Just In
- 1 hr ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 3 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 3 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
- 4 hrs ago
பார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...
Don't Miss!
- News
பரபரப்பான அரசியல் சூழலில்... ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேமிராவின் கண்களில் சிக்கிய சைலென்சர் இல்லா பர்க்மேன் ஸ்கூட்டர்... ஆவலை எகிர செய்யும் புகைப்படங்கள்!!
சுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்கூட்டர் சைலென்சர் இன்றி கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. நாட்டின் இந்த நிலையை அறிந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் புது முக மின் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன.

அந்தவகையில், பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுசுகியும் அதன் மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் அதி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் பர்க்மேன் அடிப்படையிலான மின்சார ஸ்கூட்டரை உருவாக்கி வருகின்றது. இதையே விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்ப்படுகின்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சாலைகளில் வைத்து பல பரீட்சையில் சுசுகி நிறுவனம் ஈடுபடுத்தி வருகின்றது. அவ்வாறு, சுசுகி பர்க்மேன் மின்சார ஸ்கூட்டர் சாலையில் பல பரீட்சையில் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது. இதனை இந்தியன் ஆட்டோ பிளாக் தளம் வெளியிட்டிருக்கின்றது.

ஸ்பை செய்யப்பட்டிருக்கும் இந்த மின்சார ஸ்கூட்டர் வெள்ளை மற்றும் நீலம் ஆகிய ட்யூவல் டோன் நிறத்தில் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக், ஏத்தர் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு இந்த பர்க்மேன் அடிப்படையிலான மின்சார ஸ்கூட்டர் போட்டியாக அமைய இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் சைலென்சர் இல்லாததை வைத்தே, இது மின்சார ஸ்கூட்டர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுசுகி நிறுவனத்தின் சற்று விலையுயர்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றாக பர்க்மேன் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. இதனடிப்படையில் மின்சார ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருப்பதால் இது விற்பனைக்கு வரும்போது சற்று விலையுயர்ந்த பிரீமியம் ரக மின்சார ஸ்கூட்டராக சந்தைக்கு வரலாம் என யூகிக்கப்படுகின்றது.

இந்த மின்சார ஸ்கூட்டரில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் மற்றும் பேட்டரிகள் இடம்பெற இருக்கின்றன என்பது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும், சந்தையில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர்களில் ப்ளூடுத் இணைப்பு, நேவிகேஷன், ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் கிடைக்கின்றன.

இவற்றுடன் பர்க்மேன் அடிப்படையிலான மின்சார ஸ்கூட்டர் போட்டியிட இருப்பதால் இதிலும் மேற்கூறிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் கூடுதல் சில சிறப்பம்சங்கள் கிடைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதாவது, அதிக ரேஞ்ஜ் மற்றும் 4ஜி இன்டர்நெட் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

விலை மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் பர்க்மேன் மின்சார ஸ்கூட்டர்களின் புகைப்படம் சுசுகி நிறுவனத்தின் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆவலைத் தூண்டியிருக்கின்றது.