Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 9 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 9 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 11 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
- Movies
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தண்ணி காட்டிய கொள்ளை கும்பல்... தனி ஆளாக நின்று 26 பைக்குகளை மீட்டெடுத்த சென்னை சூப்பர் காப்...
நீண்ட நாட்களாக தண்ணி காட்டி வந்த கொள்ளை கும்பலை தனியாளாக தேடிப்பிடித்து கைது செய்ததற்காக தலைமை காவலர் சரவணகுமாரை தமிழக காவல்துறை பாராட்டியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு பைக்குகளை மட்டுமே குறி வைத்து திருடி வந்ததாக 3 பேர் அடங்கிய கும்பலை சென்னைப் போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த கொள்ளைக் கும்பலைக் கைது செய்ததில் அபிராமபுரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் சரவணகுமாரின் பங்கே மிக முக்கியமானது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவரே இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக தனி ஆளாக நின்று பைக் திருட்டுகுறித்த விசாரணையை மேற்கொண்டவர் ஆவார்.

சரவணகுமார், அபிராமபுரம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த காவல்நிலையத்தில் தனது பணியைத் தொடங்கியதாகக் கூறப்படுகின்றது. அப்போது, அவரிடத்தில் சக காவலர் நண்பர் ஒருவர், தன்னுடைய விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு பைக் திருடப்பட்டு விட்டதாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக களமிறங்கிய சரவண குமார், சென்னையின் பிற பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பழைய குற்றவாளிகள் மற்றும் பைக் திருட்டுகுறித்த தகவலைப் பெறுவதற்காக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, 24 காவல்நிலையங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகள் திருடப்பட்டிருப்பதாக புகார்கள் இருப்பது சரவணகுமாருக்கு தெரிய வந்தது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையுயர்ந்தவை என்பதால் அவை செகண்டு ஹேண்ட் சந்தையில் விற்கப்படுவதற்காகவே திருடப்பட்டிருக்கும் என்பதை சந்தேகத்தின் அடிப்படையில் அவர் யூகித்தார். இதைநோக்கியே வழக்கைத் தொடரவும் ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து, பைக்குகள் திருடப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

ஆனால், திருடர்கள் சிசிடிவி கேமிராக்கள் இல்லாத இடங்களை மட்டுமே தேர்வு செய்து வாகனங்களை திருடியது தெரியவந்தது. ஆகையால், சரவணகுமாருக்கு திருடர்களை நெருங்குவது மேலும் சிக்கலாகியது. இருப்பினும், விடா முயற்சியுடன் இரண்டு மாதங்கள் விசாரணை நீடித்தது. மேலும், 56 நாட்களுக்கு இணையான சிசிடிவி காட்சிகளும் அவர் வசம் சேர்ந்தன. இருப்பினும், வழக்கில் முன்னேற்றம் இல்லை.

ஆனாலும், அயராத சரவணகுமார், ஏற்கனவே களவு செய்யப்பட்ட வாகனங்களைப் பின் தொடர ஆரம்பித்தார். அவ்வாறு பின்தொடர்ந்ததன் பலனாக கடந்த ஆகஸ்டு 6ம் தேதி அதிகாலை 5 மணியளவில் முதல் குற்றவாளி சிசிடிவி கேமிராவின் கண்களில் சிக்கினார்.

இவரை பின் தொடர்ந்ததன் மூலமாகவே கொள்ளையர்கள் என்ன மாதிரியான யுக்திகளைக் கையாண்டு வாகனங்களை திருடினார்கள் என்பது தெரியவந்தது. குறிப்பாக, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 10க்கும் அதிகமான நபர்களைப் போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

குறிவைத்து திருடப்படும் பைக்குகள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் மக்கள் அதிகம் உலாவும் பகுதியில் நிறுத்தி வைக்கப்படும். பின்னர், ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த வேறொரு நபர் அடுத்தடுத்த பகுதிக்கு அந்த பைக்கை நகர்த்துவார். இவ்வாறே காவலரின் பைக் முதல் பொதுமக்கள் பலரின் பைக்குகள் வெவ்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டு பிற மாவட்டங்களுக்குக் கடத்தப்பட்டிருக்கின்றன.

போலீஸாரையும், வழித்தடத்தையும் குழப்ப வேண்டும் என்பதற்காக கொள்ளையர்கள் மிகவும் நேர்த்தியாக இந்த யுக்தியைக் கையாண்டதாக தலைமை காவலர் சரவணகுமார் தெரிவித்தார். இதற்காக, நொச்சிக்குப்பம், டுமீல்குப்பம், பட்டினப்பாக்கம், சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளைக் கொள்ளையர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இவ்வாறு, பல யுக்திகளைக் கையாண்ட பலே கொள்ளையர்களே தற்போது தலைமைக் காவலர் சரவணகுமாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, முதல் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதுவரை, பத்து பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், பலர் வெளி மாநிலங்களில் இருந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களிடத்தில் இருந்து 26 ராயல் என்ஃபீல்டு தற்போது பைக்குகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இந்த பைக்குகள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்படுவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

சந்தையில் ரூ. 2.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த பைக்குகளைக் கொள்ளையர்கள் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனைச் செய்திருப்பதாக போலீஸாரின் விசாரணமை மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு வாட்ஸ்-ஆப் மற்றும் பேஸ்-புக் குழுக்களை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இந்த ஒட்டுமொத்த திடுக்கிடும் தகவல் அனைத்தும் தலைமைக் காவலர் சரவணகுமாரின் கடின உழைப்பினாலயே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. எனவேதான் இவரை தமிழக காவல்துறை தற்போது பாராட்டி வருகின்றது. மேலும், இவரை பாராட்டும் விதமாக ஐபிஎஸ் அதிகாரி ஆர் சுதாகர், அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ராயல் கேட்ச்! கிரேட்டர் சென்னை தலைமை காவலர் சரவணன், தொடர்ச்சியாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளை மட்டுமே திருடி வந்த கொள்ளையர்களை தனி ஆளாக நின்று பிடித்தவர். 26 பைக்குகள் மீட்கப்பட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் வசம் ஒப்படைப்பதற்காக தற்போது அவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன" என கூறியுள்ளார்.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இருசக்கர வாகன பிரியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. ஆண், பெண் என அனைத்து பாலர்களின் விருப்ப தேர்வாகவும் இந்த பைக் இருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளை மட்டுமே குறி வைத்து திருடி வந்த சம்பவம் சென்னை வாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற திருட்டில் இருந்து வாகனங்களைக் காக்கும் விதமாக பல்வேறு சிறப்பு கருவிகள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை, வாகன திருட்டைத் தடுப்பதுடன், தற்போது பைக் எங்கு இருக்கின்றது என்ற தகவலையும் நேவிகேஷன் வாயிலாக செல்போனுக்கு வழங்கும்.
Source: TNM