சிஎஃப் மோட்டோ பிஎஸ்-6 பைக் மாடல்கள் விரைவில் அறிமுகமாகிறது!

சிஎஃப் மோட்டோ பிஎஸ்-6 பைக் மாடல்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சிஎஃப் மோட்டோ பிஎஸ்-6 பைக் மாடல்கள் விரைவில் அறிமுகமாகிறது!

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் தனது ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல்களை களமிறக்கியது. மேலும், கடந்த நவம்பரில் டெலிவிரிப் பணிகளையும் துவங்கியது. போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் சிஎஃப் மோட்டோ பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால், இளைஞர்களை குறுகிய காலத்திலேயே ஈர்க்கும் வாய்ப்பை பெற்றது.

சிஎஃப் மோட்டோ பிஎஸ்-6 பைக் மாடல்கள் விரைவில் அறிமுகமாகிறது!

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை ஒட்டியுள்ள தானே நகரில் முதல் பைக் ஷோரூமையும், அடுத்து பெங்களூரில் இரண்டாவது ஷோரூமையும் திறந்தது. சென்னை உள்ளிட்ட நாட்டின் இதர முக்கிய நகரங்களில் ஷோரூம்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

சிஎஃப் மோட்டோ பிஎஸ்-6 பைக் மாடல்கள் விரைவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், கொரோனா பிரச்னை மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, சிஎஃப் மோட்டோ வர்த்தகம் இந்தியாவில் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை மேம்பட்டு வருவதையடுத்து, தனது பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

சிஎஃப் மோட்டோ பிஎஸ்-6 பைக் மாடல்கள் விரைவில் அறிமுகமாகிறது!

தற்போது தானே, பெங்களூர் நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பிஎஸ்-6 பைக் மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது.

சிஎஃப் மோட்டோ பிஎஸ்-6 பைக் மாடல்கள் விரைவில் அறிமுகமாகிறது!

சிஎஃப் மோட்டோ நிறுவனம் இந்தியாவில் 300 என்கே, 650 என்எகே, 650 எம்டி மற்றும் 650 ஜிடி ஆகிய நான்கு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நான்கு மாடல்களும் விரைவில் பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

சிஎஃப் மோட்டோ பிஎஸ்-6 பைக் மாடல்கள் விரைவில் அறிமுகமாகிறது!

சிஎஃப் மோட்டோ 300 என்கே பைக் மாடலானது ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்திலான பைக் மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், டிஎஃப்டி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்பிளிட் இருக்கைகள், அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. இந்த பைக்கில் 292.4 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 33 பிஎச்பி பவரையும், 25 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

சிஎஃப் மோட்டோ பிஎஸ்-6 பைக் மாடல்கள் விரைவில் அறிமுகமாகிறது!

சிஎஃப் மோட்டோ 650 என்கே பைக் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளது. இதன் அடிப்படையிலான 650 எம்டி மாடலானது சிறிய மாறுதல்களுடன் சாதாரண சாலை மற்றும் சிறிய அளவிலான ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக 60 பிஎச்பி பவரையும், 56 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 649.3 சிசி எஞ்சின் உள்ளது. . 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சிஎஃப் மோட்டோ பிஎஸ்-6 பைக் மாடல்கள் விரைவில் அறிமுகமாகிறது!

சிஎஃப் மோட்டோ 650 ஜிடி பைக் மாடலானது நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 650 என்கே பைக்கில் இருக்கும் அதே எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் மாடல்களின் பிஎஸ்-6 மாடலின் விலையும் போட்டியாளர்களுக்கு மிக சவாலாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
CF Moto is planning to launch BS6 bike models in India very soon.
Story first published: Friday, July 31, 2020, 11:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X