பெராக்கின் அறிமுகத்திற்காக, சியட் உடன் கூட்டணி சேர்ந்த ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்...

ஜாவா பெராக் பைக்கின் அறிமுகத்திற்காக ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளதாக சியட் டயர்கள் நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பெராக்கின் அறிமுகத்திற்காக, சியட் உடன் கூட்டணி சேர்ந்த ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்...

சியட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த டயர்கள் வாடிக்கையாளர்களுக்கு சவுகரியமான ரைடிங் அனுபவத்தையும் அதிவேகங்களின்போது தேவையான கண்ட்ரோல்களையும் கொடுப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

பெராக்கின் அறிமுகத்திற்காக, சியட் உடன் கூட்டணி சேர்ந்த ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்...

எங்களது டயர்கள் முன் சக்கரங்களுக்கு 100/97-18 ஜூம் க்ரூஸ் என்ற அளவிலும், பின் சக்கரங்களுக்கு 140/70-17 ஜூம் க்ரூஸ் என்ற அளவிலும் கிடைக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. பெராக்கின் அறிமுகம் குறித்து சியட் டயர்கள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி அமித் டோலனி கூறுகையில், ஜாவா மோட்டார்சைக்கிள் போன்ற ப்ரீமியம் மோட்டார்சைக்கிள் ப்ராண்ட் உடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு ஆவலாக காத்திருக்கிறோம்.

பெராக்கின் அறிமுகத்திற்காக, சியட் உடன் கூட்டணி சேர்ந்த ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்...

இந்நிறுவனத்தின் ஜாவா பெராக் பைக், அதன் முதல்முறை அறிமுகத்தில் இருந்தே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. எதிர்பார்ப்புகளின்படி ஜூம் க்ரூஸ் டயர்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

பெராக்கின் அறிமுகத்திற்காக, சியட் உடன் கூட்டணி சேர்ந்த ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்...

மேலும் ஜாவா மோட்டார்சைக்கிள்களுடன் நீண்டகால கூட்டாண்மைக்கு எதிர்நோக்குகிறோம் என தெரிவித்தார். சியட் டயர்கள், இந்தியாவின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமாகும். ஆர்பிஜி எண்டர்பிரைசஸின் அடையாள நிறுவனமான இது 1958ல் இருந்து தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது.

பெராக்கின் அறிமுகத்திற்காக, சியட் உடன் கூட்டணி சேர்ந்த ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்...

இந்தியா மட்டுமின்றி தற்போதைய நிலவரப்படி உலகின் பல நாடுகளிலும் வெற்றிக்கரமாக தயாரிப்புகளை விற்பனை செய்துவரும் நிறுவனங்களுள் ஒன்றாக சியட் உள்ளது. தற்சமயம் இந்நிறுவனம் கனரக லாரிகள், பஸ்கள், இலகுவான வணிக வாகனங்கள், கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் என ஆண்டிற்கு 15 மில்லியன் டயர்களை தயாரித்து வருகிறது.

பெராக்கின் அறிமுகத்திற்காக, சியட் உடன் கூட்டணி சேர்ந்த ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்...

ஆர்பிஜி எண்டர்பிரைசஸை பற்றி சொல்ல வேண்டுமென்றால், 1979ல் முதன்முதலாக நிறுவப்பட்ட இந்நிறுவனம், சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலுடன் இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் வணிக குழுக்களுள் ஒன்றாக உள்ளது. இந்த க்ரூப் உள்கட்டமைப்பு, டயர்கள், ஐடி, மருந்தகம் உள்ளிட்ட வணிகங்களுடன் வளர்ந்து வரும் கண்டுபிடிப்பு தொழில்நுட்ப வணிகத்தை வழிநடத்தவும் செய்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Ceat partners with jawa for exclusive range of tyres for perak.
Story first published: Monday, August 24, 2020, 18:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X