சிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்!! பிலிப்பைன்ஸில் அறிமுகமானது

சிஎஃப் மோட்டோ நிறுவனம் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் பைக்கை பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்!! பிலிப்பைன்ஸில் அறிமுகமானது

உலகளவில் பிரபலமான சிஎஃப் மோட்டோ சீனாவை சேர்ந்தது. இந்நிறுவனத்தில் இருந்து தற்போது பிலிப்பைன்ஸில் களமிறங்கியுள்ள 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் பைக்கின் விலை அங்கு இந்திய ரூபாயில் 5.64 லட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்!! பிலிப்பைன்ஸில் அறிமுகமானது

2019 ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த 700 சிஎல்-எக்ஸ் பைக் சிஎல்-எக்ஸ் ஸ்போர்ட் மற்றும் சிஎல்-எக்ஸ் அட்வென்ச்சர் என்ற இரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் சிஎஃப் மோட்டோவின் ஹெரிடேஜ் பைக் மாடல்கள் மட்டும் தான் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

சிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்!! பிலிப்பைன்ஸில் அறிமுகமானது

ஹெரிடேஜ் பைக் மாடல்கள் பொதுவாகவே லெதர் இருக்கை, இரு-நிற பெயிண்ட் மற்றும் கோல்டு நிற தொடுதல்கள் உடன் வழங்கப்படுவை ஆகும். சிஎல்-எக்ஸ் அட்வென்ச்சர் வேரியண்ட்டில் இரு விதமான பயன்பாட்டு டயர்கள் ஸ்போக் சக்கரங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

சிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்!! பிலிப்பைன்ஸில் அறிமுகமானது

இதன் அட்வென்ச்சர் பண்பிற்காக சிஎஃப் மோட்டோ நிறுவனம் உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார்கள் மற்றும் தலையணை தேர்வுடன் பெரிய விண்ட்ஸ்க்ரீன் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது. அதுவே சிஎல்-எக்ஸ் ஸ்போர்ட் கேஃப்-ரேஸர் வடிவத்தில் வழங்கப்படுகிறது.

சிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்!! பிலிப்பைன்ஸில் அறிமுகமானது

இதனால் இந்த வேரியண்ட்டில் ஹேண்டில்பார் சற்று தாழ்வாகவும், இருக்கை வித்தியாசமானதாகவும், பின் இருக்கை பயணிகளுக்கு கால் வைக்கும் பகுதிகளும் வழங்கப்படுகின்றன. இந்த வேரியண்ட்டில் அலாய் சக்கரங்கள் பைரெல்லி டியாம்லோ ரோஸ்ஸோ சூப்பர்கோர்ஸா டயர்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

சிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்!! பிலிப்பைன்ஸில் அறிமுகமானது

மற்றப்படி இரு வேரியண்ட்களிலும் ஒரே 692சிசி, இணையான-இரட்டை என்ஜின் தான் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 73 பிஎச்பி பவரை பெற முடியும். எல்இடி விளக்குகள், ப்ளூடூத் இணைக்கக்கூடிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவற்றை இந்த பைக்கில் சிஎஃப் மோட்டோ நிறுவனம் வழங்குகிறது.

சிஎஃப் மோட்டோவின் 700 சிஎல்-எக்ஸ் ஹெரிடேஜ் மோட்டார்சைக்கிள்!! பிலிப்பைன்ஸில் அறிமுகமானது

இந்திய சந்தையில் நுழைய சிஎஃப் மோட்டோ நிறுவனம் கடந்த சில வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் 700 சிஎல்-எக்ஸ் பைக் தற்போதைக்கு இந்தியாவிற்கு வருகை தருவதற்கு வாய்ப்பே இல்லை.

Most Read Articles
English summary
CFMoto 700 CL-X Heritage launched in Philippines
Story first published: Wednesday, December 2, 2020, 12:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X