டுகாட்டியின் புதிய 1100சிசி பைக்... இந்திய ஷோரூம்களை வந்தடைந்தது...

டுகாட்டி நிறுவனம் புதியதாக இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஸ்க்ராம்ப்ளர் 1100 ப்ரோ பைக் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இது தொடர்பாக பைக்வாலே செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டியின் புதிய 1100சிசி பைக்... இந்திய ஷோரூம்களை வந்தடைந்தது...

இத்தாலி நாட்டை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்க்ராம்ப்ளர் 1100 ப்ரோ பைக்கை அதன் ஸ்போர்ட் எடிசன் உடன் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.11.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டுகாட்டியின் புதிய 1100சிசி பைக்... இந்திய ஷோரூம்களை வந்தடைந்தது...

அதேநேரம் இதன் ஸ்போர்ட் எடிசன் சற்று ப்ரீமியமாக ரூ.13.74 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றுள்ளது. ஸ்டைலிங் பாகங்களை பொறுத்தவரையில் இந்த இரு ஸ்க்ராம்ப்ளர் 1100 வேரியண்ட்களும் ஒரே மாதிரியான பாகங்களையே பெற்று வந்துள்ளன.

டுகாட்டியின் புதிய 1100சிசி பைக்... இந்திய ஷோரூம்களை வந்தடைந்தது...

முழு-எல்இடி ஹெட்லேம்ப், சமச்சீரற்ற முறையில் பொருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இரட்டை எக்ஸாஸ்ட்கள் உள்ளிட்டவை இவை இரண்டிலும் பொதுவாக உள்ள பாகங்களில் அடங்குகின்றன. ஸ்க்ராம்ப்ளர் 1100 ப்ரோ, ஓசன் ட்ரைவ் நிறத்தில் வழங்கப்படுகிறது.

டுகாட்டியின் புதிய 1100சிசி பைக்... இந்திய ஷோரூம்களை வந்தடைந்தது...

1100 ப்ரோ ஸ்போர்ட் பைக்கானது மேட் ப்ளாக் பெயிண்ட் என்ற நிறத்தில் கிடைக்கிறது. ஸ்போர்ட் எடிசன் சிறப்பம்சங்களாக தாழ்வான ஹேண்டில்பார்கள், பார்களுக்கு இறுதியில் கண்ணாடிகள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கைகள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

டுகாட்டியின் புதிய 1100சிசி பைக்... இந்திய ஷோரூம்களை வந்தடைந்தது...

இவை மட்டுமின்றி ஸ்க்ராம்ப்ளர் 1100 ப்ரோ எடிசன் ஆனது மற்ற இயந்திர பாகங்களையும் ப்ரீமியம் தரத்தில் பெற்றுள்ளது. குறிப்பாக சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் மார்சோச்சி ஃபோர்க்குகளையும், பின்பக்கத்தில் கயாபா மோனோ-ஷாக்க்கும் பொருத்தப்பட்டுள்ளன.

டுகாட்டியின் புதிய 1100சிசி பைக்... இந்திய ஷோரூம்களை வந்தடைந்தது...

ஆனால் ஸ்போர்ட் அல்லாத 1100 ப்ரோ பைக்கில் இரு பக்கங்களிலும் ஹோலின்ஸ் சஸ்பென்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை இரண்டிலும் ப்ரேக்கிங் பணியினை ப்ரெம்போ மோனோப்ளாக் காலிபர்கள் கவனிக்கின்றன.

டுகாட்டியின் புதிய 1100சிசி பைக்... இந்திய ஷோரூம்களை வந்தடைந்தது...

இவற்றின் எலக்ட்ரானிக் ரைடர் தொகுப்பில் ரைட்-பை-வயர் த்ரோட்டல், மூன்று ரைடிங் மோட்கள், போஸ்ச் கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் டுகாட்டி ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த இரு பைக்குகளிலும் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1100சிசி, எல்-ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டுகாட்டியின் புதிய 1100சிசி பைக்... இந்திய ஷோரூம்களை வந்தடைந்தது...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 86 பிஎச்பி பவரையும், 4,750 ஆர்பிஎம்-ல் 88 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ப்ரோ பைக் தற்போது ஷோரூம்களை சென்றடைய துவங்கியிருப்பதால் இவற்றின் டெலிவிரி பணிகள் மிக விரைவில் துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Scrambler 1100 Pro reaches dealership
Story first published: Saturday, October 3, 2020, 12:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X