டுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி சூப்பர் கார் நிறுவனமும், டுகாட்டி சூப்பர் பைக் நிறுவனமும் இணைந்து புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்களை வெளியிட்டுள்ளன. இந்த சூப்பர் கார் மற்றும் சூப்பர் பைக் ஆகிய இரண்டிற்கும் நெருங்கிய பிணைப்பையும், ஒற்றுமையும் இருக்கும் வகையில் விசேஷ அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

டுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

லம்போர்கினி சியன் எஃப்கேபி 37 என்ற ஹைப்ரிட் சூப்பர் காரும், சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட புதிய டுகாட்டி டயாவெல் 1260 பைக்கிற்கும் நெருங்கிய பிணைப்பு இருக்கும் வகையில் சிறப்பு பதிப்பு மாடல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இரு நிறுவனங்களின் டிசைன் நிபுணர்கள் இணைந்து இந்த சிறப்பு பதிப்பு மாடல்களை வடிவமைத்துள்ளனர்.

டுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

லம்போர்கினி சியன் எஃப்கேபி 37 சூப்பர் காருக்கும், டுகாட்டி டயாவெல் 1260 பைக்கின் சிறப்பு பதிப்பு மாடலுக்கும் மிலிட்டரி பச்சை வண்ணத் தேர்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மிகவும் தனித்துவமான அழகை வழங்குகிறது.

டுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

அதேபோன்று, சக்கரங்களில் தங்க வண்ணப் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிரேம்போ காலிபர்கள் சிவப்பு வண்ணத்தில் வசீகரிக்கின்றன. ஃப்ரேம் அமைப்பில் கூட தங்க வண்ணப் பூச்சுதான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லம்போர்கினி சியன் எஃப்கேபி 37 காரை பிரதிபலிக்கும் வகையில் ரேடியேட்டர் கவர், எரிபொருள் டேங்க் கவர், மட்கார்டுகள், மஃப்லர் மற்றும் சீட் கவர் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

லம்போர்கினி நிறுவனத்தை கவுரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த பைக்கில், லம்போர்கினி ஸ்தாபிக்கப்பட்ட வருடத்தை குறிப்பிடும் வையில் 63 எண் செமி ஃபேரிங் பேனலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மறுபுறத்தில் டுகாட்டி டாயவெல் 1260 பைக்கின் டிசைன் அம்சங்களை பிரதிபலிக்கும் விதத்தில் சில அம்சங்கள் லம்போர்கினி சியன் எஃப்கேபி 37 காரில் இடம்பெற்றுள்ளது.

டுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

லம்போர்கினி சியன் எஃப்கேபி 37 சிறப்புப் பதிப்பு மாடலானது மொத்தம் 63 யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்படும். அதேபோன்று, இந்த சிறப்புப் பதிப்பு டுகாட்டி டயாவெல் 1260 பைக் மொத்தம் 630 (பத்து மடங்கு கூடுதல்) யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லம்போர்கினி ஸ்தாபிக்கப்பட்ட வருடத்தை நினைவுகூறும் வகையில் இந்த எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

டுகாட்டி டயாவெல் 1260 பைக்கில் 1262 சிசி எல் ட்வின் டெஸ்ட்டாட்ரெட்டா டிவிடி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. யூரோ-5 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான இந்த எஞ்சின் அதிகபட்சமாக 162 பிஎச்பி பவரையும், 129 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஏராளமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

சாதாரண டுகாட்டி டயாவெல் 1260 பைக் ரூ.8.64 லட்சம் என்ற விலை மதிப்பில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த சிறப்புப் பதிப்பு டுகாட்டி டயாவெல் 1260 பைக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ.23 லட்சம் விலை மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு கூடுதலாக சிறப்புப் பதிப்பு ஹெல்மெட்டும் விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது.

டுகாட்டி டயாவெல் 1260 லம்போர்கினி ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

லம்போர்கினி அவென்டேடார் காரின் அடிப்படையிலான ஹைப்ரிட் சூப்பர் கார் மாடலாக லம்போர்கினி எஃப்கேபி 37 கார் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த கார் மாடலானது லம்போர்கினி கார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தலைவர் ஃபெர்டினான்ட் பீச்சை கவுரவப்படுத்தும் வகையில், அவரது இனிஷியல்களுடன் பெயரிடப்பட்டுள்ளது. அவர் பிறந்த 1937 வருடத்தை குறிக்கும் வகையில் 37 என்ற எண் பெயரில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati has unveiled the 2021 Diavel 1260 line-up globally. As reported earlier, the company has added a new limited-edition model called the Ducati Diavel 1260 Lamborghini. The Diavel 1260 Lamborghini power cruiser is limited to just 630 units for the world.
Story first published: Friday, November 27, 2020, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X