மயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்!

புதிதாக விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கும் சைக்கிளின் விலை மயக்கத்தை வரவழைக்கின்ற வகையில் இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

மயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்...

பிரபல சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான ஆட்டோமொபிலி லம்போர்கினி, அதன் பிராண்டில் மிதிவண்டி ஒன்றை புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. செர்விலோ சைக்கிள்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த சைக்கிளை உலகின் அதிக விலைக் கொண்ட மிதிவண்டியாக அது அறிமுகப்படுத்தியுள்ளது.

மயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்...

புதிய லம்போர்கினி அவெண்டேடார் எஸ்விஜே எனும் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை தழுவியே புதிய சைக்கிள் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், சிறப்பம்சங்களுக்கு பஞ்சமின்றி இந்த சைக்கிள் இருக்கும் கூறப்படுகின்றது.

மயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்...

அதாவது, வழக்கமான சைக்கிள்களைக் காட்டிலும் அதிக தொழில்நுட்பம் பொருந்திய சைக்கிளாக இது இருக்கும் என தெரிகின்றது. இதன் காரணத்தினாலயே மிதிவண்டிக்கு உச்சபட்ச விலையை தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன. இந்திய மதிப்பில் ரூ. 13.2 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்...

இந்த அதிர்ச்சியளிக்கும் உச்சபட்ச விலையையே லம்போர்கினி மற்றும் செர்விலோ சைக்கிள்ஸ் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன. என்ன சொல்றீங்க!! இந்த விலைல அவுட் ஆஃப் சிட்டில ஒரு வீட்டு மனையையே வாங்கி போட்டுருவேனே என புலம்புகிறீர்களா?, சைக்கிளில் பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருப்பதே இந்த உச்சபட்ச விலைக்கு காரணமாம். என்னதான் இருந்தாலும் இது கொஞ்சம் ஓவருங்க என்ற மைண்ட் வாய்ஸை எங்களால் உணர முடிகின்றது.

மயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்...

மிகவும் கவர்ச்சியான மற்றும் முற்றிலும் வித்தியாசமான வாகனங்களைத் தயாரிப்பதில் லம்போர்கினி பெயர்போன நிறுவனமாக இருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் மியூசியத்தில் இடம்பெறுகின்ற அளவிற்கு சிறப்பு வாய்ந்த வாகனங்களை அது தயாரித்து வருகின்றது. அம்மாதிரியான ஓர் தயாரிப்பாகவே புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மிதிவண்டி உள்ளது.

மயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்...

இதனை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்ய லம்போர்கினி திட்டமிட்டுள்ளது. 63 யூனிட்டுகள் மட்டுமே இதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன. ஆகையால், ஒட்டுமொத்தமாகவே வெறும் 63 பேரால் மட்டுமே இந்த சைக்கிளை தங்களின் கையில் பெற முடியும்.

மயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்...

செர்விலோ ஆர்5 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த சைக்கிள் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரிமியம் தரத்தில் காட்சியளிக்கின்றது. இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட கூறுகளைக் கொண்டே இந்த சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேம்பேக்னோலா போரா ஒன் எனும் வீல்களே இந்த சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. விட்டோரியா கோர்ஷா ப்ரோ டயர்களே இந்த வீலில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்...

இதேபோன்று அதிக சொகுசான வசதிக்காக ஃபிசிக் அலியண்டே சீட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி எண்ணற்ற சிறப்பு கூறுகள் இந்த சைக்கிளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சிறப்பு அம்சங்களின் சங்கமமாக இந்த சைக்கிள் உருவாகியிருப்பதன் காரணத்தினாலயே அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்...

இதுபோன்று விலையுயர்ந்த சைக்கிளை லம்போர்கினி அறிமுகப்படுத்துவது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களுக்கு சற்று விலைக் குறைந்த மிதிவண்டியை அது அறிமுகப்படுத்தியிருந்தது. அதன், விலை இந்திய மதிப்பில் ரூ. 11.23 லட்சம் ஆகும். இது கம்மி விலையாங்க?, என்ற புலம்பலும் எங்களுக்கு கேட்கின்றது. தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சைக்கிளைக் காட்டிலும் செர்விலோ பி5எக்ஸ் சைக்கிள் ரூ. 2 லட்சம் வரை குறைவாக காணப்படுகின்றது.

மயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்...

இந்த சைக்கிளையும் லம்போர்கினி குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஒட்டுமொத்தமாக 25 யூனிட்டுகளை மட்டுமே அது விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதன் அனைத்து யூனிட்டுகளுமே விற்று தீர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே புதிதாக செர்விலோ ஆர்5 மாடலை செர்விலோ சைக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Cervelo R5 Bicycle Launched. Read In Tamil.
Story first published: Wednesday, September 16, 2020, 19:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X