குழந்தையாக மாறிய இந்தியாவின் தலைமை நீதிபதி! வியப்பில் நீதித்துறை! அந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

இந்திய தலைமை நீதிபதியின் செயலால் ஒட்டுமொத்த இந்திய நீதித்துறையில் வியப்பில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

குழந்தையாக மாறிய இந்தியாவின் தலைமை நீதிபதி! வியப்பில் ஆழ்ந்த நீதித்துறை! அந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

வாகனங்கள் மீது பிரியம் இல்லாதவர்களை பார்ப்பது மிக மிக கடினம். அதிலும், இருசக்கர வாகனங்கள்மீது ஆசையில்லாதவர்களைப் பார்ப்பது அரிதினும் அரிது. இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வாகன என்பது பிடித்தமான விஷயமாகவே உள்ளது.

குழந்தையாக மாறிய இந்தியாவின் தலைமை நீதிபதி! வியப்பில் ஆழ்ந்த நீதித்துறை! அந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

ஏன், ஒரு சில குழந்தைகள் தன்னுடைய அப்பா பைக்கை எடுத்த உடனே அவருடன் ஒரு ரவுண்டு அடித்தே ஆக வேண்டும் என அடம்பிடிப்பதைகூட நம்மில் பலர் பார்த்திருப்போம். அந்தவகையில், வாகனங்கள் மீது இனம் புரியாத மோகம் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

குழந்தையாக மாறிய இந்தியாவின் தலைமை நீதிபதி! வியப்பில் ஆழ்ந்த நீதித்துறை! அந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

இந்நிலையில், இந்தியாவையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கின்ற வகையில் ஓர் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில், இந்தியாவின் தலைமை நீதிபதியான ஷரத் அரவிந்த் பாப்டே, ஹார்லி டேவிட்சனின் விலையுயர்ந்த பைக்கை இயக்க முயற்சிப்பதுபோல் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.

குழந்தையாக மாறிய இந்தியாவின் தலைமை நீதிபதி! வியப்பில் ஆழ்ந்த நீதித்துறை! அந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

அந்த பைக் இந்தியாவில் ரூ. 51 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. எனவே, ஒரு சிலர் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேதான் இந்த பைக்கை வாங்கிவிட்டாரோ என எண்ணி வருகின்றனர். ஆனால், அது அவருடைய சொந்த பைக் இல்லை என்பதே உண்மை.

குழந்தையாக மாறிய இந்தியாவின் தலைமை நீதிபதி! வியப்பில் ஆழ்ந்த நீதித்துறை! அந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோதே பாப்டே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். அதாவது, நிகழ்ச்சியின் காட்சிப்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹார்லி டேவிட்சன் லிமிடெட் எடிசன் சிவிஓ 2020 பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இதைக் கண்டு மெய் மறந்த நீதிபதி பாப்டே, அதன் மீது ஆசைப்பட்டு, புகைப்படத்தை எடுத்துள்ளார். நீதிபதியின் இந்த செயலைக் கண்டு நெட்டிசன்கள் மற்றும் நீதித்துறை வட்டாரங்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.

குழந்தையாக மாறிய இந்தியாவின் தலைமை நீதிபதி! வியப்பில் ஆழ்ந்த நீதித்துறை! அந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

இந்த படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. உண்மையைக் கூற வேண்டுமானால் நீதிபதி பாப்டே ஓர் மிகுந்த வாகன பிரியர் ஆவார். அவருக்கு சிறிய வயது முதலே இருசக்கர வாகனம் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதிலும், புல்லட் என்றால் பேராசையாம். இதன் வெளிப்பாடகவே ஹார்லி டேவிட்சன் லிமிடெட் எடிசன் சிவிஓ 2020 பைக்குடன் எடுத்த புகைப்படம் இருக்கின்றது.

குழந்தையாக மாறிய இந்தியாவின் தலைமை நீதிபதி! வியப்பில் ஆழ்ந்த நீதித்துறை! அந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் லிமிடெட் எடிசன் சிவிஓ 2020 மாடலை மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் உருவாக்கியுள்ளது. இதில், 1,923சிசி திறன் கொண்ட ட்வின் கூல்டு மில்வாவுக்கீ-8 117 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 166 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதன் எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

குழந்தையாக மாறிய இந்தியாவின் தலைமை நீதிபதி! வியப்பில் ஆழ்ந்த நீதித்துறை! அந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

இந்த மோட்டார்சைக்கிள் லாங் டிரைவ் செல்லும் ரைடர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஓர் பைக்காகும். குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்தியாவின் கடைக்கோடிகளான கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைகூட இந்த பைக்கை வைத்து பெரியளவில் அசௌகரியத்தை உணராமல் பயணிக்க முடியும்.

குழந்தையாக மாறிய இந்தியாவின் தலைமை நீதிபதி! வியப்பில் ஆழ்ந்த நீதித்துறை! அந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

மேலும், இந்த நெடுந்தூர பயணத்தின்போது உதவியளிக்கும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் காணப்படுகின்றது.

குழந்தையாக மாறிய இந்தியாவின் தலைமை நீதிபதி! வியப்பில் ஆழ்ந்த நீதித்துறை! அந்த பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

இத்துடன், பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ், ரெஃப்ளக்ஸ் டிஃபென்சீவ் ரைடர் சிஸ்டம், அட்வான்ஸ்ட் சேஸிஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பிரேக் கன்ட்ரோல் மற்றும் பவர்ட்ரெயின் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் ஹார்லி டேவிட்சன் லிமிடெட் எடிசன் சிவிஓ 2020 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chief Justice of India Sharad Bobde Photographed On Harley-Davidson Limited Edition CVO. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X