கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

ஆட்டோ எக்ஸ்போவில் மிகவும் வித்தியாசமான தோற்றம் கொண்ட ஃபேட் பாய் மின்சார பைக் காட்சியளித்துள்ளது. இது எந்த நிறுவனத்தின் பைக் மற்றும் சிறப்பு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

வாகனங்களுக்கான மாபெரும் கண்காட்சி நொய்டாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில், உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் புத்தம் புதிய மற்றும் வருங்கால வாகனங்களை பிரத்யேகமாக காட்சிப்படுத்தி வருகின்றன.

கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

இதில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள வாகனங்கள் மற்றும் எதிர்காலத்தில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

அந்தவகையில், கண்காட்சிக்கு வந்த வெகுஜன பார்வையாளர்களைக் கவர்கின்ற வகையில் ஓர் பைக் கண்காட்சி கூடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இது வெகுவிரைவில் இந்தியாவில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

இந்த கவர்ச்சிகரமான வாகனத்தை டெவோட் மோட்டார்ஸ் என்ற நிறுவனமே காட்சிக்காக நிலைநிறுத்தியிருந்தது. ஆரம்பநிலை நிறுவனமான இது கடந்த 2019ம் ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

இந்நிலையிலேயே அதன் முதல் புரோட்டோ டைப் எனப்படும் முன்மாதிரி மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2020-இல் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மின்சார உச்சபட்சமாக மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டதாகும்.

கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

மேலும், இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை ரேஞ்சை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன், இந்த பைக்கில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் நம்மை கவர்கின்ற வகையில் உள்ளது.

கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

குறிப்பாக, சாவியில்லாமல் பயன்படுத்துவது, மாடுலர் பேட்டரிகள், அதிக சார்ஜ் பாதுகாப்பு மற்றும் ரீ ஜெனரேட்டிவ் பிரேக் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அசத்தலானதாக உள்ளது. இதேபோன்று, நீங்கள் பைக்கின் முழு ரேஞ்சான 200 கிமீட்டரையும் பயன்படுத்திவிட்டீர்கள் என்றால், இந்த பைக் தானாகவே உங்களை சார்ஜிங் போர்டிற்கு வழி நடத்தும். இதற்கான தொழில்நுட்பமும் இந்த மின்சார பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

இது அதிவேக சார்ஜிங் திறனைக் கொண்ட எலெக்ட்ரிக் பைக்காகும். ஆனால், எந்த வேகத்தில் சார்ஜ் ஆகும் என்ற தகவலை உற்பத்தி நிறுவனம் வெளியிடவில்லை. தொடர்ந்து, பேட்டரி திறன் மற்றும் எஞ்ஜின் திறனைப் பற்றிய தகவலையும் அது வெளிப்படுத்தவில்லை.

கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

டோவேட் நிறுவனத்தின் இந்த மின் மோட்டார் சைக்கிளின் தோற்றம் புத்தம் புதிய வடிவமைப்பில் காட்சியளிக்கின்றது. இதனாலேயே இந்த பைக்கின் சிறப்பம்சத்தைப் பற்றி அறிந்துகொள்ள பலர் ஆர்வம் காட்டினர். குறிப்பாக, மிகவும் குண்டான டேங்க் மற்றும் இஞ்ஜினைச் சுற்றிய பேனல்கள் மின்சார பைக்கிற்கு ஃபேட் பாய் தோற்றத்தை வழங்கியது.

கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

அதேசமயம், அதன் வட்டவடிவிலான ஹெட்லேம்ப் ஹார்லி டேவிட்சனின் பைக் தோற்றத்தையும் லேசாக வழங்கும் வகையில் உள்ளது. இத்துடன், இந்த மின்சார பைக்கின் பின் தோற்றம் பெண்களின் கவர்ச்சியான இடைக்கு சமமான பிம்பத்தை வெளிப்படுத்துகின்றது.

கொழு கொழு ஃபேட் பாயாக காட்சியளித்த வித்தியாசமான மின்சார பைக்... இதோட ஸ்டைலே வேற ரேஞ்ச்..!

இந்த பிரத்யேக பைக்கை இந்த காட்சிப்படுத்துதலுக்கு அடுத்து உற்பத்தி பணிக்கு ஆயத்தமாவதற்கான பணியை டெவோட் மேற்கொண்டு வருகின்றது. ஆகையால், நடப்பாண்டின் இறுதிக்குள் இந்த பைக்குகள் விற்பனைக்குக் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Devot Electric Bike Unveiled At Auto Expo 2020. Read In Tamil.
Story first published: Saturday, February 8, 2020, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X