டக்கார் ராலி 2-வது ஸ்டேஜில் விடாக் கண்டனாக அசத்திய ஹீரோ அணி வீரர்!

டக்கார் ராலியின் 2வது ஸ்டேஜில் ஹீரோ வீரர் பாவ்லோ கான்க்ளேவ்ஸ் தொடர்ந்து முதல் 15 இடங்களுக்குள் வந்து அசத்தியுள்ளார். டக்கார் ராலி இரண்டாவது ஸ்டேஜ் முடிவுகள் விபரத்தை தொடர்ந்து காணலாம்.

டக்கார் ராலி 2-வது ஸ்டேஜில் விடாக் கண்டனாக அசத்திய ஹீரோ அணி வீரர்!

உலக புகழ்பெற்ற டக்கார் ராலி பந்தயம் முதல்முறையாக சவூதி அரேபியாவில் நடக்கிறது. மொத்தம் 12 ஸ்டேஜ் கொண்டதாக டக்கார் ராலி நடக்கிறது. கரடுமுரடான சாலைகள், திக்குதெரியாத மோசமான பாலைவனப் பிரதேசங்கள், மலைகள் வழியாக இந்த போட்டி நடத்தப்படுகிறது.

டக்கார் ராலி 2-வது ஸ்டேஜில் விடாக் கண்டனாக அசத்திய ஹீரோ அணி வீரர்!

இந்த ஆண்டுக்கான டக்கார் ராலி நேற்று முன்தினம் ஜெத்தாவில் துவங்கியது. முதல் ஸ்டேஜில் இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் மற்றும் ஷெர்கோ டிவிஎஸ் ரேஸிங் அணிகளின் வீரர்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து அசத்தினர்.

டக்கார் ராலி 2-வது ஸ்டேஜில் விடாக் கண்டனாக அசத்திய ஹீரோ அணி வீரர்!

இந்த நிலையில், நேற்று இரண்டாவது ஸ்டேஜ் போட்டி நடந்தது. அல் வஜ் பகுதியிலிருந்து நியோம் என்ற பகுதி வரை 367 கிமீ தூரத்திற்கு இந்த இரண்டாவது ஸ்டேஜ் போட்டி நடந்தது. சூப்பர் மராத்தான் என்று குறிப்பிடப்படும் இந்த போட்டியிலும் வீரர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

டக்கார் ராலி 2-வது ஸ்டேஜில் விடாக் கண்டனாக அசத்திய ஹீரோ அணி வீரர்!

இந்த போட்டியில் முதல் ஸ்டேஜில் அசத்திய ஹீரோ அணியை சேர்ந்த கான்க்ளேவ்ஸ் இரண்டாவது ஸ்டேஜிலும் முதல் 15 இடங்களுக்குள் வந்து தனது முன்னிலையை தக்க வைத்தார். இரண்டாவது ஸ்டேஜில் பைக் பிரிவில் 12வது இடத்தையும், ஒட்டுமொத்த அளவில் 14வது இடத்தையும் பெற்றார்.

டக்கார் ராலி 2-வது ஸ்டேஜில் விடாக் கண்டனாக அசத்திய ஹீரோ அணி வீரர்!

இரண்டாவது ஸ்டேஜ் குறித்து கான்க்ளேவ்ஸ் குறிப்பிடுகையில்," இரண்டாவது ஸ்டேஜில் எந்த தவறும் செய்யாமல் நிதானமாகவும், நல்ல விதமாகவும் நிறைவு செய்தோம். பைக்கில் எந்தவித தொழில்நுட்ப பிரச்னையும் இல்லை. அடுத்தடுத்த ஸ்டேஜ்களில் தொடர்ந்து வேகத்தை கூட்டி, முன்னேறுவதற்கு திட்டமிட்டுள்ளேன்," என்று தெரிவித்தார்.

டக்கார் ராலி 2-வது ஸ்டேஜில் விடாக் கண்டனாக அசத்திய ஹீரோ அணி வீரர்!

ஹீரோ அணியை சேர்ந்த செபாஸ்டியன் பஹ்லர் 21வது இடத்தை பிடித்தார். ஹீரோ அணியின் இந்திய வீரரான சி.எஸ்.சந்தோஷ் 54வது இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்த தர வரிசையில் 48வது இடத்தை பெற்றிருக்கிறார்.

டக்கார் ராலி 2-வது ஸ்டேஜில் விடாக் கண்டனாக அசத்திய ஹீரோ அணி வீரர்!

மறுபுறத்தில் டிவிஎஸ் அணியின் இந்திய வீரரான ஹரித் நோவா முதல் ஸ்டேஜில் விபத்தில் சிக்கியதால் 111வது இடத்தை பிடித்தார். ஆனால், கண்ணில் காயம் ஏற்பட்ட நிலையிலும், அதனை பொருட்படுத்தாது இரண்டாவது ஸ்டேஜில் பங்கேற்று 52வது இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்த பிரிவில் 65 இடத்தில் உள்ளார்.

டக்கார் ராலி 2-வது ஸ்டேஜில் விடாக் கண்டனாக அசத்திய ஹீரோ அணி வீரர்!

டிவிஎஸ் அணியின் மற்ற வீரர்களான லாரன்ஸோ சான்டலினோ 17வது இடத்தையும், அட்ரியன் மெட்ஜ் 18வது இடத்தையும் பிடித்தனர். ஒட்டுமொத்த தர வரிசையில் மெட்ஜ் 16வது இடத்தில் உள்ளார். சான்டலினோ 22வது இடத்தில் உள்ளார். டிவிஎஸ் அணியை சேர்ந்த மற்றொரு வீரர் ஜானி அபுபெர்ட் இரண்டாவது ஸ்டேஜில் 22வது இடத்திலும், ஒட்டுமொத்த தர வரிசையில் 18வது இடத்திலும் உள்ளார்.

டக்கார் ராலி 2-வது ஸ்டேஜில் விடாக் கண்டனாக அசத்திய ஹீரோ அணி வீரர்!

இரண்டாவது ஸ்டேஜில் பைக் பிரிவில் சாம் சுந்தர்லேண்ட் முதன்மை பெற்றார். இரண்டாவது ஸ்டேஜில் கார் பிரிவில் ஆர்லேண்டோ டெரரானோவா முதன்மை பெற்றார்.

டக்கார் ராலி 2-வது ஸ்டேஜில் விடாக் கண்டனாக அசத்திய ஹீரோ அணி வீரர்!

இதனிடையே, இரண்டு முறை ஃபார்முலா ஒன் சாம்பியன் பெற்ற பிரபல வீரர் ஃபெரானான்டோ லாரென்ஸோ டக்கார் ராலியில் பின்னடவை சந்தித்தார். இரண்டாவது ஸ்டேஜில் அவரது காரின் சக்கரம் உடைந்ததால், அவசர உதவி குழுவினர் வருவதற்கு நேரம் எடுத்ததால், அவர் பின்னடவை சந்தித்தார்.

Most Read Articles
English summary
Hero Motosports team rider Paulo Goncalves has finished the stage in 12th position and 14th in the overall standings in 2020 Dakar rally.
Story first published: Tuesday, January 7, 2020, 14:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X