டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

வெஸ்பா எலெட்ரிக்கா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஏப்ரிலியா ஆர்எஸ்660 பைக் ஆகிய புதிய மாடல்கள் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இது குறித்த பிரத்யேக தகவல் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமம் இந்தியாவில் ஏப்ரிலியா, வெஸ்பா, பியோஜியோ மற்றும் மோட்டோ குஸ்ஸி உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. மேலும், தனது பிரிமீயம் இருசக்கர வாகனங்களை மோட்டோபிளெக்ஸ் என்ற ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

இந்த நிலையில், பெங்களூரில் உள்ள மோட்டோபிளெக்ஸ் ஷோரூமில் ஏப்ரிலியா ஆர்எஸ்வி4 1100 ஃபேக்டரி என்ற மிகவும் விசேஷமான அம்சங்கள் கொண்ட சூப்பர் பைக் வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது டிரைவ்ஸ்பார்க் தளத்திடம் பேசிய ஏப்ரிலியா அதிகாரிகள், வெஸ்பா எலெட்ரிக்கா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும், ஏப்ரிலியா ஆர்எஸ்660 பைக் இந்திய வருகை குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டனர்.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

அதாவது, இந்த இரண்டு புதிய மாடல்களும் அடுத்த 2 மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவித்தனர். முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் வெஸ்பா எலெட்ரிக்கா என்ற இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. வெஸ்பா நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சி தந்தது. வட்ட வடிவ ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள், பழைமையை பரைசாற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றுடன் கவர்ந்தது.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரில் 4kW பிரஷ்லெஸ் மின் மோட்டாரும், 4.2kWh திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரியும் உள்ளன. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணிநேரம் வரை பிடிக்கும்.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த ஸ்கூட்டரில் ஈக்கோ மற்றும் பவர் ஆகிய இரண்டு டிரைவிங் மோடுகள் உள்ளன. இந்தியாவில் ஃபாஸ்ட் சார்ஜர் வசதியையும் வெஸ்பா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

இந்த ஸ்கூட்டரில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. உரிமையாளர்கள் இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்படும் பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக ஸ்கூட்டரின் இயக்கம், பேட்டரியில் சார்ஜ் அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

புதிய வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரின் முன்சக்கரத்தில் 200 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 140 மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும். முன்புறத்தில் 12 அங்குல அலாய் வீலும், பின்புறத்தில் 11 அங்குல அலாய் வீலும் உள்ளன. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

அடுத்து ஏப்ரிலியா ஆர்எஸ்660 பைக்கும் இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. முழுமையான ஃபேரிங் பேனல்களுடன் இந்த பைக் மிக முரட்டுத் தனமான தோற்றத்துடன் காட்சி தருகிறது.

டிரைவ்ஸ்பார்க் எக்ஸ்க்ளூசிவ்: வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டர் இந்திய அறிமுக விபரம்!

புதிய ஏப்ரிலியா ஆர்எஸ்660 பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த பைக்கிலும் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

Most Read Articles

மேலும்... #வெஸ்பா #vespa
English summary
Vespa Electric and Aprilia RS660 are expected to arrive in India by June. Both models will come as Completely Built Units (CBU). We expect a hefty price tag as both models will be exported from the brand's factory in Italy.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X