இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு

1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு பைக் இந்தியர்களின் கை வண்ணத்தால் நவீன யுக பைக்காக மாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு நமது சந்தையில் எப்போதுமே தனித்துவமான வரவேற்பு உண்டு. இது நேற்று, இன்று கிடைக்க ஆரம்பித்த டிமாண்ட் அல்ல, வெகு நாட்களாக நிலவி வரும் டிமாண்டாகும். எனவேதான் அந்நிறுவனத்தின் மிகவும் பழமையான மாடல்களை தற்போதும் நாட்டின் சாலையில் பார்க்க முடிகின்றது.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

குறிப்பாக, பழைய தோற்றம் மாற்றப்படாத நிலையிலேயே அவை காட்சியளிக்கின்றன. அதேசமயம், ஒரு சிலர் அந்த பைக்குகளை தற்காலத்திற்கு ஏற்பவாறும் மாற்றியமைத்து (மாடிஃபை) வருகின்றனர்.

அந்தவகையில் நவீன தோற்றத்திற்கு ஏற்பவாறு மாறியிருக்கும் டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு பைக்கைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

இந்த மாற்றத்தால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பழைய புல்லட் தற்போது பார்ப்பதற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பாப்பர் ரக பைக்காக மாறியிருக்கின்றது. இந்த வியத்தகு மாற்றத்தை மத்திய பிரதேச மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டைம் மோட்டார் சைக்கிள் நிறுவனம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

பைக்குறித்து வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இதனை கார்டாக் தளம் வெளியிட்டுள்ளது.

புதிய தோற்றத்தைப் பெற்றிருக்கும் இந்த பைக் டீசல் எஞ்ஜின் கொண்ட புல்லட் என்பதைக் காட்டிலும் 1959ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மாடல் என்பது கூடுதல் சிறப்பான ஒன்று.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

அதேசமயம், இதனை டீசல் எஞ்ஜின் கொண்ட பைக்காக அதன் முந்தைய உரிமையாளரே மாற்றியமைத்துள்ளார். அதிக மைலேஜிற்காக இவ்வாறு மாற்றியிருக்கின்றார். இந்த மாற்றத்திற்கு முன்னர் வரை அந்த பைக் பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட பைக்காகவே வலம் வந்துள்ளது. இந்த நிலையில்தான் புதிய மாறுதலாக தற்போது உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

இந்த மாற்றத்திற்காக ராயல் என்பீல்டின் பாடி பேனல்கள், மட்குவார்ட், பேட்டரி கவர் மற்றும் செயின் குவார்ட்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, நீக்கப்பட்ட பாகங்களின் இடத்தை நிரப்பும் விதமாக ஹார்லி டேவிட்சன் பாப்பர் தோற்றத்திற்கு ஏற்பவாறு புதிய கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

இத்துடன், சற்று அகலமான 19 இன்ச் கொண்ட டயர், ஷாக் அப்சார்பர் மற்றும் லெதர் ஹேண்ட் கிரிப் உள்ளிட்டவை கூடுதலாக பொருத்தப்பட்டிருக்கின்றன.

மேலும், பைக்கின் கவர்ச்சியை சற்று கூடுதலாக்குகின்ற வகையில் ஹேண்டில் பார், பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன. பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள் குரோம் பூச்சுக் கொண்ட பார் எண்ட் லிவர்களல் ஆகும்.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

இவை, ராயல் என்பீல்டிற்கு வேற லெவல் தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றன. இதனைக் கூடுதல் மெருகேற்றும் விதமாக ப்யூவல் டேங்க், எஞ்ஜின் குவார்ட் (இது ஃபேன் போன்று சுழலும் தன்மைக் கொண்டது), முன் வீல் டிஸ்க், டூல் பாக்ஸ் கவர் மற்றும் ரியர் மட்குவார்ட் உள்ளிட்டவற்றிற்கு நீளம் நிறம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

இதுமட்டுமின்றி ப்யூவல் டேங்கின்மீது இது டீசல் எஞ்ஜின் என்பதை வெளிப்படுத்தும் விதமாக டீசல் என்ற எழுத்துக்கள் பொறிக்க கிராஃபிக்ஸ்கள் ஒட்டுப்பட்டுள்ளன.

பைக்கின் உருவம் பெயிண்டிங் அம்சத்தைப் போலவே எலெக்ட்ரிக்கள் அம்சங்களும் முழுமையாக மாற்றப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், முகப்பு, ரியர் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் இருக்கும் மின் விளக்குகள் மாற்றப்பட்டிருக்கின்றன.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

இந்த புதிய மாற்றங்களுடன் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் சிங்கிள் இருக்கை பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த இருக்கைக்கு பழுப்பு நிற லெதர் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, ராயல் என்ஃபீல்டு பைக்கின் எக்சாஸ்ட் சிஸ்டமும் மாற்றப்பட்டு பைப் மாதிரியான சைலென்சர் பொருத்தப்பட்டிருக்கின்றது.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

இந்த பைக்கின் எஞ்ஜின் பற்றி பார்ப்போமேயானால் முன்னதாக மாற்றப்பட்ட அதே டீசல் எஞ்ஜின்தான் தற்போதும் காணப்படுகின்றது. இது ஓர் 325சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிடண்டர் எஞ்ஜின் ஆகும். இதனை இத்தாலி நாட்டின் கிரீவ்ஸ் லோம்போர்கினி எனும் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 6.5 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்த பைக்கின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது! நவீன தோற்றத்திற்கு மாறிய 1959 டீசல் எஞ்ஜின் ராயல் என்ஃபீல்டு...

இந்த திறனை முழுமையாக வெளிப்படுத்துவதற்காக பைக்கில் சில எடைக்குறைப்பு வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறு நீக்கப்பட்ட அம்சங்கள்தான் பாடி பேனல்கள் மற்றும் சைலென்சர் உள்ளிட்டவை ஆகும். தாற்போது பாப்பர் ஸ்டைலை வழங்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும் பல கூறுகள் சற்று எடைக்குறைந்தவை ஆகும்.

Most Read Articles

English summary
Diesel Royal Enfield Bullet Converted Into Harley Davidson Bobber. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X