கொரோனாவிற்கு எதிரான போர்: சிறப்பு படையை உருவாக்கிய டெல்லி போலீஸ்.. இனி ஒருவரைகூட வைரஸ் தொற்றாது..!

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையை வைத்து மக்களை அடித்து விரட்டி வரும் அரசுகளுக்கு மத்தியில் அதே காவல்துறையை வைத்து சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றது டெல்லி அரசு. இதற்காக தனி போலீஸ் பேட்ரோல் படையை அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் உருவாக்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்: சிறப்பு படையை உருவாக்கும் டெல்லி போலீஸ்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் காடுகளில் பற்றிய தீயைப் போல் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றது. மறு பக்கம் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உலக நாடுகள் பலவற்றில் மக்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக மக்களைத் தனிமைப்படுத்துவதன் மூலமாக மட்டுமே உயிர் கொல்லி வைரஸான கொரோனா பரவலை தவிர்க்க முடியும்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்: சிறப்பு படையை உருவாக்கும் டெல்லி போலீஸ்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

இதன்காரணமாக, உலக நாடுகள் பல தங்களின் மக்களை தனிமைப்படுத்தி வேதனைக்கு தள்ளியிருக்கின்றன. இந்தியாவிலும் இதே நிலைதான் தற்போது நீடித்து வருகின்றது. இதற்காக வருகின்ற 14ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிற வேறு எதற்காகவும் வெளியில் வரக்கூடாது. இருப்பினும், பலர் வழக்கம்போல் சுற்றி திரிந்து, அரசின் நோக்கத்தைச் சீர்குலைத்து வருகின்றனர்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்: சிறப்பு படையை உருவாக்கும் டெல்லி போலீஸ்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

இத்தகையோரால், கொரோனா தொற்று அதிகம் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாதிரியான நபர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே டெல்லி புதுமையான பேட்ரோல் படையை உருவாக்கியிருக்கின்றது.

இதற்காக பிரத்யேகமாக 40 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பேட்ரோல் பைக்குகள் அனைத்தும் தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் பணியை மேற்கொள்ள இருக்கின்றன.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்: சிறப்பு படையை உருவாக்கும் டெல்லி போலீஸ்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

அவை, தேசிய ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்துகின்ற வகையில் பணியை செய்ய இருக்கின்றன. இதில், ஆண் மற்றும் பெண் இரு பால் போலீஸாரும் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர். இந்த குழு தேசிய ஊரடங்கை உறுதி செய்வதோடு, அறிவிப்புகள் மூலம் கொரோனா வைரஸ் குறித்த சிறப்பு விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்க இருக்கின்றது.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்: சிறப்பு படையை உருவாக்கும் டெல்லி போலீஸ்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

மக்கள் பலர் கொரோனா வைரஸின் தீவிரம்குறித்த அறிந்திராத காரணத்தினாலயே இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஜாலியாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இம்மாதிரியான நடவடிக்கையின் காரணமாகவே இத்தாலி மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் கடுமையான பின் விளைவுகளைச் சந்தித்து வருகின்றன. இதே நிலை இந்தியாவிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்: சிறப்பு படையை உருவாக்கும் டெல்லி போலீஸ்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

அதனடிப்படையிலேயே டெல்லி அரசு இந்த சிறப்பு பேட்ரோல் படையை உருவாக்கியிருக்கின்றது. இந்த பேட்ரோல் பைக்குகள் வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொள்ளும். அதே நேரத்தில் தேசிய ஊரடங்கை கண்டிப்பாக பின்பற்றுவதற்காக, மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தலையும், எச்சரிக்ககையும் செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்: சிறப்பு படையை உருவாக்கும் டெல்லி போலீஸ்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

இதுகுறித்து டெல்லி தெற்கு பகுதிக்கான போலீஸ் கமிஷனர் அதுல் குமார் கூறுகையில், "பேட்ரோல் பைக்குகள் தெற்கு பகுதியின் அனைத்து தெருக்களிலும் வலம் வரும். தடை நாட்களில் மக்கள் கூடி நின்று பேசுவது மற்றும் கூட்டமாக செயல்படுவது உள்ளிட்டவற்றை முற்றிலுமாக தடுக்கும்" என தெரிவித்தார்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்: சிறப்பு படையை உருவாக்கும் டெல்லி போலீஸ்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

இதைமீறி மக்கள் சாலையில் காணப்பட்டால் அவர்களை உடனடியாக வீடு திரும்பும்படி எச்சரிக்கப்படும். இதேபோன்று குறிப்பிட்ட எச்சரிக்கைகளுக்கு பின்னர் விதிமீறி நிற்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதுல் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்: சிறப்பு படையை உருவாக்கும் டெல்லி போலீஸ்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

மேலும் இந்த பேட்ரோல் பைக்குகள், லாரி, டெம்போக்கள் மற்றும் டேங்கர்கள் உள்ளிட்ட ஏதேனும் சந்தேகத்திற்கிடமாக செயல்படுவதை உணர்ந்தால், அந்த வாகனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்: சிறப்பு படையை உருவாக்கும் டெல்லி போலீஸ்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

தொடர்ந்து, மளிகை கடைகள், காய்கறி கடைகள், பால் விநியோகிக்கும் இடங்கள், ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளுக்கு அருகில் நிரந்தரமாக காவலர்கள் நிலை நிறுத்தப்பட இருக்கின்றனர். இங்கு சமூக இடைவெளியை அவர்கள் உறுதிப்படுத்துவர்கள்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டம்: சிறப்பு படையை உருவாக்கும் டெல்லி போலீஸ்.. இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..

கொரோனாவிற்கு எதிரான இந்த போராட்டத்தில் சில சமூக விரோத செயல்களையும் பேட்ரோல் பைக்குகள் நோட்டமிட இருக்கின்றன. டெல்லி காவல்துறையின் இந்த தனித்துவமான முயற்சி வரவேற்கும் வகையில் உள்ளது. மேலும் பலர் சமூக வலை தளங்களில் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Police Special Launches Patrol For Spread Awareness To Public About Covid. Read In Tamil.
Story first published: Friday, April 3, 2020, 11:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X