சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்

இந்தியாவில் மிக சமீபத்தில் கால்பதித்த சீன இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சிஎஃப் மோட்டோவில் இருந்து இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய 250எஸ்ஆர் பைக்கை பற்றிய முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பைக்கின் பெயரின் பின்னால் இருக்கும் எஸ்ஆர் என்பது ஸ்போர்ட்ஸ் ரேசிங்கை குறிக்கும்.

சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்

சீனாவில் ஏற்கனவே சில சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த பைக் இந்திய சந்தையில் சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250 பைக்கிற்கு போட்டி மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன சந்தையில் இந்த 250சிசி பைக்கின் விலை CNY 18,580 ஆக உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.1.91 லட்சமாகும்.

சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்

எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப் மற்றும் C-வடிவில் ஒருங்கிணைந்த டிஆர்எல்களை கொண்டுள்ள இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கின் டிசைனை அமைப்பு இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனையாகி வரும் பிரபல மோட்டார்சைக்கிள்களுடன் சிறிது ஒத்து காணப்படுகிறது.

சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்

ஸ்டார்லைட் வெள்ளை மற்றும் ஸ்டார்லைட் கருப்பு என்ற இரு நிறத்தேர்வுகளில் மட்டுமே விற்பனையாகவுள்ள இந்த 250சிசி பைக்கின் இருக்கை தரையில் இருந்து 780மிமீ உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பைக் ரேஸர்களுக்கு இந்த பைக் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்

250எஸ்ஆர் பைக்கில் 249.2சிசி லிக்யூடு-கூல்டு DOHC சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை சிஎஃப் மோட்டோ நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 28 பிஎச்பி பவரை 9,750 ஆர்பிஎம்-லும், 22 என்எம் டார்க் திறனை 7,500 ஆர்பிஎம்-லும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்

இதன் இந்திய போட்டி மாடலாக விளங்கவுள்ள சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250 பைக்கில் உள்ள 249சிசி ஆயில்-கூல்டு SOHC சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 9,000 ஆர்பிஎம்-ல் 26 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்-ல் 22.6 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக பைக்கிற்கு வழங்கி வருகிறது.

சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்

இந்த இரு மோட்டார்சைக்கிள்களுடனும் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. சீனாவில் 250எஸ்ஆர் பைக்கை சிபிஎஸ், ஏபிஎஸ் என்ற இரு வெர்சன்களில் சிஎஃப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

முக்கியமான பாகமாக 250எஸ்ஆர் பைக்கில் டிஎஃப்டி இன்ஸ்ரூமெண்ட் கன்சோல் (ஏபிஎஸ் வெர்சனில் மட்டும் வண்ண கன்சோல்) வழங்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட் பைக்கான இதில் க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் கொடுக்கப்பட்டுள்ளது.

சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்

12 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்கை கொண்டுள்ள இந்த 250சிசி பைக்கின் பரிமாண அளவுகள் 2010x750x1080மிமீ ஆகும். வீல்பேஸ் 1360மிமீ ஆகும். முன்புறத்தில் 110/70 அளவிலும் பின்புறத்தில் 140/60 அளவிலும் ஆர்17 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்

ப்ரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 292மிமீ பெடல் டிஸ்க்கும் பின்புறத்தில் 220மிமீ ரோடாரும் வழங்கப்பட்டுள்ளன. எக்ஸாஸ்ட் சிஸ்டம் பெல்லி யூனிட்டிற்கு அடியில் குறைந்த நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரைடர் பைக்கை, ஸ்போர்ட் மற்றும் ஈக்கோ என்ற இரு மோட்களில் இயக்க முடியும்.

சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250க்கு போட்டியாக வரும் சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர்

ஏற்கனவே இந்தியாவில் 300என்கே, 650என்கே, 650எம்டி மற்றும் 650ஜிடி என்ற நான்கு பைக் மாடல்களை விற்பனை செய்துவடும் சிஎஃப் நிறுவனத்தில் இருந்து முதலில் 250எஸ்ஆர் பைக் வெளியாகுமா அல்லது இந்நிறுவனத்தில் இருந்து விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக கூறப்படும் 300சிசி பைக்கன 300எஸ்ஆர் பைக் வெளியாகுமா என்பது இதுவரை தெரியவரவில்லை.

இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் மேற்கூறப்பட்ட 4 பைக் மாடல்களும் எக்ஸ்ஷோரூமில் ரூ.2.29 லட்சத்தில் இருந்து ரூ.4.49 லட்சம் வரையில் விலையை கொண்டுள்ளன.

Most Read Articles
English summary
CF moto 250SR unveiled faired Sportsbike details
Story first published: Saturday, February 29, 2020, 16:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X