இனி டயர்களும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும்... பிரபல சியாட் அதிரடி அறிமுகம்..!

டயர்கள் என்றாலே நம் நினைவிற்கு வருவது கருப்பு நிறம்தான். ஆனால், இந்த எண்ணத்தை மாற்றும் விதமாக சியட் நிறுவனம் டயர்களில் நிறத்தேர்வை வழங்கவிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இனி டயர்களும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும்... பிரபல சியாட் அதிரடி அறிமுகம்..!

வாகனம் இயங்குவதற்கு மிக முக்கியமாக தேவைப்படும் உபகரணங்களில் டயரும் ஒன்று. முந்தைய காலங்களில் இந்த டயர், ட்யூப்களின் உதவியுடன் பயன்பட்டு வந்தன. ஆனால், இதன் அடுத்த பரிணாம மாற்றமாக தற்போது ட்யூப் லெஸ் டயர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இனி டயர்களும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும்... பிரபல சியாட் அதிரடி அறிமுகம்..!

கார் மற்றும் பைக் என அனைத்திலும் ட்யூப் லெஸ் டயர்களே தற்போது சாலைகளில் அதிகம் ராஜ்ஜியம் செய்து வருகின்றன.

இந்நிலையில், அடுத்த பரிணாம மாற்றமாக டயர்களில் நிறத் தேர்வு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான சியட் அறிமுகம் செய்திருக்கின்றது.

இனி டயர்களும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும்... பிரபல சியாட் அதிரடி அறிமுகம்..!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டயர்களில் சியாட் நிறுவனத்தின் டயர்களும் ஒன்று. இந்நிறுவனம், இந்தியாவின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான ஹோலி பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக இந்த கலர்ஃபுல்லான டயர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இனி டயர்களும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும்... பிரபல சியாட் அதிரடி அறிமுகம்..!

ஆனால், இந்த கலர்ஃபுல் டயர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். ஏனென்றால், சியட் நிறுவனம் இந்த டயர்களை குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

இனி டயர்களும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும்... பிரபல சியாட் அதிரடி அறிமுகம்..!

ஆனால், எப்போது வரை விற்பனையில் இருக்கும் என்ற தகவலை வெளியிடவில்லை. மேலும், நிற தேர்விக்காக கூடுதல் தொகை வசூலிக்குமா என்பதுகுறித்த தகவலையும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த கலர்ஃபுல் டயர்கள் வாகன ஆர்வலர்கள் மத்தியில் புதிய ஆவலைத் தூண்டியிருக்கின்றது.

பொதுவாக, டயர்கள் என்றாலே நம் அனைவருக்கும் கருப்பு நிறம் மட்டுமே நினைவுக்கும் வரும்.

இனி டயர்களும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும்... பிரபல சியாட் அதிரடி அறிமுகம்..!

ஆனால், இந்த பிம்பத்தை சியாட்டின் கலர்ஃபுல் டயர்கள் மாற்றியிருக்கின்றது. அதேசமயம், இந்த டயர்கள் குறைந்த நாட்களே மட்டுமே விற்பனைக்கு கிடைக்க இருப்பதால் மீண்டும் கருப்பு நிற டயர்களே இந்திய சாலைகளை ஆளும். இருப்பினும், கலர்ஃபுல் டயர்கள் சிறு புயலைப் போன்று நாடு முழுவதும் கணிசமாக பரவிருக்கின்றது.

இனி டயர்களும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும்... பிரபல சியாட் அதிரடி அறிமுகம்..!

இந்த கலர்ஃபுல் டயர்கள் நீலம், ஆரஞ்சு, நீலம் மற்றும் ஆரஞ்சு ஆகிய மூன்றுவிதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது.

இந்த நிறமானது டயரின் பக்கவாட்டு பகுதியில் மட்டுமே காணப்படும். மேலும், இந்த நிறத்தேர்வானது ஜூம் ஆர்ஓடி டயர்களில் மட்டுமே சியட் வழங்கவிருக்கின்றது.

இனி டயர்களும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும்... பிரபல சியாட் அதிரடி அறிமுகம்..!

இந்த டயர்கள் அனைத்தும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளான யமஹா எஃப்இசட், யமஹா பேசர், சுசுகி ஜிக்ஸெர் மற்றும் சுசுகி இன்ட்ரூடர் ஆகிய பைக்குகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ரகமாகும்.

இனி டயர்களும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும்... பிரபல சியாட் அதிரடி அறிமுகம்..!

லிமிடெட் எடிசனாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த சியட் ஜூம் ஆர்ஏடி டயர்கள் குறிப்பிட்ட சியட் நிறுவனத்தின் டயர் விற்பனையகங்களில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இந்த டயர்கள் மற்ற சியட் டயர்களைப் போன்று அல்லாமல் சற்று கூடுதல் கணமாக தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், புதிய கலர்ஃபுல் டயர்கள் பார்வையாளர்களைக் கவர்வது மட்டுமின்றி நீடித்துழைக்கும் தன்மைக் கொண்டதாகவும் இருக்கும்.

இனி டயர்களும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும்... பிரபல சியாட் அதிரடி அறிமுகம்..!

தொடர்ந்து, உயர் ரகத்திற்காக மிகத் தேர்ந்த ரப்பர்களைக் கொண்டு கலர்ஃபுல் டயர்களை சியட் உருவாக்கியிருக்கின்றது. இதே தரத்திலான ரப்பர்களைதான் வழக்கமான டயர்களுக்கும் சியட் பயன்படுத்தி வருகின்றது. இந்த டயர்கள் அதிக கிரிப், ஸ்மூத் மற்றும் எளிதில் சரிக்கிவிடாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ceat Launches Limited Edition Colorful Tubeless Tyres. Read In Tamil.
Story first published: Sunday, March 8, 2020, 10:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X