎஸ்6 பைக்கின் விலையை உயர்த்தியது சுசுகி.. இனி இதன் எக்ஸ்ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

ஆனால் எப்படியிருந்தாலும் இந்த விலை அதிகரிப்பு ஆண்டுத்தோறும் மாறிவரும் சந்தையின் நிலையை பொறுத்தே இருக்கும். இண்ட்ரூடர் பைக்கின் டிசைனிற்கு இந்தியாவில் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் இந்த சிறிய விலை அதிகரிப்பு இதன் விற்பனையை பாதிக்காது என்பது உறுதி.

இண்ட்ரூடர் பிஎஸ்6 பைக்கின் விலையை உயர்த்தியது சுசுகி.. இனி இதன் எக்ஸ்ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

பைக்கின் இயக்கத்திற்கு இணையான பாடி பேனல்கள் இதன் கவர்ச்சியான தோற்றத்திற்கு மிக முக்கிய காரணம். பிஎஸ்6 அப்டேட்டாக சுசுகி நிறுவனம் இண்ட்ரூடர் பைக்கில் ட்வின்-எக்ஸாஸ்ட் அமைப்பை வழங்கியுள்ளது.

இண்ட்ரூடர் பிஎஸ்6 பைக்கின் விலையை உயர்த்தியது சுசுகி.. இனி இதன் எக்ஸ்ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

பிஎஸ்6 தரத்தில் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 155சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 13.41 பிஎச்பி பவரையும், 13.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ட்ரான்ஸ்மிஷனிற்கு பைக்கில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

இண்ட்ரூடர் பிஎஸ்6 பைக்கின் விலையை உயர்த்தியது சுசுகி.. இனி இதன் எக்ஸ்ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

எக்ஸாஸ்ட் அமைப்பை போல் பிஎஸ்6 அப்டேட்டாக இந்த 155சிசி பைக் எல்இடி தரத்தில் ஹெட்லேம்பை பெற்றுள்ளது. இதன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் முன்பை விட எளிமையாக விபரங்களை அறியும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இண்ட்ரூடர் பிஎஸ்6 பைக்கின் விலையை உயர்த்தியது சுசுகி.. இனி இதன் எக்ஸ்ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..?

ப்ரேக்கிற்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸும், பின்புறத்தில் மோனோஷாக்கும் உள்ளது. சுசுகி இண்ட்ரூடர் மாடலுக்கு போட்டியாக உள்ள பஜாஜின் அவென்ஜெர் ஸ்ட்ரீட் 160 பைக்கின் விலை ரூ.95,891 என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Suzuki Intruder Receives A Price Hike
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X