Just In
- 7 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 9 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 10 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
குடியரசு தின சம்பவத்தால்.. பட்ஜெட் நாளில் நாடாளுமன்றம் நோக்கி நடத்தவிருந்த விவசாயிகள் பேரணி ரத்து
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 டுகாட்டி எக்ஸ்டியாவெல் பைக்கில் டார்க் & ப்ளாக் ஸ்டார் வேரியண்ட்கள்- இந்தியாவிற்கு வருமா?
யூரோ-5க்கு இணக்கமான 2021 எக்ஸ்டியாவெல் பைக்கை டுகாட்டி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்சமயம் சர்வதேச சந்தையில் உள்ள டுகாட்டி எக்ஸ்டியாவெல் பைக் உடன் அதன் 2021 வெர்சனும் சேர்ந்து அடுத்த ஆண்டில் விற்பனை செய்யப்படவுள்ளது. அதாவது இவை இரண்டும் 2021 எக்ஸ்டியாவெல் டார்க் மற்றும் கருப்பு நட்சத்திரம் என்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளன.

இதில் எக்ஸ்டியாவெல் டார்க் என்ற பெயரில் தற்போதைய எக்ஸ்டியாவெல் பைக் தான் கொண்டுவரப்படவுள்ளது. ஆரம்ப நிலை வேரியண்டாக, கீழே அகற்றப்பட்ட வெர்சனாக இந்த பைக் மேட் கருப்பு நிறத்தில், எந்தவொரு க்ரோம் பிட்களும் இல்லாமல் வழங்கப்படவுள்ளது.

இதன் காரணமாக சக்கரத்தில் இருந்து ஃப்ரேம், ஃபோர்க்குகள் வரையில் அனைத்தும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும். எக்ஸ்டியாவெல் எஸ் வெர்சனில் வழங்கப்படும் மெஷின்டு சக்கரங்கள் மற்றும் டுகாட்டி மல்டிமீடியா சிஸ்டம் போன்றவற்றை எக்ஸ்டியாவெல் டார்க் வேரியண்ட் இழந்துள்ளது.

அதேபோல் எஸ் வெர்சனில் வழங்கப்படும் எம்50 ப்ரேக்குகளுக்கு பதிலாக இந்த ஆரம்ப நிலை வேரியண்ட்டில் ப்ரெம்போ எம்4.32 காலிபர்கள் தான் பொருத்தப்பட்டுள்ளன. மொத்த கெர்ப் எடை 247 கிலோவாக கொண்டுவரப்பட்டுள்ளது. இது எக்ஸ்டியாவெல் எஸ் வெர்சனை காட்டிலும் 2 கிலோ குறைவாகும்.

டுகாட்டின் எக்ஸ்டியாவெல் கருப்பு நட்சத்திரம், இந்த பைக் மாடலின் டாப் வேரியண்ட்டாக மாறவுள்ளது. இதனை பற்றி தற்போது டுகாட்டி வெளியிட்டுள்ள தகவல்களில், இந்த 2021 பைக் ஸ்போர்ட்ஸ் கார்களின் க்ரே மற்றும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிலிண்டர் ஹெட் கவர்களில் உள்ளிட்ட சில இடங்களில் சிவப்பு நிறம் பளிச்சிடுகிறது.

மெல்லிய துணியினால் ஆன இருக்கை, ஃபோர்க்டு & மெஷின்டு அலாய் சக்கரங்கள் மற்றும் ப்ரெம்போ எ50 காலிபர்கள் உள்ளிட்டவை எக்ஸ்டியாவெல் ப்ளாக் ஸ்டார் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாகும். இதன் எடையும் 247 கிலோ தான்.

2021 டுகாட்டி எக்ஸ்டியாவெல்-இன் அனைத்து வெர்சன்களும், போஸ்ச் நிலைமாற்ற அளவீட்டு அலகு, போஸ்ச்- ப்ரெம்போ ஏபிஎஸ் 9.1 எம்பி கார்னரிங் ப்ரேக்கிங் சிஸ்டம், ட்ராக்ஷன் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், எல்இடி லைட்டிங் மற்றும் 3.5 இன்ச் டிஎஃப்டி திரை உள்ளிட்டவற்றை பெற்றுள்ளன.

அதேநேரம் ப்ளாக் ஸ்டார் மற்றும் எஸ் வேரியண்ட்கள் மட்டும் டைமண்ட் போன்ற கோட்டிங் உடன் ஃபோர்குகள் மற்றும் ப்ளூடூத் உடன் இணைக்கக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவையை ஏற்றுள்ளன. இவற்றுடன் 2021 எக்ஸ்டியாவெல் வெர்சன்களின் என்ஜின் அமைப்பிலும் அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதாவது இவற்றில் பொருத்தப்படும் டெஸ்டாஸ்ரெட்டா டிவிடி 1,262சிசி, L-ட்வின் என்ஜின் யூரோ-5க்கு இணக்கமாக அப்கிரேட் செய்யப்பட்டது மட்டுமில்லாமல் இது வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலும் 8 பிஎச்பி மற்றும் 2 என்எம் அதிகரிக்கப்பட்டு 9500 ஆர்பிஎம்-ல் 158 பிஎச்பி மற்றும் 5000 ஆர்பிஎம்-ல் 130 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படவுள்ளது.

பைக்கில் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தின் வடிவம், டுகாட்டி டியாவெல் 1260 பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இந்தியாவிற்கு 2021 எக்ஸ்டியாவெல் ரேஞ்ச் பைக்குகளை கொண்டுவருவது குறித்து டுகாட்டி நிறுவனத்தின் சார்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் இந்த மூன்று வேரியண்ட்களும் 2021ன் முதல் பாதியில் நமது சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கிறோம்.