இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் சீன நிறுவனம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவதற்கு சீனாவை சேர்ந்த நியூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் நியூ!

சீனாவை சேர்ந்த நியூ டெக்னலாஜீஸ் (Niu Technologies) நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் சீனாவில் மட்டுமின்றி, உலக அளவில் 38 நாடுகளில் 29 வினியோகஸ்தர்கள் மூலமாக தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதுவரை ஒரு மில்லியன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

இந்த நிலையில், நியூ நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, இந்தியாவிலும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

நியூ டெக்னலாஜீஸ் நிறுவனம் தற்போது எம்.க்யூ.ஐ (MQi)வரிசையில் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்கிறது. தவிரவும், NQi, UQi, NIU Aero, Gova மற்றும் TQi வரிசையிலும் அதிசெயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

இதில், MQi மற்றும் UQi வரிசையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சர்வதேச அளவில் 7 முக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறது. தவிரவும், விரைவில் எம்.க்யூ.ஐ2 என்ற பிராண்டில் மின்சார சைக்கிள்களையும், RQi பிராண்டில் புதிய மோட்டார்சைக்கிளையும் அறிமுகப்படுத்த உள்ளது.

நியூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கொடுக்கப்படும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும இசியூ சாதனங்களுக்கு நிறுவனத்திடமிருந்து நேரடியாக அப்டேட் செய்யும் வசதி இருக்கிறது. இதனால், வாகனத்தின் செயல்திறன், ரேஞ்ச் உள்ளிட்டவற்றை அவ்வப்போது மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் நியூ வழங்குகிறது.

மேலும், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், கீ லெஸ் இக்னிஷன், ரைடிங் மோடுகள் என தொழில்நுட்ப அளவில் மிகச் சிறந்த ஸ்மார்ட் ஸ்கூட்டர்களாக இருக்கும். இந்த ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து பல்வேறு வகைகளிலும், டிசைனிலும் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
China based Niu is planning to enter the Indian market with wide range of electric scooter models.
Story first published: Friday, May 1, 2020, 12:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X