கல்லூரி மாணவரின் இறுதியாண்டு ப்ராஜெட்டால் புதிய தோற்றத்தை பெற்ற கேடிஎம் ஆர்சி390...

டிசைன்களை பொறுத்தவரையில் கேடிஎம் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு நிகர் அவை மட்டுமே. இருப்பினும் கல்லூரி மாணவர் ஒருவர் தனது இறுதியாண்டு ப்ராஜெக்ட்டிற்காக கேடிஎம் ஆர்சி390 பைக்கை மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்து ஐ அம் எ பைக்கர் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கல்லூரி மாணவரின் இறுதியாண்டு ப்ராஜெட்டால் புதிய தோற்றத்தை பெற்ற கேடிஎம் ஆர்சி390...

கேடிஎம் ஆர்சி390 பைக்கை மாடிஃபைடு செய்த கல்லூரி மாணவரின் பெயர் சௌரவ் வெர்மா. தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் இவர் தனது இறுதியாண்டு ப்ராஜெக்ட்டிற்காக மாற்றியமைத்துள்ள பைக்கிற்கு கேடிஎம் ஆர்சி390 எஸ்ஆர்வி என பெயர் வைத்துள்ளார்.

கல்லூரி மாணவரின் இறுதியாண்டு ப்ராஜெட்டால் புதிய தோற்றத்தை பெற்ற கேடிஎம் ஆர்சி390...

இந்த மாடிஃபைடு பைக்கில் வழங்கப்பட்டுள்ள கூர்மையான டிசைன் பைக்கிற்கு பறவையின் தோற்றத்தை கொடுக்கிறது. இத்தகைய தோற்றத்தை விலை அதிகம் கொண்ட சில சூப்பர்பைக்குகளிலும் பார்த்திருக்கலாம். குறிப்பாக இதன் முன்புற பகுதி எம்வி அகுஸ்டாவையும், பின்புற பகுதி டுகாட்டி பைக்குகளையும் ஒத்து காணப்படுகிறது.

கல்லூரி மாணவரின் இறுதியாண்டு ப்ராஜெட்டால் புதிய தோற்றத்தை பெற்ற கேடிஎம் ஆர்சி390...

டெயில்லேம்ப்கள் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து பேனல்களையும் குறைவான அடர்த்தி கொண்ட ஃபைபர்போர்ட்களினால் சௌரவ் வெர்மாவே சொந்தமாக வடிவமைத்துள்ளார்.

கல்லூரி மாணவரின் இறுதியாண்டு ப்ராஜெட்டால் புதிய தோற்றத்தை பெற்ற கேடிஎம் ஆர்சி390...

பைக்கை அகலமாக காட்ட கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள பேனல்களும் அனைத்தும் பிளாஸ்டிக் ஆகும். இதனை அவர் எம்-மெட்டல் பயன்படுத்தி பைக்குடன் இணைத்துள்ளார். இவை மட்டுமின்றி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட்டும் வழக்கமான ஆர்சி390 மாடலில் இருந்து வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவரின் இறுதியாண்டு ப்ராஜெட்டால் புதிய தோற்றத்தை பெற்ற கேடிஎம் ஆர்சி390...

மற்றப்படி பைக்கின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் கேடிஎம் ஆர்சி390 பைக்கின் அதே 373சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூல் இன்ஜெக்டட் என்ஜின் தான் இந்த மாடிஃபைடு பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 43 பிஎச்பி பவரையும் 36 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

கல்லூரி மாணவரின் இறுதியாண்டு ப்ராஜெட்டால் புதிய தோற்றத்தை பெற்ற கேடிஎம் ஆர்சி390...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பட் க்ளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. கேடிஎம் நிறுவனம் ட்யூக், ஆர்சி என்ற இரு பிரிவுகளில் பைக்குகளை மற்ற நிறுவனங்களை காட்டிலும் மலிவான விலையில் சந்தைப்படுத்தி வருகிறது.

கல்லூரி மாணவரின் இறுதியாண்டு ப்ராஜெட்டால் புதிய தோற்றத்தை பெற்ற கேடிஎம் ஆர்சி390...

தொடர்ச்சியாக பிஎஸ்6 பைக்குகளை அறிமுகப்படுத்தி வரும் இந்நிறுவனம் ட்யூக் மற்றும் ஆர்சி பிரிவுகளுடன் அட்வென்ஜெர் ரக பைக்குகளையும் இந்தியாவில் களமிறக்கி வருகிறது. இந்த வகையில் 390சிசி-ல் புதிய அட்வென்ஜெர் பைக் சில மாதங்களுக்கு அறிமுகமானது.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
College Student’s Project Transforms The KTM RC390 Into A Much More WILDER Bike
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X